Tamilnewyear Meenam,Nanthana Tamil New Year Predictions ஜோதிடம் , ராசி பலன் , தினபலன் , வார பலன் , ஆண்டு பலன் 2010 , ஆணடுபலன் 2011, "கர" வருட தமிழ் ஆண்டுபலன் , குருபெயர்ச்சி பலன் , சனி பெயர்ச்சி பலன் , ராகு கேது பெயர்ச்சி பலன் , வாஸ்து , நியூமராலஜி , எண்கணிதம் , Jothidam , Astrology , Vasthu , Neumerology , Rasi Balan 2010,Rasi Balan 2011 Balan, Weekly Raasi Balan, Guru Balan , Sani Balan , Dai Tamil News | தமிழ் செய்திகள் | Tamilkurinji
tamilkurinji logo
 


ஜோதிடம் >>> தமிழ்ப் புத்தாண்டுபலன்கள் - Tamil new year

23024

Meenam

Friday , 6th April 2012 04:35:15 AM

மீனம்

பூரட்டாதி 4-ம் பாதம், உத்ரட்டாதி, ரேவதி முடிய

எல்லோருக்கும் உதவி செய்யும் குணமும் ஒன்றுக்கு நான்கு முறை யோசிக்கும் திறன் பெற்ற மீன ராசி நேயர்களே!

அதிகாரிகள் மாறினாலும் தங்கள் வேலையில் பதவி உயர்வு இல்லையே என்று குறைப்பட்டுக் கொள்ள வேண்டாம். ஆண்டின் ஆரம்பம் பதவி உயர்வும் அயல் ஊர் சென்று இருத்தலும் என்று ஆரம்பிக்கிறது. பெண்ணின் திருமணச் செலவுகளுக்கு எதிர்பார்த்த தொகை கிடைத்துவிடும்.   1.12.2012க்கு பிறகு குடும்பக் கசப்புகள் தோன்றாமல்  கவனம் செய்வது நல்லது.

உங்களுக்கு இந்தப் புத்தாண்டு எப்படியிருக்கும் என்பதைப் பற்றி பார்ப்போம்.

ஆண்டின் தொடக்கத்தில் உங்கள் ராசியை வக்ரச் சனி பார்க்கிறார். செவ்வாய், சூரியன் பரிவர்த்தனையில் இருக்கிறார்கள். எனவே காரியங்கள் கடைசி நேரத்திலேயே கைகூடக் கூடிய வாய்ப்பு உண்டு. பொருளாதாரம் போதுமானதாக இருந்தாலும், விரயங்கள் அதிகரிக் கும். இன்று ஒரு ஊர், நாளை ஒரு ஊர் என்று பயணித்துக் கொண்டேயிருப்பீர்கள். கேது பலத்தால் சகோதர சச்சரவுகள் மேலோங்கும். பொதுவாகவே இந்த ஆண்டில் மீண்டும் அஷ்டமத்துச் சனியின் ஆதிக்கம் வரப்போவதால், கூடுதல் கவனம் தேவை.

நவக்கிரகங்களின் நல்ல பலனைக் கொடுப்பவர் குரு பகவான். அவர் உங்கள் ராசிக்கு மூன்றாமிடத்தில் சஞ்சரிக்கப் போகிறார். மூன்றாமிடம் சகாய ஸ்தானமாகும் ராசி நாதனாகவும், பத்துக்கு அதிபதியாகவும் விளங்கும் குரு பகவான் சகாய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் பொழுது, நல்ல பலன்களை அள்ளி வழங்குவார். குறிப்பாக, தொழில் வளர்ச்சி மேலோங்கும்.

`மன்னவன் மூன்றில் நிற்க, மாபெரும் மாற்றம் தோன்றும், எண்ணிய காரியங்கள், எல்லாமே வெற்றி பெறும்' என்கிறது ஜோதிட சாஸ்திரம்.

நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலும் வெற்றிக்குரியதாக இருக்கும். உதாசீனப்படுத்தியவர் கள் உங்களோடு வந்திணைவர். சகோதர வழி சச்சரவுகள் மாறும். இருப்பினும், குரு ப்ரீதியும், திசை மாறிய தென்முகக் கடவுள் வழிபாடும் உங்கள் வாழ்க்கையை முன் நோக்கிச் செல்ல வைக்கும்.

மூன்றில் சஞ்சரிக்கும் குருவின் பார்வை 7, 9, 11 ஆகிய இடங்களில் பதிவாகிறது. அதன் பார்வை பதியும் இடமெல்லாம் புனிதமாகின்றன. எனவே, உங்கள் கல்யாண கனவுகள் நனவாகும். காரிய வெற்றிக்கு நண்பர்கள் கைகொடுத்து உதவுவர்.

தந்தை வழி உறவில் வைத்த பஞ்சாயத்துக்கள் நல்ல முடிவிற்கு வரும். தானே முன்நின்று சில விழாக்களை நடத்திப் பார்ப்பீர்கள். பிரிந்த தம்பதியர் ஒன்று சேருவர்.

லாப ஸ்தானத்தில் குருவின் பார்வை பதிவதால், நீங்கள் என்ன தொழில் செய்தாலும் அதில் ஏற்றம் கிட்டும். அரசு வழிச் சலுகைகள் கிடைக்கும். வருடக் கடைசியில் சேமிப்பும் உயர்ந்து செல்வந்தர்களின் பட்டியலில் இடம் பெறும் வாய்ப்பும் உருவாகலாம். பிள்ளைகளுக்காக தங்கம், வெள்ளி போன்றவற்றை வாங்கிச் சேர்க்க முன் வருவீர்கள்.

ஆனி 9-ம் தேதி முதல் ஆடி 29-ம் தேதி வைர உங்கள் ராசிக்கு 12-ல் செவ்வாயும், சனியும் ஒன்று கூடுகிறார்கள். இது அவ்வளவு நல்லதல்ல. குடும்பப் பிரச்சினைகள் தலைதூக்கலாம். கோபத்தைக் குறைத்துக் கொண்டு செயல்படுவது நல்லது. நோயில் இருந்து விடுதலை கிடைத்தாலும் பழைய உடல்நிலையை பெற இயலாது. யோசித்துக் கையெழுத்திடுவது நல்லது. மனக்குழப்பம் அதிகரிக்கும்.

இக்காலம் பொற்காலமாக இருபத்து நான்கு மணி நேரத்தில் ஏதாவது ஒரு அரை மணி நேரமாவது வழிபாட்டிற்கென்று ஒதுக்க வேண்டும். கந்தன் வழிபாடும் மந்தன் வழிபாடும் உங்கள் துயரங்களைப் போக்கும்.

ஆவணி 27-ம் தேதி முதல் உங்கள் ராசிக்கு 8-ல் சனி உலா வரப்போகிறார். அஷ்டமத்துச் சனி கஷ்டப்படுத்துமே என்று நீங்கள் நினைக்க வேண்டாம். அடுக்கடுக் காகச் சுப காரியங்களைச் செய்ய வைக்கும். அந்நிய தேசப்பயணங்கள் எண்ணியபடி கைகூடும்.

மாற்று இனத்தவர்கள் உங்கள் மகத்தான பணிக்கு ஒத்துழைப்புச் செய்ய முன் வருவர். கரைந்த சேமிப்புகளை மீண்டும் ஈடு செய்வீர்கள். அலுவலகப் பணியில் இருப்பவர் களுக்கும், அரசியல்வாதிகளுக்கும் பொறுப்புகள் மாறும்.

புரட்டாசி 26-ம் தேதி முதல் தை 24-ம் தேதி வரை ரிஷபத்தில் சஞ்சரிக்கும் குரு வக்ரம் பெறுகிறார். உங்கள் ராசியைப் பொறுத்த வரை ராசிநாதனாகவும், 10-க்கு அதிபதியாகவும் விளங்கும் குரு வக்ரம் பெறுவது ஒருவழிக்கு நன்மை தான் என்றாலும், ராசி நாதன் என்பதால் உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி அச்சுறுத்தல் ஏற்படும்.

மேலதிகாரிகளின் அனுசரிப்புக் குறையும். திடீர் இடமாற்றம், இலாகா மாற்றம் திகைக்க வைக்கும். வாயில் தேடி வந்த வரன்கள் விட்டுப் போகலாம். எனவே இக்காலத்தில் குரு வழிபாட்டை முறையாகச் செய்வதோடு, யோகபலம் பெற்ற நாளில் வைரவர் வழிபாட்டையும் மேற்கொள்வது நல்லது.

கார்த்திகை 17-ம் தேதி 2-ல் கேதுவும், 8-ல் ராகுவும் சஞ்சரிக்கப் போகிறார்கள். இந்த அஷ்டமத்து ராசி அலைச்சலைக் கொடுத்தாலும் ஆதாயத்தையும் சேர்த்து கொடுக்கும். பிற இனத்தாரின் ஒத்துழைப்போடு புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள். 2-ல் கேது இருப்பதால் யாருக்கும் வாக்கு கொடுக்கும் முன் ஒரு கனம் யோசிப்பது நல்லது.

சர்ப்ப சாந்தி ஹோமங்களைச் செய்தால் அரவு கிரகங்கள் அற்புதப் பலன் தரும்.

சித்திரை 1-ம் தேதி முதல் ஆனி 6-ம் தேதி வரை பிறகு மாசி 4-ம் தேதி முதல் பங்குனி 31-ம் தேதி வரை சனி வக்ர இயக்கத்தில் இருக்கிறார். உங்கள் ராசி அடிப்படையில் 11, 12 ஆகிய இடங்களுக்கு சனி அதிபதியாக விளங்குகிறார். 12-க்கு அதிபதி வக்ரம் பெறுவது நன்மைதான். `கெட்டவன் கெட்டிடின் கிட்டிடும் ராஜ யோகம்' என்பதற்கேற்ப நல்ல பலன்கள் நடைபெறும். பதவி உயர்வு, இடமாற்றம், எதிர்பார்த்தபடி வந்து சேரும். அதிகாரிகளின் அன்பும், அரவணைப்பும் கூடும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் கூடும்.

வங்கிக் கடன்களைக் கொடுத்து நிம்மதி பெருமூச்சு விடுவீர்கள். லாபாதிபதியாகவும் சனி விளங்குவதால், அதன் வக்ர காலத்தில் பெரிய முதலீடுகள் செய்ய வேண்டாம். வட்டி கட்டும் சூழ்நிலையை உருவாக்கி விடும். கமிஷன் அடிப்படைத் தொழில் புரிவோர் உடனுக்குடன் வரவு செலவுகளைப் பார்த்துக் கொள்வது நல்லது.

மாணவர்களுக்கு:

படிப்பு விஷயமான அகாடமியில் முதன்மை பெற்று, மேற்படிப்புகளுக்கு அரசின் உதவியுடன் நல்ல அங்கீகாரமும் பெற்றுத் தரும் வருடமாக ஆரம்பிக்கிறது. 16.5.2012க்கு பிறகு வெவ்வேறு இடங்களுக்கு அதிகம் படிப்பு விஷயமாக பயணம் செய்ய வேண்டியிருக்கும். இந்த நேரத்தில் தந்தையின் உடல்நிலை பாதிக்க நேரும். உடலில் சூட்டுக் கட்டிகள் தோன்றக் கூடும். கல்லூரி விடுதியில் அட்டண்டர்களால் தொல்லை ஏற்படும். 22.6.2012 முதல் 12.8.2012 வரை எல்லா விஷயங்களிலும் ஒதுங்கி இருந்து படிப்பை மட்டுமே கவனிப்பது நல்லது. எது செய்தாலும் பாதகமாக மாறி தங்கள் படிப்பை தடைசெய்து விடும்; எச்சரிக்கை. 2.3.2013க்கு பிறகு குடும்பத்தாருடன் இருந்து படிப்பது வெற்றிக்கு வழி கோலும்.

பெண்களுக்கு:

சுற்றத்தாரின் திருமணச் செலவுகளுடன் வருடம் துவங்குகிறது. வீட்டிற்கு நவீன கருவிகள் ஆரம்பத்திலேயே கிடைக்கும். 14.5.2012 வரை வாக்கு வன்மையால் அனைத்திலும் வெற்றி கிட்டும். அலுவலகப் பெண்கள் வழக்குகளில் வெற்றி பெறுவார்கள். 30.5.2012 முதல் 19.6.2012 மற்றும் 10.7.2012 முதல் 1.8.2012 வரையான காலங்களில் கிணறு உள்ள மனையும் வீடு கட்டும் அமைப்பும் செயலாக்கம் பெறும். 11.9.2012க்குள் தாய் வழிப் பாட்டியின் உடல்நிலை பாதிக்கும். 11.9.2012க்கு பிறகு பொருளாதார நிலை தேக்கமடையும். 18.11.2012 முதல் 10.12.2012 வரை சகோதரர் உதவியும் வெளிநாட்டுப் பெண்களின் நட்பால் ஆதாயமும் உண்டு. இப்பொழுது பணத்தை யாரிடமும் தராமல் உங்கள் பொறுப்பிலேயே வைத்திருங்கள். 28.1.2013 வரை நீங்கள் காட்டும் எச்சரிக்கை இந்த ஆண்டு உங்களை சிறப்பாக வைத்திருக்கும்.    

வியாபாரிகளுக்கு:

உற்சாகம், ஆர்வம் ஆகிய சிறப்பம்சங்களோடு இந்த ஆண்டு துவங்குகிறது. 20.6.2012 முதல் 30.8.2012 வரையான காலகட்டத்தில் டிரான்ஸ்போர்ட், எலக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர் போன்ற எந்த வியாபாரங்களையும் தொடங்கி நடத்தலாம். அவை நல்லவிதமாக நீண்ட காலத்திற்கு நடந்து பெரும் லாபத்தை தரும். 14.1.2013 முதல் 26.1.2013 வரையான காலகட்டம் முன்னேற்றத்திற்கான நல்ல சந்தர்ப்பம் ஒன்று வரும். அதைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். 14.3.2013க்கு பிறகு அந்நிய மனிதர்களால் தொல்லை வரும். வரி விஷயங்களில் எச்சரிக்கை தேவை.

உத்யோகஸ்தர்களுக்கு:

16.5.2012க்குள் பெரிய நிறுவனங்களில் வேலை கிடைக்கும். நல்ல சம்பளமும் கிடைக்கும். 28.9.2012லிருந்து 22.10.2012 வரை தங்களின் சௌகரியத்தை மட்டுமே பேசுவதால் குடும்பத்தில் விரோதம் ஏற்படும். மனைவியை விட்டு வெளியூர்களில் சஞ்சரிக்க நேரிடும். இதனால் அலுவல் பாதிப்பு வரலாம். 18.11.2012 முதல் 10.12.2012 வரையான காலத்தில் பிறர் வீட்டில் வசிப்பது, சாப்பிடுவது போன்ற நிலை வரும். இதே காலத்தில் அலுவலகத்தில் பதவி உயர்வு ஏற்படும் வாய்ப்பும் கிட்டும். 13.3.2013 முதல் 10.4.2013 வரையான காலகட்டத்தில்
சிவபூஜையின் பலத்தினால் குடும்ப விஷயங்கள் சீராகும்.  கடன் பிரச்னை தீரும். அலுவலகத்தில் அந்தஸ்து உயரும்.

அரசியல்வாதிகளுக்கு:    

14.5.2012 லிருந்து எல்லோரிடமும் கோபமாகப் பேசுவது, விவாதம் செய்வது என்று தங்கள் மனம் ஒரு நிலையில் இல்லாமல் இருக்கும். கட்சிக்கு சொந்த காசை செலவிட்டு பிறரை குறை சொல்லும் நிலை தோன்றலாம். 11.9.2012 முதல் 25.9.2012 வரையான காலத்தில் தங்களின் முயற்சிகள் ஆரம்பத்திலேயே எதிர்ப்பை சந்திக்கும். 16.10.2012 வரை கட்டிப்போட்டது போல் இருக்கும். 16.12.2012க்கு பிறகு அந்தஸ்து அதிகரிக்கும். தலைமையின் கவனம் தங்கள் மேல் விழும். செல்வாக்கும் உயரும். 14.1.2013க்கு பிறகு தங்கள் மேல் வெளிப்பட்ட புகார்கள், வழக்குகள் அனைத்திலும் தங்களுக்கே வெற்றி கிட்டும். பெருமாள் தரிசனம் நன்மை தரும்.

எச்சரிக்கை:

23.8.2012 முதல் 8.9.2012 வரையான காலத்தில் வியாபார ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் போது கவனமுடன் நன்கு படித்து திருப்தியடைந்த பின்னரே ஒப்பமிட வேண்டும். 22.6.2012 முதல் 12.8.2012 வரை தெரு விவகாரங்களில் ஒதுங்கி இருக்க வேண்டும். 11.9.2012 முதல் 25.9.2012 வரை கர்ப்பிணிகள் வெளியிடங்களுக்கு செல்லாமல் கவனமாக இருக்க வேண்டும். 28.9.2012 முதல் 22.10.2012 வரை பேச்சுக்களால் பெரிய விரோதம் ஏற்படும்.

அச்சாரங்கள்:

28.7.2012 முதல் 30.8.2012 வரையான காலத்தில் அனைத்து விதமான புதிய தொழில்களும் துவங்க நல்லது. 14.1.2013 முதல் 26.1.2013 வரை தொழிலில் விரிவாக்கம் செய்ய நன்று. 22.2.2013 முதல் 13.3.2013 வரையான காலம் இந்த ராசிப் பெண்கள் பெயரில் தொழில் துவங்கலாம்.

பரிகாரம்:

சிவாலயங்களில் உள்ள துர்க்கை தரிசனம், கடற்கரை ஓரமுள்ள மகான்களின் ஜீவ சமாதி தரிசனம், ஆதித்ய ஹ்ருதயம் சொல்லுதல் கேட்டல் போன்றவை இந்த ஆண்டு நன்மையைத் தரும்.


  Tags : Nanthana, ,Tamil, ,New, ,Year, ,Predictions, , , நந்தன, ,வருட, ,தமிழ்ப், ,புத்தாண்டு, ,பலன்கள் ,Meenam,Nanthana,Tamil,New,Year,Predictions

























மகளிர்


Tamil Web Tv




பிற ராசிகளுக்கான பலன்கள்




திருமதி சுஜா என் காதலி தமிழ் சினிமா திருமதி சுஜா என் காதலி தமிழ் சினிமா திருமதி சுஜா என் காதலி தமிழ் சினிமா திருமதி சுஜா என் காதலி தமிழ் சினிமா திருமதி சுஜா என் காதலி தமிழ் சினிமா திருமதி சுஜா என் காதலி தமிழ் சினிமா
செளந்தர்யா Full Length Tamil Movie தேன் குழல் முறுக்கு இறா மாங்காய் தொக்கு மீன் பிரியாணி Chicken Green Chilli Fry Cabbage and Paneer Roll
Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in