tamilkurinji logo
 

தமிழ் அர்ச்சனைகள்,


தமிழ் அர்ச்சனைகள்

First Published : Tuesday , 11th August 2009 07:19:21 PM
Last Updated : Wednesday , 31st December 1969 05:00:00 PM







அருள்மிகு சிவபெருமான் போற்றி

திருச்சிற்றம்பலம்

(நட்சத்திரம்) ............................ நாள்சேர்
(பெயர்)...................................பெயர்க்காக

செய்யும் இவ்வருச்சனை சேர்ந்த துதியை
ஐயனே ஏற்று அருள்க ! அருள்கவே !!

ஓம் கற்றவர்கள் உண்ணும் கனியே போற்றி
" கழல் அடைந்தார் செல்லுங் கதியே போற்றி
" அற்றவர்கட்கு ஆரமுதம் ஆனாய் போற்றி
" அல்லலறுத்து அடியேனை ஆண்டாய் போற்றி
" மற்றொருவர் ஒப்பில்லா மைந்தா போற்றி
" வானவர்கள் போற்றும் மருந்தே போற்றி
" செற்றவர்தம் புரமெரித்த சிவனே போற்றி
" திருமூலட் டானனே போற்றி போற்றி 1(9)

ஓம் வங்கமலி கடல்நஞ்சம் உண்டாய் போற்றி
" மதயானை ஈர்உரிவை போர்த்தாய் போற்றி
" கொங்கலரும் நறுங்கொன்றைத் தாராய் போற்றி
" கொல்புலித்தோல் ஆடைக் குழகா போற்றி
" அங்கணணே அமரர்கள்தம் இறைவா போற்றி
" ஆலமர நீழல்அறஞ் சொன்னாய் போற்றி
" செங்கனகத் தனிக்குன்றே சிவனே போற்றி
" திருமூலட் டானனே போற்றி போற்றி 2(18)

ஓம் மலையான் மடந்தை மணாளா போற்றி
" மழவிடையாய் என்நெஞ்சில் நின்றாய் போற்றி
" நெற்றிமேல் ஒற்றைக்கண் உடையாய் போற்றி
" இலையார்ந்த மூவிலைவேல் ஏந்தீ போற்றி
" ஏழ்கடலும் ஏழ்பொழிலும் ஆனாய் போற்றி
" சிலையால் அன்று எயில்எரித்த சிவனே போற்றி
" திருமூலட் டானனே போற்றி போற்றி 3 (28)

ஓம் பொன்னியலும் மேனியனே போற்றி போற்றி
" பூதப் படையுடையாய் போற்றி போற்றி
" மன்னியசீர் மறைநான்கும் ஆனாய் போற்றி
" மறயேந்து கையானே போற்றி போற்றி
" உன்னும் அவர்க்கு உண்மையனே போற்றி போற்றி
" உலகுக்கு ஓருவனே போற்றி போற்றி
" சென்னிமிசை வெண்பிறையாய் போற்றி போற்றி
" திருமூலட் டானனே போற்றி போற்றி 4 (43)

ஓம் நஞ்சுடைய கண்டனே போற்றி போற்றி
" நற்றவனே நின்பாதம் போற்றி போற்றி
" வெஞ்சுடரோன் பல்இறுத்த வேந்தே போற்றி
" வெண்மதியங் கண்ணி விகிர்தா போற்றி
" துஞ்சிருளில் ஆடல் உகந்தாய் போற்றி
" தூநீறு மெய்க்கணிந்த சோதீ போற்றி
" செஞ்சடையாய் நின்பாதம் போற்றி போற்றி
" திருமூலட் டானனே போற்றி போற்றி 5 (55)

ஓம் சங்கரனே நின்பாதம் போற்றி போற்றி
" சதாசிவனே நின்பாதம் போற்றி போற்றி
" பொங்கரவா நின்பாதம் போற்றி போற்றி
" புண்ணியனே நின்பாதம் போற்றி போற்றி
" அங்கமலத்து அயனோடு மாலும் காணா போற்றி
" அனல்உருவா நின்பாதம் போற்றி போற்றி
" செங்கமலத் திருப்பாதம் போற்றி போற்றி
" திருமூலட் டானனே போற்றி போற்றி 6(69)

ஓம் வம்புலவு கொன்றைச் சடையாய் போற்றி
" வான்பிறையும் வாளரவும் வைத்தாய் போற்றி
" கொம்பனைய நுண்ணிடையாள் கூறா போற்றி
" குரைகழலால் கூற்றுதைத்த கோவே போற்றி
" நம்புவர்க்கு அரும்பொருளே போற்றி
" நால்வேதம் ஆறங்கம் ஆனாய் போற்றி
" செம்பொனே மரகதமே மணியே போற்றி
" திருமூலட் டானனே போற்றி போற்றி 7 (79)

ஓம் உள்ளமாய் உள்ளத்தே நின்றாய் போற்றி
" உகப்பாய் மனத்தென்றும் நீங்காய் போற்றி
" வள்ளலே போற்றி மணாளா போற்றி
" வானவர்கோன் தோள்துணித்த மைந்தா போற்றி
" மேலோர்க்கு மேலோர்க்கும் மேலாய் போற்றி
" தெள்ளுநீர்க் கங்கைச் சடையாய் போற்றி
" திருமூலட் டானனே போற்றி போற்றி 8 (89)

ஓம் பூவார்ந்த சென்னிப் புனிதா போற்றி
" புத்தேளிர் போற்றும் பொருளே போற்றி
" தேவார்ந்த தேவர்க்கும் தேவே போற்றி
" திருமாலுக்கு ஆழி அளித்தாய் போற்றி
" சாவாவே காத்தென்னை ஆண்டாய் போற்றி
" சங்கொத்த நீற்றெம் சதுரா போற்றி
" சேவார்ந்த வெல்கொடியாய் போற்றி போற்றி
" திருமூலட் டானனே போற்றி போற்றி 9 (99)

ஓம் பிரமன்தன் சிரம் அரிந்த பெரியோய் போற்றி
" பெண்உருவோடு ஆணுருவாய் நின்றாய் போற்றி
" கரநான்கும் முக்கண்ணும் உடையாய் போற்றி
" காதலிப்பார்க்கு ஆற்ற எளியாய் போற்றி
" அருமந்த தேவர்க்கு அரசே போற்றி
" சிரம்நெரித்த சேவடியாய் போற்றி போற்றி
" திருமூலட் டானனே போற்றி போற்றி 10 (108)

திருச்சிற்றம்பலம்



    Tags :    
தமிழ் அர்ச்சனைகள், தமிழ் அர்ச்சனைகள், தமிழ் அர்ச்சனைகள்,
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 கல்வியில் சிறக்க
தீயினும் தீர்க்கமானாய்திசையெட்டும் திரண்டு எழுவாய்தித்திக்கும் தேவி உன்னை சரண் அடைந்தேன் சரண் அடைந்தேன்.

மேலும்...

 சனிபகவான் ஸ்லோகம்
நீலாஞ்சன ஸமாபாஸம்ரவிபுத்ரம் யமாக் ரஜம்ச்சாயா மார்த்தாண்ட ஸம்பூதம்தம் நமாமி சனீஸ்வரம்

மேலும்...

 மந்திரம்
" அருள் பேராற்றல் கருணையினால் - இரவும் பகலும் எல்லா நேரங்களிலும் எல்லா செயல்களிலும் உறுதுணையாகவும் பாதுகாப்பாகவும் வழிநடத்துவதாகவும் அமையுமாக

மேலும்...

 தீராத வியாதிகளைத் தீர்க்கும் ம்ருத ஸஞ்ஜீவன கவசம்:
தினமும் காலையில் எழுந்ததும் இந்த கவசத்தை பாராயணம் செய்பவர்கள் இப்பிறவியில் மட்டுமின்றி மறுபிறவியிலும் மகிழ்ச்சியாக இருக்கலாம். இப்படி பலமுறை பாராயணம் செய்பவர்கள், எந்த வியாதியும் இன்றி மார்க்கண்டேயன் போல வாழ்வதோடு ‘அணிமா சித்தி’ போன்ற அஷ்ட சித்திகளையும் அடைவார்கள். தேவர்களுக்கு கிடைப்பதற்குக்கூட

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message
I exmetipenred with looking at your site with my ipod touch and the format doesnt seem to be correct. Might wanna check it out on WAP as well as it seems most cell phone layouts are not really working with your web site. February 25, 2013
By Lissa
2017-07-07 18:45:45
 

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match






























மகளிர்





















Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in