tamilkurinji logo
 

அரங்க மின்னல்கள் (நூல் விமர்சனம் – கவிஞர் இரா.ரவி),


அரங்க மின்னல்கள் (நூல் விமர்சனம் – கவிஞர் இரா.ரவி)

First Published : Thursday , 5th November 2009 05:16:54 PM
Last Updated : Wednesday , 31st December 1969 05:00:00 PM









நூல்ஆசிரியர் – கவிஞர் மயிலாடுதுறை இளையபாரதி

அட்டைப்படமே அற்புதம்.நூலை கவிபாடும் சக கவித்தோழைக்கு சமர்ப்பித்தது வித்தியாசமான சிந்தனைக்கு எடுத்துக்காட்டு.சங்கக்கவி பிரபாகரபாபு அவர்களின் அணிந்துரை முத்தாய்ப்பா உள்ளது. நூலின் சிறப்பை எடுத்து இயம்புவதாக உள்ளது.ஆசிரியர் மயிலாடுதுறை இளைய பாரதி கவியரங்களில் கைதட்டல்கள் இடையே வாசித்த வைர வரிகளை நூலாக்கி இருப்பது பாராட்டுக்குரிய பணி. என்னுரையில் மறக்காமல் உதவிய உள்ளங்கள் அனைவரின் பெயரையும் குறிப்பிட்டு நன்றியை பதிவு செய்து இருப்பது ஆசிரியரின் உயர்ந்த உள்ளத்திற்கு எடுத்துக்காட்டு 32 தலைப்புகளில் கவிதைகள். மனிதனுக்கு பற்கள் 32 இந்நூலின் கவிதை தலைப்பு.32 பல் போனால் சொல் போகும் என்பார்கள். ஆனால் இவர் சொற்களை தேர்ந்தெடுத்துத் தொகுத்து பாமாலை படைத்து பல் போன முதியவர்களும் வாசித்து மகிழும் வண்ணம் அற்புதமாக படைத்து இருக்கிறார்.கவிதை ரசிகர்களுக்கு இந்நூல் அருஞ்சுவை விருந்து என்றே சொல்லலாம். ஆசிரியரின் பெயரில் பாரதி இருப்பதால் மகாகவி பாரதியைப் போல எளிமையாகவும் இனிமையாகவும் குறிப்பாக படிக்கும் வாசகர்கள் அனைவருக்கும் புரியும் வண்ணம் படைத்து இருக்கிறார். இவரது கவிதைக்கு தெளிவுரை விளக்கவுரை தேவை இல்லை.முதல் கவிதையிலேயே இளைஞர்களுக்கு விழிப்புணர்வு விதைக்கின்றார்.

வேண்டாத செயல்பாட்டால்
திறமைகள் வீணாக்கப்படுகிறது

படிக்கும் வாசகர்கள் உள்ளத்தில் தன்னம்பிக்கை ஊட்டுகிறார்.புத்துணர்வு தருகிறார்.மூட நம்பிக்கைகளை சாடுகிறார்.

இது கலியுகம் என்பதெல்லாம் வெறும் பேச்சு
இது கணிணியுகம் என்று சொல் அது வீச்சு

இவரது வரிகளில் எதுகை மோனை இயைபு மட்டுமல்ல கருத்துக்களும் சிறப்பாக உள்ளது. சிற்பி சிலை செதுக்கும் நுட்பத்தைப் போல சொற்களைச் செதுக்கி கவிதை சிலை வடித்து இருக்கிறார். “பாரதி எனும் புரட்சித் தீ” கவிதையில் பாரதியை அப்படியே நம் கண் முன் கொண்டு வந்து விடுகிறார். இது தான் படைப்பாளியின் வெற்றி வெற்றிநிச்சயம் கவிதையில் கல்வெட்டென மனதில் பதியும் வைரவரிகள்

சாதனை எல்லையை நீ அடைய விரும்பினால்
கடந்து தான் தீர வேண்டும் சங்கடப்பள்ளங்களை

நல்லவை விதைப்போம்,முயன்றால் முடியுமே, நம்பிக்கை கொள்ளுங்கள், வாழ நினைத்தால் வாழலாம், சிந்தையில் செம்மொழி, நல்லதே நடக்கட்டும்.

இப்படி கவிதைகளுக்கான தலைப்புகளே மிகவும் சிறப்பாக உள்ளது.தலைப்பை படிக்கும் போதே கவிதையைப் படிக்க வேண்டுமென்ற எண்ணத்தை தூண்டும் விதமாக உள்ளது. நூலாசிரியர் ஹைக்கூ கவிஞர் என்பதால் தேவையற்ற சொற்கள் எதுவும் சேர்க்காமல் மிகவும் நூட்பமாக கவிதையை படைத்துள்ளார். “சிந்தையில் செம்மொழி” கவிதையில் கவிஞரின் தமிழ்ப்பற்று நன்கு விளங்குகின்றது. பின் அட்டையில் நூலாசிரியர் கவியரங்கில் கவி முழங்கும் புகைப்படமும், கவிஞரின் வைரவரிகளும் நூலின் அழகை மேலும் மெருகூட்டுகின்றன. இந்நூலை வடிவமைத்த உழைப்புத் திலகங்கள் இனிய இதயங்கள், கன்னிக்கோயில் இராஜா, திரு.வசீகரன் இருவரும் பாராட்டுக்குரியவர்கள். “அரங்க மின்னல்கள்” கவிதைகள் மின்னல்கள் போல ஒளிவீசும் கவிதைகளாக இருந்தாலும், மின்னல்போலஉடன் மறையவில்லை.நூலை படிக்கும் வாசகர்களின் உள்ளத்தில் நிலவு போல நிலைத்து விடும் வைரவரிகள். மயிலாடுதுறை இளைய பாரதி தமிழகத்தின் இளையபாரதியாக உயர்ந்து இருக்கிறார். பாராட்டுக்கள் தொடர்ந்து படையுங்கள். இலக்கிய உலகில் விரைவில் நூலாசிரியருக்கு உயர்ந்த இடம் கிடைக்கும் என்பதை பறைசாற்றும் விதமாக கவிதைகள் உள்ளன. சொற்கள் நடந்தால் வசனம் சொற்கள் நடனமாடினால் கவிதை.இந்நூலில் சொற்கள் களிநடனமிடுகின்றன. நேர்முறை சிந்தனைகளையே கவிதையாக எழுத வேண்டும் என்பார் தன்னம்பிக்கை எழுத்தாளர் திரு.மெர்வின்,கவிஞர் இந்நூல் முழுவதும் நேர்மறை சிந்தனைகளையே விதைத்து இருப்பது பாராட்டுக்குரியது. புகழ்பெற்ற பதிப்பகங்களின் நூல்களை விஞ்சிடும் வண்ணம் மிகவும் நேர்த்தியாக வடிவமைத்து உள்ளனர். “வானத்து மின்னல்கள் விழிக்கு ஆபத்து”, “அரங் மின்னல்கள் விழிக்கு விருந்து”. வாடிய இதயத்திற்கு மருந்து நூலாசிரியர் நண்பர் மயிலாடுதுறை இளையபாரதியின் உடலின் நிறம் வெள்ளை. அவரது உள்ளமும் வெள்ளை எனப் பறை சாற்றும் விதமாக கவிதைகள் உள்ளன.



    Tags :    
அரங்க மின்னல்கள் (நூல் விமர்சனம் – கவிஞர் இரா.ரவி), அரங்க மின்னல்கள் (நூல் விமர்சனம் – கவிஞர் இரா.ரவி), அரங்க மின்னல்கள் (நூல் விமர்சனம் – கவிஞர் இரா.ரவி),
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 இறையன்பு களஞ்சியம் – நூல் விமர்சனம் : கவிஞர் இரா.ரவி
தினம் ஒரு கருத்து கூறும் நவீன நூலிது தொகுப்பாசிரியர் : தமிழ்த்தேனீ இரா.மோகன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா.ரவி இளைஞர்களின் நம்பிக்கை நட்சத்திரமாகத் திகழும் திரு. இறையன்பு இஆப அவர்களின் களஞ்சியம். உலகப் பொதுமறையான திருக்குறளுக்கு உரை எழுதினார்கள், எழுதுகிறார்கள், எழுதுவார்கள். ஆது போல

மேலும்...

 மிதக்கும் சிற்பங்கள் , நூல் விமர்சனம் : கவிஞர் இரா.ரவி
நூல் ஆசிரியர் : கவிஞர் பரிமளாதேவி வேளியீடு : முள் சிற்றிதழ் விலை ரூ.10 நூலின் தலைப்பே நம்மை சிந்திக்க வைக்கின்றது. பொதுவாக சிற்பங்கள் மிதக்காது. வித்தியாசமான தலைப்பு எல்லா கவிஞர்களின் முதல் கவிதை காதல் கவிதையாகத்தான் இருக்கும். அந்த வகையில் நூலாசிரியர் கவிஞர் பரிமளாதேவியின் காதல்

மேலும்...

 தொட்டு விடும் தூரம் தான் வெற்றி - நூல் விமர்சனம்:கவிஞர் இரா.இரவி
நூலின் பெயர் :தொட்டு விடும் தூரம் தான் வெற்றி நூல் ஆசிரியர் : கவிஞர் கவிதாசன் கோவை மாவட்ட ஆட்சியர் திரு.வெ.பழனிக்குமார் இஆப அவர்களின் அணிந்துரை இந்த நூலின் வரவேற்பறையாக உள்ளது. "கோவைக்கு கிடைத்த மிகப்பெரிய கவிதைச் சொத்து" என்று நூலாசிரியர் கவிஞர் கவிதாசன் பற்றி குறிப்பிடுகின்றார்,

மேலும்...

 பாரதி இன்று இருந்திருந்தால் : நூல் விமர்சனம் – கவிஞர் இரா.இரவி
பாரதி இன்று இருந்திருந்தால்

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


























மகளிர்





















Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in