tamilkurinji logo


 

ஆண்மை - புதுமைப்பித்தன்,




ஆண்மை - புதுமைப்பித்தன்

First Published : Wednesday , 6th January 2010 06:49:30 PM
Last Updated : Wednesday , 31st December 1969 05:00:00 PM




Warning: Division by zero in /home/content/14/7948114/html/tamilkurinji/Ilakkyam_details.php on line 303

ஆண்மை - புதுமைப்பித்தன், பண்ணை ஐயர் திடுக்கிட்டுப் போய்விட்டார். சீமாவைப் பற்றி அவர் நினைக்கவேயில்லை. தனது குற்றம் என்று உள்ளம் கூறியது. க்ஷாத்திரத்தை எல்லாம் மகளின் மீது தாக்கினார். "யார் என்று சொல்? பயலைத் தொலைத்து விடுகிறேன்" என்று கர்ஜித்தார். இதற்கு மேல் தாயாரின் பிடுங்கல் வேறு. ருக்மிணி ஒன்றிற்கும் பதில் சொல்லவில்லை. கணவன் இட்ட பணியை மறப்பாளா? அவர் வருவார், கடிதம் எழுதுவார் என்ற நம்பிக்கை இருக்கும்போது...

இரகசியம் என்பது சில விஷயங்களில் வெகு கஷ்டமான காரியம். ஊரிலே மெதுவாகப் பரவியது. ஊர்ப் பேச்சிற்குக் கேட்பானேன்? ஒன்றிற்குப் பத்தாகத் திரிந்தது. எந்த ஊர்க்குருவியோ போய் பரமேச்வர ஐயர் குடும்பத்திற்கும் கூறி விட்டது. ருக்மிணியின் மீது அவருக்கு உள்ளூர ஒரு பாசம் இருந்து வந்தது. முதலில் நம்பமுடியவில்லை. சமாசாரம் உண்மை என்ற பிறகு என்ன செய்ய முடியும்? சம்பந்தியின் மீதிருந்த க்ஷாத்திரத்தை எல்லாம் ருக்மிணியின் மீது சுமத்தியும், தம் மகனுக்கு நீண்ட கடிதம் எழுதிவிட்டார்.

சீமாவிற்கு முன்பு பணம் எடுத்துக் கொண்டு ருக்மிணியுடன் ஓடிப் போக வேண்டுமென்ற ஆசை, நம்பிக்கை இரண்டும் இருந்தன. இப்பொழுது அந்த நம்பிக்கையும் பறந்து போய்விட்டது. தான்தான் குற்றவாளி என்று அப்பாவிடம் கூச்சமில்லாமல் எப்படிச் சொல்லுவது? மேலும் ருக்மிணியின் மீது பழி ஏற்பட்டு விட்டதே, அவளை எப்படி ஊரார் அறியாமல் வைத்து வாழ்வது? சீமாவின் மனம் கலங்கியது.

இச்சமயம் ருக்மிணியிடம் இருந்து குழறிக் குழறி கண்ணீரால் நனைந்த ஒரு கடிதம் வந்தது. அவளைக் கூட்டிக் கொண்டு போய்விட வேண்டுமாம். முன்பு சொன்னபடி சீக்கிரம் வரவேண்டுமாம். அப்பா வையராளாம்; வீடு நரகமாக இருக்காம். அப்பாவிடம் சொல்லவில்லையாம். குழந்தை ருக்மிணிக்கு என்ன நம்பிக்கை!

சீமாவிற்கு என்ன பதில் எழுதுவது என்று தெரியவில்லை. தைரியம் இல்லை; பேசாமல் இருந்துவிட்டான்.

ருக்மிணியைப் பற்றி இரவெல்லாம் நினைத்து அழுதான்.

ஆனால் தகப்பனாரிடம் வேறு கல்யாணம் செய்து கொள்ளப் போவதில்லை என்று கூறத் தைரியம் இருந்தது. அப்பா இருக்குமிடத்திற்கும் சென்னைக்கும் வெகுதூரமல்லவா? அதனால்தான் தைரியமிருந்தது. மேல் படிப்பிற்கு அவசியம் 200 ரூபாய் வேண்டுமாம். அந்தப் பொய் சொல்லியாவது...







    Tags :    
ஆண்மை - புதுமைப்பித்தன், ஆண்மை - புதுமைப்பித்தன், ஆண்மை - புதுமைப்பித்தன்,
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 ' பாவிகள்!' சு.செந்தில்ராஜ் ஆசிரியர், தமிழ்குறிஞ்சி.
ஆதவன்  மேற்கில்  மறைந்து  கொண்டிருந்தான்.  டிசம்பர்  மாதத்துக்  குளிர்  சில்லென்று  இறங்கிக்  கொண்டிருந்து.  நான்  அந்தக்  குளக்கரையின்  மீது  நடந்து  கொண்டிருந்தேன்.  குளிர்  கலந்த  காற்று  மென்மையாய்  முகத்தை  வருடிச்  சென்றது.இடது  பக்கம்  குளத்து  நீர்  சலசலத்தது.  வலது  பக்கம்  கண்ணுக்கெட்டிய

மேலும்...

 சார்! கார்த்துடைக்கனுமா?
உடல் முழுக்க வியர்வையுடனும், நெஞ்சு நிறைய வெப்பத்துடனும், தன் இயலாமையால் எழுந்த கோபம், ஆத்திரம், கவலை, பயம் என உணர்ச்சிகளின் கலவையாய் வீட்டினுள் நுழைந்தான் முரளி. சமீபத்தில் ஒரு அரசு நிறுவனத்திலிருந்து ஓய்வு பெற்று விட்ட அப்பா ஈசிச் சேரில் கண் மூடிச்

மேலும்...

 மலரும் முள்ளாகும்
எல்லாம் முடிந்து விட்டது. அவள் பிரிந்து விட்டாள். கோர்ட் பிரித்து விட்டது. அவள் பிரிந்ததைப் பற்றிக் கூட அவன் கவலைப்படவில்லை. ஆனால் அதற்காக அவள் எப்படியெல்லாம் பொய் சொன்னாள்? என்னென்ன பழியையெல்லாம் அவன் மீது சுமத்தினாள்? அதைத்தான் அவனால் தாங்க முடியவில்லை.

மேலும்...

 கைக்காசு,,,-விமலன்
  , எந்தப் பக்கம் கையை விட்டபோதிலும் அவரது உடம்பிலிருந்து ரூபாயை எடுத்து விடுகிறார். விட்டால் எட்டு திசகளிலும் இருந்து எடுப்பார் போலிருக்கிறது. வலதுபக்கம் கையைவிடுகிறார். மடித்து கட்டப்பட்டிருந்த கட்டம் போட்ட லுங்கியை மீறி வெளித் தெரிந்த அண்டர்வேர் பாக்கெட்டிலிருந்து ரூபாயை எடுக்கிறார்.

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in