tamilkurinji logo
 

இடுகாடு - -நிலாரசிகன்.,Tamil short story

Tamil,short,story


இடுகாடு - -நிலாரசிகன்.

First Published : Friday , 20th July 2012 06:45:57 AM
Last Updated : Friday , 20th July 2012 06:45:57 AM




இடுகாடு - -நிலாரசிகன்.,Tamil short story



விபத்தில் இறந்து உடல்சிதைந்துபோனதால் உடனே தகனம் பண்ணிவிட்டார்கள் முனியசாமியின் மனைவியை.

இரண்டுமணி நேரமாக எரிகின்ற சிதையை வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தான் முனியசாமி.

முதலில் அவன் காதுக்கு இந்தச் செய்தியை சொன்னவன் பெட்டிக்கடை வைத்திருக்கும் பால்பாண்டி.

பக்கத்து ஊர் திருவிழாவிற்கு சென்றுவிட்டு இன்றுதான் ஊர் திரும்பினான் முனியசாமி.

முனியசாமி வீட்டிற்கு போய் பலமாதங்கள் ஆகிவிட்டது.மனைவி கோபித்துக்கொண்டு அம்மா வீட்டிற்கு போய்விட்டாள். இருமகன்கள்,அவர்கள் என்ன படிக்கிறார்கள் என்பதுகூட இவனுக்கு தெரியாது.

வாயில் எப்பொழுதும் புகைந்துகொண்டிருக்கும் கருநிற சுருட்டு.

ஊருக்குள் முனியசாமிக்கு “அரைப்பைத்தியம்” என்று பெயர்.

எரிகின்ற சிதைமுன் நின்று மெளனமாய் அழுகின்ற முனியசாமியை வியப்புடன் பார்த்தது காகம் ஒன்று.

முனியசாமி இடுகாட்டில் பிணம் எரிப்பவன்.

பின்குறிப்பு : (இக்கதையை கீழிருந்து மேலாகவும் படிக்கலாம்)



    Tags :    
இடுகாடு - -நிலாரசிகன்.,Tamil short story இடுகாடு - -நிலாரசிகன்.,Tamil short story இடுகாடு - -நிலாரசிகன்.,Tamil short story
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 பரவால்ல விடுங்க பாஸூ… - சதங்கா
அந்த அலுவலக அறையில் ஏழு பேர் இருந்தனர். ந‌ம்மூர்க்கார‌ங்க‌ மூனு பேரும், வெள்ளைக்கார‌ங்க‌ நாலு பேரும். இந்த‌ காம்பினேஷ‌ன்லேயே புரிந்திருக்கும் அது ஒரு மென்பொருள் ச‌ம்ப‌ந்த‌ப்ப‌ட்ட‌ அலுவ‌ல‌க‌ மீட்டிங்க் என்று. உங்கள் நம்பிக்கையைத் தகர்க்க விரும்பவில்லை :) ) அதே தான்

மேலும்...

 நீ, நான், நேசம் - எம்.ரிஷான் ஷெரீப்
(சர்வதேச ரீதியில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் நடத்திய கந்தர்வன் சிறுகதைப் போட்டியில் சிறப்புப் பரிசினை வென்ற சிறுகதை)நிவேதாவிற்கு, எப்படியிருக்கிறாய் போன்ற சம்பிரதாயமான வார்த்தைகள் கொண்டு இதனை ஆரம்பிக்கமுடியவில்லை. உனக்கென எழுதும் இக்கடிதம் உன்னைச் சேரும் வாய்ப்புக்களற்றது. எனினும் மிகுந்த பேராசையுடனும்

மேலும்...

 நம்பிக்கை இல்லாத நட்பு - ஈஸ்வர்
முரளி தனது நண்பர்களுடன் சினிமாவுக்கு செல்ல ஆயத்தமாகிக்கொண்டிருந்தான் ... டேய் முரளி ! சீக்கிரம் வாடா என்றான் அவன் நண்பன் ராஜா, இவன்கூட படம்பார்க்க போனா எபோதும் இன்டர்வெல்லுக்குதான் போயி சேரவேண்டியதா இருக்கு மனுசனடா நீ என்று அலுத்துகொண்டான் மற்றொரு நண்பன்

மேலும்...

 மக்கள் அவரைச் சூழ்ந்திருக்கிறார்கள் - எம்.ரிஷான் ஷெரீப்
மக்கள் அவரைச் சூழ்ந்திருக்கிறார்கள் - (துருக்கி நாட்டுச் சிறுகதை) அஸீஸ் நேஸின் தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப்             அவர் இறுதியாக சிறையில் கழித்த காலம் மிகவும் கொடுமையானது. சிறையிலிருந்து விடுதலை பெற்ற பிறகு மிகவும் தொலைதூரத்திலிருந்த ஒரு பிரதேசத்திற்கு அவர் நாடுகடத்தப்பட்டார். அந்தப் பிரதேசத்துக்கும் அம் மக்களுக்கும் அவரொரு புதியவராக இருந்தார். அவர் சிறையிலிருந்த போது

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match




























மகளிர்























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in