tamilkurinji logo
 

உண்மையே பேசுங்கள் - நூல் விமர்சனம் : கவிஞர் இரா.இரவி,

உண்மையே பேசுங்கள் - நூல் விமர்சனம் : கவிஞர் இரா.இரவி

First Published : Thursday , 5th November 2009 05:35:18 PM
Last Updated : Wednesday , 31st December 1969 05:00:00 PM







உண்மையே பேசுங்கள் - நூலின் ஆசிரியர் : திரு.ச.மணிமொழி இளங்கோ

நூல் ஆசிரியரின் பெயர் காரணப் பெயராக இருக்க வேண்டும். மணியான மொழியில் இளங்கோவடிகள் போல வாழ்க்கைக்கு மிகவும் தேவையான உயர்ந்த பல கருத்துக்களை உள்ளடக்கிய நூல்.

உண்மையே பேசுங்கள் என்று நூலின் தலைப்பை படித்தவுடன் நம் நினைவிற்கு வருவது அரிச்சந்திரன் நாடகம். அதனைப் பார்த்து வாய்மையை கடைபிடித்த காந்தியடிகளும் தான். உண்மையின் மேன்மையே விளக்கும் நூல்.

உலகப் பொதுமறை படைத்த ஒப்பற்ற திருவள்ளுவரின் இரண்டு திருக்குறளுடன் முன்னுரை தொடங்குகின்றது.

நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றுந்தன்
உண்மை அறிவே மிகும்.


நீங்கள் பல நூல்களை ஆராய்ந்து படித்தாலும், எவ்வளவு விளக்கமாகப் படித்தாலும், எந்த அளவு உண்மையைக் கடைபிடித்து வாழ்கிறீர்களோ அந்த அறிவாகிய உண்மையே உங்களுடன் இருக்கும். அதைத் தவிர வேறு எந்த அறிவும் நிச்சியமாக உங்கள் வாழ்வில் வளம் தராது. ஆகவே உண்மையை நம் வாழ்க்கையில் எல்லா நிலைகளிலும் கடைபிடிக்க முடியும் என்பதை விளக்குவதற்காக இந்நூல் எழுதப்பட்டது என்கிறார் நூல் ஆசிரியர்.

ஈன்றாள் பசிகாண்பான் ஆயினும் செய்யற்க
சான்றோர் பழிக்கும் வினை


அதாவது நம்மைப் பெற்ற தாய் பசியால் துடித்துக் கொண்டு இருந்தாலும், சான்றோர் பழிக்கக் கூடிய செயல்களை செய்யக்கூடாது என்கிறார் வள்ளுவப் பெருந்தகை. தாய் பசித்து இருந்தால், பஞ்சமா பாதகம் செய்யலாம் என்கிறது வேதம். வேதங்களை எல்லாம் மிஞ்சும் வகையில் இந்தத் திருக்குறளை எழுதிய திருவள்ளுவர் ஒரு தமிழன் என்பதற்காகவே உலகத்தமிழர் எல்லோரும் மார்தட்டிக் கொள்ளலாம்.

மதங்களில் சொன்னவை, அறிஞர்கள் சொன்னவை
பொன்மொழிகளோடு தொடங்குகின்றது நூல்.


நூறு உத்தமபுத்திரர்களைப் பெறுவதை விட உண்மையைக் கடைபிடிப்பது சிறந்தது -மகாபாரதம்

உண்மையுள்ள மனிதன் பரிபூரண ஆசிர்வாதங்களைப் பெறுவான் -நீதிமொழிகள்

உண்மையே பேசு;அது மற்றவர்களுக்கு கசப்பாக இருந்தாலும் சரியே -நபிகள் நாயகம்(ஸல்)அவர்கள்

பொய்யை உண்மையால் வெல்லுங்கள் -திருமூலர்

உண்மையை அறிவதே தத்துவஞானம்-அரிஸ்டாட்டில்

உண்மையைப் புறக்கணிப்பவன் இறந்தவனுக்குச் சமமாகிறான் -அறிஞர்

இப்படி நூல் ஆசிரியர் பல்வேறு மத நூல்களையும், அறிஞர்களின் சித்தர்களின் பொன்மொழிகளையும் கற்ற அறிவு இருக்கின்ற காரணத்தால் உண்மையைப் பற்றி மிகப்பெரிய ஆராய்ச்சி கட்டுரையாக வடித்துள்ளார். நூலைப் படித்து முடித்தவுடன் உண்மையைப் பற்றிய மதிப்பு மேலும் மேலும் உயர்ந்து விடுகின்றது. உலகமயம், தாராளமயம் என்ற பெயரில் பண்பாட்டு சீரழிவு அரங்கேற்றமாகி வரும் இக்காலத்தில் அறநெறி போதிக்கும் இது போன்ற நூல்களை இளைய சமுதாயம் வாசித்து உணர வேண்டும். வாழ்வியல் கருத்துக்களை விளக்கும் அற்புத நூல்.

உண்மை என்றால் என்ன ? என்ற கேள்விக்கு மிக எளிமையாகவும், இனிமையாகவும் விடை தந்துள்ளார். உண்மை என்பது மிகவும் சுலபமான நாம் கடைபிடிக்க வேண்டிய ஒன்று ஆகும். உண்மை என்பது பார்த்ததைப் பார்த்தப்படி கூறுதல், கேட்டதைக் கேட்டப்படி கூறுதல், பேசியதைப் பேசியபடி கூறுதல், நுகர்ந்ததை அப்படியே கூறுதல், உணர்ந்ததை (உடலால்) உணர்ந்தபடி கூறுதல்.

வாழ்வில் இதனைக் கடைபிடித்தால் நம் மதிப்பு உயரும் என்பது உண்மை. உண்மையே பேசி வருபவருக்கு மதிப்பு அதிகம். ஒரு முறை பொய் பேசி விட்டால் திரும்ப அவர் உண்மை பேசினாலும் நம்ப மறுப்பார்கள். அது தான் நடைமுறை உண்மை. நூற்றாண்டு கடந்த பின்னும் காந்தியடிகளை இந்த உலகம் போற்றக் காரணம் அவர் வாழ்வில் கடைபிடித்த நேர்மை, உண்மை தான்.

பொய்யின் வகைகளைக் கூட வகைப்படுத்தி உள்ளார் நூல் ஆசிரியர். 1.சும்மாப் பொய், 2.இயலாமைப் பொய், 3.பெருமைப் பொய், 4.பணப் பொய், 5.பிறருக்காக பொய் இதற்கான விளக்கமும் நுட்பமாக உள்ளது.

பொறமை குணத்தைத் தடுக்க உண்மை பேச வேண்டும். புகழ்பெற உண்மை பேச வேண்டும். கோபத்தைத் தடுக்க உண்மை பேச வேண்டும், தீய பழக்கங்களை விரட்ட உண்மை பேச வேண்டும், அறத்தின் பயனை அடைய உண்மை பேச வேண்டும், கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு மறைய உண்மை பேச வேண்டும், நண்பர்களுடன் உறவை வளர்க்க உண்மை பேச வேண்டும், மனத்தூய்மைக்கு உண்மை பேச வேண்டும், காமத்தை விட்டு விட உண்மை பேச வேண்டும், சான்றோர்க்கு விளக்கமாக உண்மை பேச வேண்டும், குடும்ப நன்மைக்கு உண்மை பேச வேண்டும், உலக நன்மைக்கு உண்மை பேச வேண்டும், அனைத்து உயிர்களிடத்தும் அன்பு செலுத்த உண்மை பேச வேண்டும், இப்படி பல்வேறு தலைப்புகளில் விரிவான கட்டுரை நமக்கு விழிப்புணர்வு தருகின்றது. மனிதன் மனிதனாக வாழ வேண்டிய விசயத்தை வலியுறுத்துகின்றது. கூடா நட்பு பற்றி தீய பழக்கங்கள் பற்றியும் எடுத்து இயம்பி தெளிவுபடுத்துகின்றார்.

உண்மையைப் பற்றி இவ்வளவு உயர்வாகவும், விரிவாகவும், விளக்கமாகவும் வேறு எந்த நூலிலும் படித்ததில்லை என்று அறுதியிட்டுக் கூறலாம். அந்த அளவிற்கு உண்மையின் மகத்துவத்தை, அவசியத்தைப் படிக்கும் வாசர்களின் மனதில் பதியும்படி மிக எளிமையாகவும், இனிமையாகவும் வடித்து உள்ள ஆசிரியருக்குப் பாராட்டுக்கள்.



    Tags :    
 உண்மையே பேசுங்கள் - நூல் விமர்சனம் : கவிஞர் இரா.இரவி,  உண்மையே பேசுங்கள் - நூல் விமர்சனம் : கவிஞர் இரா.இரவி,  உண்மையே பேசுங்கள் - நூல் விமர்சனம் : கவிஞர் இரா.இரவி,
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 இறையன்பு களஞ்சியம் – நூல் விமர்சனம் : கவிஞர் இரா.ரவி
தினம் ஒரு கருத்து கூறும் நவீன நூலிது தொகுப்பாசிரியர் : தமிழ்த்தேனீ இரா.மோகன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா.ரவி இளைஞர்களின் நம்பிக்கை நட்சத்திரமாகத் திகழும் திரு. இறையன்பு இஆப அவர்களின் களஞ்சியம். உலகப் பொதுமறையான திருக்குறளுக்கு உரை எழுதினார்கள், எழுதுகிறார்கள், எழுதுவார்கள். ஆது போல

மேலும்...

 மிதக்கும் சிற்பங்கள் , நூல் விமர்சனம் : கவிஞர் இரா.ரவி
நூல் ஆசிரியர் : கவிஞர் பரிமளாதேவி வேளியீடு : முள் சிற்றிதழ் விலை ரூ.10 நூலின் தலைப்பே நம்மை சிந்திக்க வைக்கின்றது. பொதுவாக சிற்பங்கள் மிதக்காது. வித்தியாசமான தலைப்பு எல்லா கவிஞர்களின் முதல் கவிதை காதல் கவிதையாகத்தான் இருக்கும். அந்த வகையில் நூலாசிரியர் கவிஞர் பரிமளாதேவியின் காதல்

மேலும்...

 தொட்டு விடும் தூரம் தான் வெற்றி - நூல் விமர்சனம்:கவிஞர் இரா.இரவி
நூலின் பெயர் :தொட்டு விடும் தூரம் தான் வெற்றி நூல் ஆசிரியர் : கவிஞர் கவிதாசன் கோவை மாவட்ட ஆட்சியர் திரு.வெ.பழனிக்குமார் இஆப அவர்களின் அணிந்துரை இந்த நூலின் வரவேற்பறையாக உள்ளது. "கோவைக்கு கிடைத்த மிகப்பெரிய கவிதைச் சொத்து" என்று நூலாசிரியர் கவிஞர் கவிதாசன் பற்றி குறிப்பிடுகின்றார்,

மேலும்...

 பாரதி இன்று இருந்திருந்தால் : நூல் விமர்சனம் – கவிஞர் இரா.இரவி
பாரதி இன்று இருந்திருந்தால்

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match




























மகளிர்





























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in