tamilkurinji logo


 

எச்சரிக்கை - தெரியாத நம்பர்ல இருந்து மிஸ்டு கால் வந்தா கூப்பிடாதீங்க,
எச்சரிக்கை - தெரியாத நம்பர்ல இருந்து மிஸ்டு கால் வந்தா கூப்பிடாதீங்க

First Published : Sunday , 22nd July 2012 10:02:16 PM
Last Updated : Sunday , 22nd July 2012 10:02:16 PM
எச்சரிக்கை - தெரியாத நம்பர்ல இருந்து மிஸ்டு கால் வந்தா கூப்பிடாதீங்க, மிஸ்டுகால் கொடுத்து அந்த எண்ணை தொடர்பு கொள்ளும் வாடிக்கையாளர்களின் ரகசியங்களை திருடி மோசடியில் ஈடுபடும் நைஜீரியர்களை பிடிக்க சர்வதேச போலீசாரின் உதவியை தமிழக போலீசார் நாடி உள்ளனர். தகவல் தொழில் நுட்பம் வளர்ந்து வருகிறது. அதற்கேற்ப செல்போன் பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஸ்மார்ட் போன்கள் வந்தபிறகு, ஆன்லைனில் தகவல் பரிமாற்றம், வங்கி கணக்கு, கிரெடிட் கார்டு குறித்த விவரங்களை செல்போனிலேயே பதிவுசெய்தல், செல்போன் மூலம் வங்கி கணக்கை கையாளுதல் என இதன் பயன்பாடு அதிகரித்து விட்டது. இதற்கு தற்போது ஆபத்து வந்துவிட்டது.

மிஸ்டுகால் கொடுத்து, பின்னர் அந்த எண்ணுக்கு அழைப்பவர்கள் போனில் இருந்து தகவல்கள் திருடப்படுகின்றன. இந்த மோசடியில் சென்னை தாம்பரத்தை சேர்ந்த ஒருவரும் சிக்கினார். அவர் சவுதி அரேபியாவில் வேலை செய்தார். பின்னர், சென்னை வந்து திருமணம் செய்தார். புதுமண தம்பதியாய் பல்வேறு இடங்களுக்கு சுற்றித் திரிந்தனர். அந்தரங்க விஷயத்தைக்கூட செல்போனில் பதிவு செய்து சேமித்து வைத்தார். சில தினங்களில் அவருக்கு ஒரு எண்ணில் இருந்து மிஸ்டு கால் வந்தது.

அந்த எண்ணை தொடர்பு கொண்டபோது, பீப் சவுண்ட் மட்டுமே ஒலித்தது. அடுத்த வினாடியே அவரது செல்போனில் பதிவுசெய்து வைத்திருந்த வீடியோ காட்சி, ஆன் லைன் வங்கி கணக்கு எண், கிரெடிட் கார்டு நம்பர் அனைத்தும் மாயமானது. சில நாட்களில் மனைவியுடன் இருந்த அந்தரங்க காட்சிகள் இணைய தளத்தில் வலம் வந்தன. இதை கண்டு பதறிய அவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார். மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணையில் இறங்கினர்.

அதில், பரபரப்பு தகவல்கள் வெளியாயின. இண்டர் நெட் போன் கால் மூலம் நைஜீரிய வாலிபர்கள் மிஸ்டு கால் கொடுத்து, அந்த எண்ணை மீண்டும் தொடர்பு கொள்பவர்களின் செல்போனில் வைரஸை செலுத்தி அனைத்து ரகசிய தகவல் களையும் திருடி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நூதன மோசடியில் ஈடுபடும் நைஜீரியர்கள் பிடிக்க போலீசார் வலை விரித்துள்ளனர். ஆனால், இவர்கள் இந்த வகையான மோசடிகளை வெளிநாட்டில் இருந்து ஆன்லைன் மூலம் செய்வதால் அவர்களை பிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் சர்வதேச போலீசாரின் உதவியுடன் கைது செய்ய மத்திய குற்றப்பிரிவு போலீசார் களம் இறங்கி உள்ளனர்.

மிஸ்டு கால் விடுக்கும் எண்ணை திரும்ப தொடர்பு கொள்ளும் போது வாடிக்கையாளர்களின் ஆன் லைன் வங்கிக் கணக்கு எண் ஒருவகையான சாப்ட்வேர் வைரஸ் மூலம் திருடப்படுகிறது. திருடப்படும் வங்கிக் கணக்கு எண் மூலம் ஒரு வங்கியில் இருந்து இன்னொரு வங்கிக்கு வாடிக்கையாளர்களின் பணம் மாற்றப்படுகிறது. சில நேரங்களில் வாடிக்கையாளர்களின் எண்ணை நைஜீரியர்கள் லாக் செய்து அதிர்ச்சி கொடுக்கின்றனர்.    Tags :    
எச்சரிக்கை - தெரியாத நம்பர்ல இருந்து மிஸ்டு கால் வந்தா கூப்பிடாதீங்க, எச்சரிக்கை - தெரியாத நம்பர்ல இருந்து மிஸ்டு கால் வந்தா கூப்பிடாதீங்க, எச்சரிக்கை - தெரியாத நம்பர்ல இருந்து மிஸ்டு கால் வந்தா கூப்பிடாதீங்க,
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 பணிவோம், உயர்வோம்!
பிறர் தவறு செய்தால், ஏன் இப்படி செய்தார் என்று சிந்தித்து நேரத்தை வீணாடிக்கக் கூடாது.சோர்வடைந்து காணப்படும் எவரையும் பார்த்து ஏன் உடல்நலம் சரியில்லையா? என்ன ஆயிற்று என்றெல்லாம் கேட்கக் கூடாது.பிறர், உங்களுக்குச் செய்யும் உதவிகளை மனதில் வைத்து நன்றி பாராட்டுங்கள்.யாரிடமும் சம்பளம்

மேலும்...

 யோகாசனம்( yogasana )
கட்டுப்பாடுகள்:1.  கீழே குறிப்பிட்டுள்ளவர்கள் ஆசனங்களை செய்யக்கூடாது.ஒரு வருடத்திற்குள் பெரிய அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள்.வயிற்றில் புண் உடையவர்கள் பிராணாயாமம். தியானம் மட்டும் செய்யலாம் மாதவிடாய் காலத்தில் உள்ள பெண்கள் கர்ப்பிணிகள்.2. இவை தவிர கீழ்க்கண்ட கட்டுப்பாடுகளையும் கண்டிப்பாகக் கடைப்பிடிக்க வேண்டும்.வெறும் வயிற்றில்

மேலும்...

 தீபாவளி --- சிந்தனைக்குச் சில வினாக்கள்!!
இரண்யாட்சதன் பூமியை பாயாகச் சுருட்டினான் என்றால், பக்தத் தமிழா! அந்தப் பூமி தமிழ்நாடு மட்டுமா? அல்லது ஆந்திரா, கேரளா, கருநாடகம் இணைந்த திராவிட நாடு மட்டுமா? அல்லது அனைத்து மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் இணைந்த பாரத புண்ணிய பூமியாம் இந்திய நாடு

மேலும்...

 ருத்ராட்சம் யார்-யார் அணியலாம்?
சென்னை நந்தனத்தில் டெம்பிள் டவர் வளாகத்தில், ருத்ராட்ச கண்காட்சி நடக்கிறது. இங்கு, பெண்கள் அதிக அளவில் ருத்ராட்சம் வாங்கிச்செல்வதை காணமுடிகிறது.இதற்கிடையே, ருத்ராட்சத்தை யார் அணிவது? சிறு குழந்தைகளும், பெண்களும் ருத்ராட்சம் அணியலாமா? கூடாதா? என்ற கேள்வி பரவலாக எழுந்துள்ளது.இது குறித்து, ருத்ராட்ச

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


மகளிர்

Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in