tamilkurinji logo


 

எல்லைக் கோடு -'கவியன்பன்' கலாம் ,Tamil kavithai

Tamil,kavithai
எல்லைக் கோடு -'கவியன்பன்' கலாம்

First Published : Wednesday , 6th February 2013 10:14:24 PM
Last Updated : Wednesday , 6th February 2013 10:14:24 PM
எல்லைக் கோடு -'கவியன்பன்' கலாம் ,Tamil kavithai

எல்லையிலா அருளால் காக்கும்

.....இறையவன் வகுத்த சட்டம்

எல்லைக்கோ டென்று பார்த்து

.....இணங்கிநீ வாழ்தல் திட்டம்

தொல்லைகளும் வரத்தான் செய்யும்

...தொடர்ந்துநீ முன்னே செல்வாய்

இல்லையென்றால் உழைப்பில் தேக்கம்

....இருப்பதைக் கண்டு கொள்வாய்!

அளவுக்கு மிஞ்சும் போதில்

...அமுதமும் நஞ்சாய்ப் போகும்

பிளவுக்கு வழியைக் காட்டும்

....பிறர்மனம் புண்ணாய்ப் போகும்

அளவுக்கு மேலே காட்டும்

..அக்கறைக் கூடத் தொல்லை

களவில்லாக் கற்பைப் பேண

...காண்பது பண்பின் எல்லை!

நாட்டிலுள்ள எல்லைக் கோடு

.....நல்லவர் மதிக்கும் கோடு

வீட்டிலுள்ள எல்லைக் கோடு

...விரும்புவர் அண்டை வீடு

பாட்டிலுள்ள யாப்பின் கோடு

....பாடலின் அமைப்பைக் காட்டும்

வாட்டிவிடும் வறுமைக் கோடு

...வறுமையின் எல்லைக் கோடு!

ஆட்டத்தில் எல்லைக் கோடு

.....ஆட்டமும் சிறக்கச் செய்யும்

நாட்டத்தில் எல்லைக் கோடு

...நாளையை எண்ணிப் பார்க்கும்

நோட்டத்தில் எல்லைக் கோடு

..நோவினை இல்லாக் கற்பு

கூட்டத்தில் எல்லைக் கோடு

...கூச்சலைத் தடுத்து வைக்கும்!

- "கவியன்பன்" கலாம், அதிராம்பட்டினம்    Tags :    
எல்லைக் கோடு -'கவியன்பன்' கலாம் ,Tamil kavithai எல்லைக் கோடு -'கவியன்பன்' கலாம் ,Tamil kavithai எல்லைக் கோடு -'கவியன்பன்' கலாம் ,Tamil kavithai
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 வறுமைக்கோடு----------
வலியோ ரெளியோர் மீதினிலே          வகுத்து வைத்தக் கோடாகும்பலியாய்ப் போகு மெளியோரும்         பயமாய்ப் பார்க்கும் கேடாகும்வேலி தாண்டி வரவியலா         விரக்தித் தருமே இக்கோடும் நீலிக் கண்ணீர் வடிக்கின்ற       நீசர் செய்த பெருங்கேடாம்கானல் நீராய் வாழ்நாளும்        கனவாய்ப் போய்தா னழிந்ததுவானம் பார்க்கும் பூமிதானே       வறுமைக் கோடு

மேலும்...

 உண்மை அறியும் பொய்கள். - தீபிகா
சமாதானம் தருவிக்கப்பட்டதாய்சொல்லப்படுகிற எனது நிலத்தில்வீதிகளை விழுங்கிக்கொண்டு வளர்ந்திருக்கிறவிளம்பர மரங்களின் நிழலில்நாய்களுடன் சேர்ந்துவீடுகள் பறிக்கப்பட்ட உடல்களும்படுத்துக் கிடக்கின்றன. திரும்பிப் பெறமுடியா இழப்புக்களோடுதிரிகிற சனங்களின் முகங்களில்படரமுடியாத மகிழ்ச்சியின் ரேகைகள்மிச்சமிருக்கும் வாழ்க்கையைஎதிர்பார்ப்புகளற்று செலவு செய்கின்றன. சிறைப்பிடித்து காட்சிக்கு வைத்திருக்கும்மிருகக்காட்சிச் சாலை விலங்குகளைபார்க்கும் ஆவல் நிறைந்தஅதே கண்கள்குளிர்சாதனப் பேரூந்துகளில் வந்திறங்கிகும்மாளமிட்டபடி

மேலும்...

 தற்கொலை செய்துகொண்டவனின் கடிதம்.. - கே.ஆர்.பி.செந்தில்
ஒற்றை வரியில் எண்ணற்ற கேள்விகள் கொண்ட கடிதம் ஒன்றை படிக்க நேர்ந்தது.. பிம்பங்களின் வழியே கண்ட கற்பனைகளின் எல்லைக் கோடுகளையும் கடந்து சென்றது அது. உண்மைகள் நிறைந்தது என்று பொய் சொன்னவன் கொடுத்த நம்பிக்கைகளை போல் அல்ல அது உண்மை.. அனுபவங்களை தொகுத்து புத்தகங்களாய் போட்டவன்

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


மகளிர்

Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in