tamilkurinji logo
 

திருக்குறளும் விளக்கக் குறளும் - அதிகாரம் 01,


திருக்குறளும் விளக்கக் குறளும் - அதிகாரம் 01

First Published : Monday , 30th November 2009 09:44:16 AM
Last Updated : Wednesday , 31st December 1969 05:00:00 PM







அதிகாரம் 01 : கடவுள் வாழ்த்து :



01)

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி

பகவன் முதற்றே உலகு



விளக்கக் குறள் :

01)

எழுத்துக்(கு) அகரம் ; அதுபோன்றே இப்பூ
வுலகுக்கு என்றும் இறை.



02)

எழுத்துக்கு மூலம் அகரம்; இறைவன்

உலகத்தில் வாழும் உயிர்க்கு



03)

அகரமே மூலம் மொழிக்கு; இறைவன்

பகலவன்கீழ் வாழும் உயிர்க்கு



04)

அகரம் மொழிக்கெல்லாம் மூலம்; பகலவன்கீழ்

வாழும் உயிர்க்கு அவன்








02)

கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்

நற்றாள் தொழாஅர் எனின்



விளக்கக் குறள் :

கற்றறிந்தோர்; ஆண்டவன்தாள் ஏற்காதோர்; எல்லாம்

அறிந்தும் அறியா தவர்




03)

மலர்மிசை ஏகியான் மாணடி சேர்ந்தார்

நிலமிசை நீடுவா வார்



விளக்கக் குறள் :

மலர்மனம் வாழும்இறைத் தாளடி சேர்ந்தோர்

உலகில் நிலைத்துவாழ் வார்




04)

வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு

யாண்டும் இடும்பை இல



விளக்கக் குறள் :

பற்றற்ற ஆண்டவன் நற்பாதம் சேர்ந்தார்க்கு

முற்றும் இடையூறு இல்




05)

இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்

பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு



விளக்கக் குறள் :

01)

பொருளாசை காரிருள் அண்டாது நற்கடவுள்

பொருள்தம்முள் ஏற்றார் இடம்

02)
அறியாமை ஆசையும் அண்டாது; ஆண்டவனின்

அர்த்தம் புரிந்தோர் வசம்






06)

பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க

நெறிநின்றார் நீடுவாழ் வார்


விளக்கக் குறள் :

ஐம்புலம் ஆட்கொண்ட ஆண்டவன் பாதைசெல்வோர்

என்றும் நிலைத்துவாழ் வார்






07)

தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்

மனக்கவலை மாற்றல் அரிது



விளக்கக் குறள் :

ஒப்பில்லா ஆண்டவன் தாள்சேர்ந்தார் அல்லாதோர்

துக்கம் களைதல் அரிது





08)

அறவழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்

பிறஆழி நீத்தல் அரிது



விளக்கக் குறள் :

அறக்கடவுள் தாள்சேரா(து); இப்பிறவி ஆழ்கடல்

சற்றும் கடத்தல் அரிது






09)

கோளில் பொறியில் குணமிலவே எண்குணத்தான்

தாளை வணங்காத் தலை



விளக்கக் குறள் :

இருந்தும் இயங்காப் புலமாம்; அவன்தாள்

விரும்பி வணங்காத் தலை





10)

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்

இறைவன் அடிசேரா தார்



விளக்கக் குறள் :

பிறவிப் பெருங்கடல் நீந்திக் கடக்கார்

இறைவன் அடித்தொடரா தார்


- துரை. ந. உ



    Tags :    
திருக்குறளும் விளக்கக் குறளும் - அதிகாரம் 01, திருக்குறளும் விளக்கக் குறளும் - அதிகாரம் 01, திருக்குறளும் விளக்கக் குறளும் - அதிகாரம் 01,
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 தமிழ் வெப் டிவி
தமிழ் வெப் டிவியில் புத்தம் புதிய தமி்ழ்த் திரைப்படப் பாடல்கள், காமெடி, சமையல் நிகழ்ச்சி, டிவி சீரியல்களை கண்டு மகிழுங்கள். உங்கள் ஊரில் நடைபெற்ற நிகழ்வுகளையும் தமிழ் வெப் டிவியில் ஒளிபரப்பலாம்.

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match




























மகளிர்























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in