tamilkurinji logo
 

நான் காணாமல் போகிறேன் - நூல் விமர்சனம் : கவிஞர் இரா.இரவி,


நான் காணாமல் போகிறேன் - நூல் விமர்சனம் : கவிஞர் இரா.இரவி

First Published : Thursday , 5th November 2009 05:21:18 PM
Last Updated : Wednesday , 31st December 1969 05:00:00 PM







நான் காணாமல் போகிறேன் - நூல் ஆசிரியர் : திரு.முத்துபாரதி

நூலின் அட்டைப்படமே வித்தியாசமாக உள்ளது. பார்த்ததும் வாங்க வேண்டும் என்று தோன்றும் விதமாக உள்ளது. 15 சிறுகதைகளின் தொகுப்பு இந்நூல். சிறுகதை எப்படி எழுத வேண்டும் ? என்பதற்கு இலக்கணம் கூறும் விதமாக உள்ளது. சின்னச் சின்ன நிகழ்வுகளையும், நகைச்சுவைத் துணுக்குகளையும் சிறுகதை என்று எழுதி வரும் காலத்தில், ஒவ்வொரு கதையிலும் ஒவ்வொரு செய்தி உள்ளது. பேராசிரியர் பு.சி.கணேசன் அணிந்துரை அழகு சேர்க்கின்றது. சாகித்ய அகதெமி விருது பெற்ற எழுத்தாளர் மேலாண்மை பொன்னுச்சாமி முன்னுரை முத்திரை பதிக்கின்றது.

"இந்த அசலான எழுத்திலக்கியம் தனக்குரிய சிம்மாசனத்தில்
ஏறி கம்பீராமாக அமரும் நெஞ்சார நம்புகிறேன். அந்த
நம்பிக்கையுடன் முத்துபாரதியைத் தமிழன்னை கைவிரித்து
வரவேற்கிறாள்"- வாழ்த்துக்களுடன் மோலண்மை பொன்னுச்சாமி.

பரபரப்பான அஞ்சல் துறையில் பணிபுரிந்து கொண்டு இவரால் எப்படி ? முத்தான சிறுகதைகளை எழுத முடிகின்றது என்று வியந்து போனேன். மகாகவியின் பெயரைத் தனது பெயராக கொண்டிருப்பதாலேயே இலக்கிய ஆர்வம் பிறந்து சிறுகதை எழுதி வருகிறார் திரு.முத்துபாரதி. நல்முத்திரை பதிக்கும் பாரதி. சிறுகதை இலக்கியத்தில் இவருக்கு சிறந்த இடம் உண்டு. இவருடைய பெற்றோர்கள் தொலைநோக்கு சிந்தனையாளர்களாக இருக்க வேண்டும். முத்தான கதைகளை பாரதியின் சொல்வளத்துடன் படைப்பார் என்று அறிந்தே முத்துபாரதி என பெயர் சூட்டி இருக்க வேண்டும்.

முதல் கதையின் பெயர் "ரூல் ராமசாமியின் புதுமனை புகுவிழா" எழுத்தாளர் திரு.முத்துபாரதியிடம் சிறிய வேண்டுகோள். வருங்காலங்களில் ஆங்கிலச் சொற்களைத் தவிர்க்க வேண்டும். தொ(ல்)லைக்காட்சிகள் தான் திட்டமிட்டு ஆங்கிலம் கலந்து தமிழ் பேசி, தமிழ்க் கொலையை தினமும் நடத்தி வருகின்றனர். முற்போக்கு சிந்தனையுள்ள எழுத்தாளர்கள், கவிஞர்கள் முடிந்தளவிற்கு ஆங்கிலச் சொல் தமிழில் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். ஆங்கிலச்சொல் கலப்பு நிலை தொடர்ந்தால் தமிழ்மொழி சிதையும்.

"சட்டம் பேசும் இராமசாமி" என்று எழுதினாலும் சிறப்பாகவே இருக்கும். புதுமனை புகுவிழாவிற்கு புது வீட்டில் தெளிக்க ஒரு குடம் தாமிரபரணி தண்ணீர் எடுத்துக் கொள்ள அனுமதி வேண்டும் என வட்டாட்சியருக்கு ஒரு மனுவை பத்திரிக்கையுடன் இணைத்து அனுப்புகிறார். அதன்பின் அவர் படும் பாட்டை, எள்ளல் சுவையுடன், சிந்திக்கும் வண்ணம் நல்ல கதையமைப்பு. நேர்மையாக நடக்க வேண்டும் என்று நினைப்பவர்களை இந்த சமுதாயம் நேர்மையாக நடக்க விடுவதில்லை என்பதை நன்கு பதிவு செய்துள்ளார். தாமிரபரணியில் ஒரு குடம் தண்ணீர் எடுக்க அனுமதி கேட்கிறார். ஆனால் அனுமதியின்றி மணல் கொள்ளையடித்து விடுகின்றது ஒரு கூட்டம் இன்று.

இப்படி ஒவ்வொரு கதையிலும் மனிதனை நெறிப்படுத்தும் விதமாக நல்ல பல கருத்துக்கள் உள்ளது. அவளுக்குப் புதிரென்று பெயர் என்ற கதையில் நூல் ஆசிரியர் அஞ்சல் அலுவலகத்தில் பணிபுரிவதால். அலுவலகத்தில் நடைபெறும் நிகழ்வுகளை நன்கு பதிவு செய்துள்ளார். அலுவலகத்தில் ஆண்,பெண் இருவர் நண்பராக இருந்தால், கிசுகிசு அலுவலகத்தில் எழுவதையும், இருவருக்கும் சிந்தனை ஒரே அலைவரிசையில் இருந்ததால் நண்பர்களாவது பின் பிரிவு வந்து விடுமோ? எனப் பயந்து நட்பைத் தவிர்ப்பது என கதையைப் படித்து முடித்ததும் அவரவர் அலுவலக மலரும் நினைவுகளைத் தோற்றுவிக்கின்றது. இது தான் படைப்பாளியின் வெற்றி.

நான் காணாமல் போகிறேன் என்ற நூலின் பெயரில் உள்ள கதை படித்து நெகிழ்ந்து போனேன். திருநங்கையாக மாறும் போது சந்திக்கும் வாழ்க்கைப் போராட்டத்தை சிறப்பாக எடுத்து இயம்பி உள்ளார். இன்று கூட செய்தித் தாளில் படித்தேன். இறுதியாண்டு மருத்துவ மாணவர்கள் குடித்து விட்டு, முதலாண்டு மாணவர்களை நிர்வாணப்படுத்தி, தரையில் நீச்சலடிக்கச் சொல்லி அவமானப்படுத்தியதாக, மாணவ சமுதாயம் கடுமையான சட்டம் போட்டும் இன்னும் திருந்தவில்லையே என நினைக்கும் போது வேதனையாக இருந்தது. கதை நாயகன் மீனாட்சி சுந்தரம் திருநங்கையாக மாற ஆரம்பித்ததும், குடும்பத்தின் நலன் கருதி, கடிதம் எழுதி வைத்து விட்டு காணாமல் போவதாக கதை முடிகின்றது. ஆனால் இன்றைக்கு திருநங்கைகள் பற்றி உயர்ந்த சிந்தனை சமுதாயத்தில் பதியப்பட்டு வருகின்றது. இனி காணாமல் போக வேண்டிய அவசியம் இருக்காது. சமுதாயம் அவர்களைப் புரிந்து கொள்ளும். திருநங்கைகள் பலர் அரிய பல சாதனைகளை நிகழ்த்தி வருகின்றனர். உதாரணம், மதுரையில் பிறந்த நர்த்தகி நடராஜ், தொலைக்காட்சி தொகுப்பாளர் ரோஸ்.

இப்படி 15 கதைகளிலும் பல்வேறு செய்திகள் உள்ளது. குறிப்பாக படிக்கும் எல்லோருக்கும் எளிதில் புரியும் விதமாக கதைகள் உள்ளது. கல்கி, செம்மலர், உயிர்எழுத்து போன்ற இதழ்களில் பிரசுரமான தரமான சிறுகதைகளைத் தொகுத்து நூலாக்கி உள்ளார். அஞ்சல் துறையில் பணிபுரிந்து கொண்டே தினந்தோறும் பல்வேறு மனிதர்களை உற்றுநோக்குகின்றார். கேள்விப்பட்ட மனதைப் பாதித்த விசயங்களை சிறுகதையாக்கி விடுகிறார். தொலைக்காட்சி பார்க்கும் உலகத்திலிருந்து விடுபட்டு நூல்கள் படிக்கும் உலகமாக மாற வேண்டும் இந்த சமுதாயம்.

பாசஞ்சர் ரயிலும் பட்டாளத்தாரும் என்ற கடைசி கதையில் மனைவி இறந்ததும். மனம் உடைந்து போன காளிமுத்துவிற்கு ஆறதலாக இருந்தது அவர் நேசித்த எருமை மாடு. சின்ன மகன் வந்து அந்த மாட்டையும் அவிழ்த்துக் கொண்டு சென்றதும். துடித்து போகிறார். மனம் நொந்து வெந்து உடைந்து சாதாரண புகைவண்டியில் பயணப்பட்டு இறந்து போகிறார். தமிழர்களின் விலங்கு நேசத்தை பறைசாற்றும் முத்திரை கதை. மொத்தத்தில் சிறுகதை விரும்பிகளுக்கு நல்விருந்து.



    Tags :    
 நான் காணாமல் போகிறேன் -  நூல் விமர்சனம் : கவிஞர் இரா.இரவி,  நான் காணாமல் போகிறேன் -  நூல் விமர்சனம் : கவிஞர் இரா.இரவி,  நான் காணாமல் போகிறேன் -  நூல் விமர்சனம் : கவிஞர் இரா.இரவி,
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 இறையன்பு களஞ்சியம் – நூல் விமர்சனம் : கவிஞர் இரா.ரவி
தினம் ஒரு கருத்து கூறும் நவீன நூலிது தொகுப்பாசிரியர் : தமிழ்த்தேனீ இரா.மோகன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா.ரவி இளைஞர்களின் நம்பிக்கை நட்சத்திரமாகத் திகழும் திரு. இறையன்பு இஆப அவர்களின் களஞ்சியம். உலகப் பொதுமறையான திருக்குறளுக்கு உரை எழுதினார்கள், எழுதுகிறார்கள், எழுதுவார்கள். ஆது போல

மேலும்...

 மிதக்கும் சிற்பங்கள் , நூல் விமர்சனம் : கவிஞர் இரா.ரவி
நூல் ஆசிரியர் : கவிஞர் பரிமளாதேவி வேளியீடு : முள் சிற்றிதழ் விலை ரூ.10 நூலின் தலைப்பே நம்மை சிந்திக்க வைக்கின்றது. பொதுவாக சிற்பங்கள் மிதக்காது. வித்தியாசமான தலைப்பு எல்லா கவிஞர்களின் முதல் கவிதை காதல் கவிதையாகத்தான் இருக்கும். அந்த வகையில் நூலாசிரியர் கவிஞர் பரிமளாதேவியின் காதல்

மேலும்...

 தொட்டு விடும் தூரம் தான் வெற்றி - நூல் விமர்சனம்:கவிஞர் இரா.இரவி
நூலின் பெயர் :தொட்டு விடும் தூரம் தான் வெற்றி நூல் ஆசிரியர் : கவிஞர் கவிதாசன் கோவை மாவட்ட ஆட்சியர் திரு.வெ.பழனிக்குமார் இஆப அவர்களின் அணிந்துரை இந்த நூலின் வரவேற்பறையாக உள்ளது. "கோவைக்கு கிடைத்த மிகப்பெரிய கவிதைச் சொத்து" என்று நூலாசிரியர் கவிஞர் கவிதாசன் பற்றி குறிப்பிடுகின்றார்,

மேலும்...

 பாரதி இன்று இருந்திருந்தால் : நூல் விமர்சனம் – கவிஞர் இரா.இரவி
பாரதி இன்று இருந்திருந்தால்

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match




























மகளிர்























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in