tamilkurinji logo


 

மரணம் வரை – நூல் ஆசிரியர் : ஆ.திருநாவுக்கரசன்,நூல் விமர்சனம் : முனைவர் ச.சந்திரா,




மரணம் வரை – நூல் ஆசிரியர் : ஆ.திருநாவுக்கரசன்,நூல் விமர்சனம் : முனைவர் ச.சந்திரா

First Published : Thursday , 5th November 2009 05:08:53 PM
Last Updated : Wednesday , 31st December 1969 05:00:00 PM




Warning: Division by zero in /home/content/14/7948114/html/tamilkurinji/Ilakkyam_details.php on line 303

மரணம் வரை – நூல் ஆசிரியர் : ஆ.திருநாவுக்கரசன்,நூல் விமர்சனம் : முனைவர் ச.சந்திரா,
ஜனனம் முதல்…(பாட்டிலக்கியம்)

வாழ்வில் துவங்கி வீழ்வில் நிறைவுறுகின்ற எண்பது பக்க உள்ளடக்கத்தைக் கொண்ட ஏற்றமிகு நூல் இது. கவிஞரின் கன்னி முயற்சி இந்நூல் என வாசிப்போரால் யூகிக்க இயலாதபடி சொல்நயமும், பொருள்நயமும், இலக்கணநயழும், தொடைநயழும், நூலில் இழையோடுகின்றது. இருபத்தாறு தலைப்புகளை உள்ளடக்கிய இணையற்ற நூலாம் இதனை, தவழும் வயதிலேயே நன்னடை பயிலும் முதிர்ச்சித் தன்மையுடைய முத்திரை நூல் என்றும் கூறலாம்.

முன் அட்டைப்பட விளக்கம் :

மனிதச் செடி உயிர் வாழ்தலுக்கானப் பச்சையத்தைத் தயாரித்து தருவதற்கு ~மரணம் வரை| என்ற இந்த நூல் தவறுவதில்லை என்பதை முன் அட்டைப்பட விளக்கம் சொல்லாமல் சொல்கின்றது. மூன்று காலங்களையும் மனதில் வைத்து மனித குலம் பயணிக்கின்ற வேளையில் இந்த நூல் கலங்கரை விளக்காக இருந்து கரை சேர்க்கும் என்பதனை தலைப்பிற்கு முன்னுள்ள முப்பெரும் புள்ளிகளும் கூறுகின்றது. அவ்வாறு கரை சேர்க்கின்ற பொழுது வாசித்தோர் வாழ்வானது கருமையிலிருந்து பசுமைக்கு மாறும் என்று அட்டைப்பட வண்ணம் சொல்கின்றது.

பின் அட்டைப்பட விளக்கம் :

கவிஞனின் எதிர்கால முகவரியை ஏற்றமுடன் உரைக்கிறது பின் அட்டைப்படம்.

வீட்டுப்பற்றை ஓரங்கட்டு!
நாட்டுப் பற்றில் நலங்காணு!”

என்று கூறுவது போல் கவிஞர் ஆ.திருநாவுக்கரசன் அவர்களின் புகைப்படம் உள்ளது.

பருந்துப் பார்வை :
“மரணம் வரை” – என்ற இந்த நூலில் சருகுகள் உயிர்பெறுகின்றது: ஊர்வன உல்லாச பறவையாகின்றது: பொய்கை புத்திமதி சொல்கின்றது: நாணல் நம்பிக்கை ஊட்டுகின்றது: உளி பாறையை நொறுக்குவதோடு மனித நெஞ்சத்தையும் நொறுக்குகின்றது: சாம்பல் துளிர்க்கின்றது: உலோகங்கள் உதிர்க்கின்றன தத்துவமலர்களை! களிமண் கற்றுத்தருகின்றது பாடத்தை!. மெல்லிய பஞ்சு “மெத்தனமாய் இராதே” என்கிறது. காந்தம் கவி பாடுகின்றது. கட்டிடத்திற்குள் மறைந்திருக்கும் கம்பி கண் சிமிட்டுகிறது. ஆமையோ அடக்கி வாசிக்கின்றது.

அங்கும் இங்குமாக :

மரத்தை மனிதன் தரம் தாழ்த்தி நடத்தும் விதத்தினால், மரமும் மனிதனும் கவிஞன் கரங்களில் திணை மாறுகின்றது. டார்வின் குளத்தில் இறங்கி நீச்சலடித்தாரோ என்னவோ, இந்நூலை வாசிக்கின்ற அனைவரையும் குளத்தில் இறங்க வைத்து நீச்சலடிக்க வைத்து விடுகின்றார் கவிஞர். கூடவே “வலுவுள்ளது பிழைக்கும் எனும் வாழ்கைப் பிடிப்புக் கொள்கையும் கற்றுத் தருகின்றார், நம்மில் தொலைக்காட்சிப் பெட்டியைத் திட்டித் தீர்ப்பவர் பலரிருக்க, அதனை அந்நியப்படுத்தாமல் அமுதக்கலசமாய் வர்ணித்த முதல் கவிஞர் இவரே! இல்லறக் கோட்பாடு(ப.59) மற்றும் இல்லற மறுப்புக் கோட்பாடு(ப.77) பற்றிய கவிதை வரிகள் குறியீட்டு உத்தியுடன் படைக்கப்பட்டிருக்கும் விதம் அற்புதம்.

நரம்போட்டம் :

உலகோர் அனைவரும் ஒதுக்கி நிற்க தானே தேடி ஓடி வந்து ஒட்டிக் கொள்ளும் வறுமையை, எதிர்த்துக் கேள்வி கேட்கும் கவிஞரின் திறமை அபாரம்! கருவாடு கூட மீனாகின்றது கவிஞரின் கவிதையில். அசைவம் பற்றிய கருவாக இருப்பினும் கருத்தெல்லாம் சைவம் தான். முட்டையின் முழுப்பரிமாணத்தை முரண்பாட்டுடன் நோக்குகிறார் கவிஞர்.” உன் சந்ததிக்கு வழிவிடும் உன்னதமே மரணம் “(ப.79) என்ற கவிஞரின் மரணத்திற்கான இலக்கணம் மனதில் நிற்கின்றது. “நாங்கூரம் பாய்ச்சிய நாவாயாய்’ அங்கேயே நின்று விடுகின்றேன்’(ப.73) எனும் வரிகள் அதீத பாசத்தைப் பிரதிபலிக்கும் அருமையான வரிகள் எனலாம். முப்பாலில் மூன்றாவது பாலை விஞ்சுகிறது எழுபத்து நான்காம் பக்க ஏகாந்த மறுப்புக் கவிதை. வாழ்க்கைத் தத்துவத்தைப் படம் பிடித்துக் காட்டுகிறது. எதிர்காலக் கோட்பாடு பற்றிக் கூறும் காமராசர் கவிதை(ப.37) வண்மைக் கோட்பாடு பற்றிக் கூறும் பொழுதே வண்மை மறுப்புக் கோடபாட்டையும் (ப.71) கூடவே உரைக்கின்றார் நிச்சயமான சொர்க்கம் கவிதையில் கவிஞர் "முதியோர் இல்லங்களெல்லாம் மூட வேண்டும்" (ப.24) என்ற கவிஞரின் கட்டளை அரசு கட்டளையையும் தாண்டிய அதிரடி கட்டளையாக உள்ளது. ஆசை மறுப்பு கோட்பாட்டிற்கான எதிர் கோட்பாடு(ப.50) இளைய தலைமுறைகளுக்கேற்ற இனிய கோட்பாடு எனலாம். அஃறினை உயிர் வழி உயர்திணைக்கும் பாடம் கற்றுக் கொடுக்கிறது ~வாழ்க்கை| கவிதை!(ப.20-21) சமூக இழிநிலையைச் சுட்டிக்காட்டி உள்ளத்து உணர்வுகளை உலுக்குமாறு வார்த்தைகளைப் பயன்படுத்துவதில் கவிஞர் வல்லவர் என்பதற்கான சான்று வரிகள் இதோ!

“படி என்று யார் சொன்னாலும்
பசி என்று காதில் விழும்”

(ப.36) புலம் பெயர்ந்தோர் பற்றிய கவிதை (ப.51-55) வாசிப்போர் மனதை விட்டு இடம் பெயராமல் இருக்கும் வண்ணம் படைக்கப்பட்டுள்ளது.

முடிக்கும் முன்:

மனித மனம் பக்குவப்படவும் தடங்கல் இல்லாமல் வாழ்க்கைப் பயணத்தைச் சீராக மேற்கொள்ளவும் இந்த நூல் முழுமையாக உறுதுணை புரியும்!

“மாற்றம் பெறா மனதில்
எது விழுந்தால் என்ன
புது வடிவம் பெறாது”
எனும் கவிஞரின் எதிர்மறைக் கூற்றைப் பொய்யாக்கும் விதமாக இந்நூலை வாசிப்போர் அனைவரும் நல்மாற்றம் பெறுவர் என்பது உறுதி



    Tags :    
மரணம் வரை – நூல் ஆசிரியர் : ஆ.திருநாவுக்கரசன்,நூல் விமர்சனம் : முனைவர் ச.சந்திரா, மரணம் வரை – நூல் ஆசிரியர் : ஆ.திருநாவுக்கரசன்,நூல் விமர்சனம் : முனைவர் ச.சந்திரா, மரணம் வரை – நூல் ஆசிரியர் : ஆ.திருநாவுக்கரசன்,நூல் விமர்சனம் : முனைவர் ச.சந்திரா,
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 இறையன்பு களஞ்சியம் – நூல் விமர்சனம் : கவிஞர் இரா.ரவி
தினம் ஒரு கருத்து கூறும் நவீன நூலிது தொகுப்பாசிரியர் : தமிழ்த்தேனீ இரா.மோகன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா.ரவி இளைஞர்களின் நம்பிக்கை நட்சத்திரமாகத் திகழும் திரு. இறையன்பு இஆப அவர்களின் களஞ்சியம். உலகப் பொதுமறையான திருக்குறளுக்கு உரை எழுதினார்கள், எழுதுகிறார்கள், எழுதுவார்கள். ஆது போல

மேலும்...

 மிதக்கும் சிற்பங்கள் , நூல் விமர்சனம் : கவிஞர் இரா.ரவி
நூல் ஆசிரியர் : கவிஞர் பரிமளாதேவி வேளியீடு : முள் சிற்றிதழ் விலை ரூ.10 நூலின் தலைப்பே நம்மை சிந்திக்க வைக்கின்றது. பொதுவாக சிற்பங்கள் மிதக்காது. வித்தியாசமான தலைப்பு எல்லா கவிஞர்களின் முதல் கவிதை காதல் கவிதையாகத்தான் இருக்கும். அந்த வகையில் நூலாசிரியர் கவிஞர் பரிமளாதேவியின் காதல்

மேலும்...

 தொட்டு விடும் தூரம் தான் வெற்றி - நூல் விமர்சனம்:கவிஞர் இரா.இரவி
நூலின் பெயர் :தொட்டு விடும் தூரம் தான் வெற்றி நூல் ஆசிரியர் : கவிஞர் கவிதாசன் கோவை மாவட்ட ஆட்சியர் திரு.வெ.பழனிக்குமார் இஆப அவர்களின் அணிந்துரை இந்த நூலின் வரவேற்பறையாக உள்ளது. "கோவைக்கு கிடைத்த மிகப்பெரிய கவிதைச் சொத்து" என்று நூலாசிரியர் கவிஞர் கவிதாசன் பற்றி குறிப்பிடுகின்றார்,

மேலும்...

 பாரதி இன்று இருந்திருந்தால் : நூல் விமர்சனம் – கவிஞர் இரா.இரவி
பாரதி இன்று இருந்திருந்தால்

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in