மிதக்கும் சிற்பங்கள் , நூல் விமர்சனம் : கவிஞர் இரா.ரவி,
மிதக்கும் சிற்பங்கள் , நூல் விமர்சனம் : கவிஞர் இரா.ரவி
First Published : Thursday , 11th March 2010 09:08:23 AM Last Updated : Wednesday , 31st December 1969 05:00:00 PM
Warning: Division by zero in /home/content/14/7948114/html/tamilkurinji/Ilakkyam_details.php on line 303
நூல் ஆசிரியர் : கவிஞர் பரிமளாதேவி
வேளியீடு : முள் சிற்றிதழ் விலை ரூ.10
நூலின் தலைப்பே நம்மை சிந்திக்க வைக்கின்றது. பொதுவாக சிற்பங்கள்
மிதக்காது. வித்தியாசமான தலைப்பு எல்லா கவிஞர்களின் முதல் கவிதை காதல்
கவிதையாகத்தான் இருக்கும். அந்த வகையில் நூலாசிரியர் கவிஞர்
பரிமளாதேவியின் காதல் கவிதை தொகுப்பு இந்நூல். கவிதை குறித்த நன்கு
புரிதல் இருப்பதால் நூலில் உள்ள கவிதைகள் அவரவர்களின் காதல் நினைவுகளை
தோற்றுவிக்கின்றது. சங்க காலத்தில் நிறைய பெண் கவிஞர்கள் இருந்தார்கள்.
ஆனால் இன்று அந்த அளவிற்கு இல்லை என்பதே உண்மை. கவிஞர் பரிமளாதேவியின்
கவிதைகள் சிறப்பாக உள்ளது. இனிவரும் காலங்களில் சமுதாயத்திற்கான கவிதைகளை
வடிக்க வேண்டும். நூலின் முதல் கவிதையே முத்தாய்ப்பாக உள்ளது.
எனக்கு பதில்
உன்னில் என்னைத் தொலைத்தப் பின்
என் கண்ணாடி கூட எனக்கு பதில்
உன் பிம்பத்தையே பிரதிபலிக்கிறது
எதிர்காலம் தொலைத்த நிகழ்காலமாய்
மௌனத்தின் வார்த்தைகள் கூட எனக்கு மறந்து விட்டது.
காதலித்தவர்களுக்கு இந்தக் கவிதை நன்கு விளங்கும். காதலில் லயித்த
காலத்தில் காதலன் கண்ணாடி பார்த்தால் காதலி தெரிவாள். காதலி கண்ணாடி
பார்த்தால் காதலன் தெரிவான். காலங்காலமாய் தொடரும் உணர்வுகளை நன்கு பதிவு
செய்துள்ளார்.
நீயும்,நானும் நிலவினை ரசித்தோம்
நீ நிலவை ரசிக்கும் அழகில் மயங்கி
நான் உனக்கே ரசிகையாகிப் போனேன்
நிலவை எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பதில்லை. அத்தனை அழகு நிலா. அதனை
ரசிப்பதே ஒரு அழகு என்கிறார். ரசிப்பதை ரசிப்பதும் தனி சுகம் தான்.
உலகப் பொதுமறை படைத்த திருவள்ளுவர் மழலைகள் பற்றி அற்புதமாக திருக்குறள் வடித்து இருப்பார்.
குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளாதவர்
அதுபோல மழலையின் சிறப்பை விளக்கும் கவிதை இதோ!
மழலை
நடமாடும் நூலகமாய் நவீன ஓவியமாய்
நூதன சிந்தனையில் எதற்கும் இணையற்ற
உலா வரும் உயிர்ச்சிலை
இன்றைய மழலைகள் நம்மை விட அறிவாளிகளாக இருக்கின்றனர் என்பது உண்மை. மிகச்
சுருக்கமான சொற்களின் மூலம் மழலைகளின் பெருமையை பறைசாற்றி உள்ள
கவித்துவத்திற்கு பாராட்டுக்கள்.
உன்கவிதை
உன் கவிதைப் புத்தகத்திற்கு
நான் பூக்களையே அடையாளம் வைக்கிறேன்
உன் கவிதை அத்தனை மென்மையானது
உன் மனதைப் போல்.
காதலன் கவிஞனாக இருந்து நூலும் எழுதி, காதலிக்கு தந்து இருந்தால் இந்த
நிகழ்வு கட்டாயம் நடந்து இருக்கும். காதலன் நினைவு வருகையில் அவனது நூலை
படிப்பார்கள்.
நாளை
தினம் தினம் புத்தம் புதிய தகவல்களோடு
விந்தையான விடியல்களின் அறிய முடியா ரகசியம்
நாளையைப் பற்றி யார் அறிவார்கள்? என்பார்கள், ஆனால் கவிஞர் பரிமளாதேவி நாளையைப் பற்றி நன்கு அறிந்துள்ளார்.
மீன்களைப் பற்றி மிக வித்தியாசமாக சிந்தித்து உள்ளார்.
கற்பனை
மீன்களுக்கு ஆடையாக தண்ணீர் இருப்பதனால்
தன் ஆடை இழந்தபின் மீன்கள் உயிர் வாழ்வதில்லையோ?
அடுத்த கவிதையில் மிகவும் ரசனை மிக்க வரிகள்
நீ
மறக்க முடியாத நாட்களின் மறுபதிப்பாக நீ இருக்கின்றாய்
உன் பார்வை பரிமாற்றத்திற்கு பின் என் வார்த்தைகளுக்கு வறுமை கூடித் தான் போனது
உன்னை ஞாபகப்படுத்தும் அந்த நிமிடங்களில் நான் தொலைந்து போகிறேன்.
உன்னை மறந்து விட்டேன் என்னைப் பார்க்க வராதே என உதடுகள் சொன்னாலும், உள்ளத்தில் ஒரு ஓரத்தில் நினைவுகள் இருப்பது நிஜம்.
ஆரம்பித்த இடத்திலேயே முடிகிறது
புவிஈர்ப்பு விசையைப் போல உன் ஞாபகம்
காலச்சக்கரம் முன்னோக்கிச் செல்ல
என் ஞாபக வாகனம் மட்டும்
உன்னைக் காண பின்னோக்கியே செல்கிறது
காயங்கள் எல்லாம் ஆறிவிட்டது
ஆனால் வடுக்கள் மட்டும் மறயவே இல்லை
காதலித்தவர்களுக்கு சூழ்நிலை காரணமாக இணையாதவர்களுக்கு ஆறதலாக உள்ளது இந்தக் கவிதை.
சருகாக
உன் ஞாபகத்தீயில் என்னை சருகாகவாவது
இணைத்துக் கொள்வாயா?
சக்திமிக்க சாம்பலாக உன்னோடு கலந்திடுவேனே
நீ பாராட்டும் வார்த்தைக்கு முன்
விருதுகள் கூட வெறும் துகள்களே
காதல் துணையின் பாராட்டிற்கு முன்னே எத்தனை பெரிய விருதுகளும் தூசி தான்
என்பதை நன்கு உணர்த்துகின்றது. நல்ல கவிதைகளின் தொகுப்பு நூல் இது.
கவிதைகளை படிக்கும் போது படிக்கும் வாசகர்களின் உள்ளத்தில் அவரவர் காதலை
மலரும் நினைவுகளாக தோற்றுவிக்கின்றது. இது தான் படைப்பாளியின்
வெற்றி.கவிஞர் உணர்ந்த உணர்வுகளை வாசகனும் உணருகின்றான். தொடர்ந்து பல
நூல்கள் எழுதி சாதனை படைக்க நூலாசிரியர் கவிஞர் பரிமளதேவிக்கு
வாழ்த்துக்கள்.
இறையன்பு களஞ்சியம் – நூல் விமர்சனம் : கவிஞர் இரா.ரவி தினம் ஒரு கருத்து கூறும் நவீன நூலிது
தொகுப்பாசிரியர் : தமிழ்த்தேனீ இரா.மோகன்
நூல் விமர்சனம் : கவிஞர் இரா.ரவி
இளைஞர்களின் நம்பிக்கை நட்சத்திரமாகத் திகழும் திரு. இறையன்பு இஆப அவர்களின் களஞ்சியம். உலகப் பொதுமறையான திருக்குறளுக்கு உரை எழுதினார்கள், எழுதுகிறார்கள், எழுதுவார்கள். ஆது போல
தொட்டு விடும் தூரம் தான் வெற்றி - நூல் விமர்சனம்:கவிஞர் இரா.இரவி
நூலின் பெயர் :தொட்டு விடும் தூரம் தான் வெற்றி
நூல் ஆசிரியர் : கவிஞர் கவிதாசன்
கோவை மாவட்ட ஆட்சியர் திரு.வெ.பழனிக்குமார் இஆப அவர்களின் அணிந்துரை இந்த
நூலின் வரவேற்பறையாக உள்ளது.
"கோவைக்கு கிடைத்த மிகப்பெரிய கவிதைச் சொத்து" என்று நூலாசிரியர் கவிஞர்
கவிதாசன் பற்றி குறிப்பிடுகின்றார்,
உண்மையே பேசுங்கள் - நூல் விமர்சனம் : கவிஞர் இரா.இரவி உண்மையே பேசுங்கள் - நூலின் ஆசிரியர் : திரு.ச.மணிமொழி இளங்கோ
நூல் ஆசிரியரின் பெயர் காரணப் பெயராக இருக்க வேண்டும். மணியான மொழியில்
இளங்கோவடிகள் போல வாழ்க்கைக்கு மிகவும் தேவையான உயர்ந்த பல கருத்துக்களை
உள்ளடக்கிய நூல்.
உண்மையே பேசுங்கள் என்று நூலின் தலைப்பை படித்தவுடன் நம்