tamilkurinji logo
 

யாரிவன் - நூல் விமர்சனம் : கவிஞர் இரா.இரவி,


யாரிவன் - நூல் விமர்சனம் : கவிஞர் இரா.இரவி

First Published : Thursday , 5th November 2009 05:19:57 PM
Last Updated : Wednesday , 31st December 1969 05:00:00 PM







யாரிவன் – நூல் ஆசிரியர்: கவிஞர் ரா.ராம்மோகன்

நூலின் அட்டைப்படம் அற்புதம். இயற்கை எழில் கொஞ்சும் வனமும், அருவியும் உள்ளத்தைக் கொள்ளை கொள்கின்றன. இனிய நண்பர் கவிஞர் மு.செல்லாவின் அணிந்துரை சிறப்பாக உள்ளது. பெயரை உச்சரித்தாலே வீரம் பிறக்கும் மாவீரன் பகத்சிங் பற்றிய கவிதையான யாரிவன்? என்ற தலைப்பையே கவிதை நூலிற்;க்கு பெயராக்கியது மிகச் சிறப்பு. பகத்சிங் வீரன் மட்டுமல்ல, அவர் கடவுள் நம்பிக்கை இல்லாத நாத்திகர் என்ற கருத்தையும் நன்கு பதிவு செய்துள்ளார்.

எதிர்காலத்திட்டம் பற்றிப் பள்ளியில் கேட்கையில்
ஏராளமாய்ச் சம்பாதிப்பேன் என்று கூறாமல்
என்னுடைய தேசத்தை விட்டு வெள்ளையனை விரட்டுவேன்
என்று முழங்கிய சிங்கக் குருளை

இந்த வரிகளை படிக்கும் போது. 'விளையும் பயிர் முளையிலேயே தெரியும்' என்ற பொன்மொழி நினைவிற்கு வந்தது. இந்த அழகிய கவிதையை கருத்துச் சிதையாமல் மிக நுட்பமாக மொழிபெயர்த்து தந்த திரு.முகில்சன் அவர்களையும் பாராட்ட வேண்டும்.

நூலாசிரியர் கவிஞர் ரா.ராம்மோகன் இன உணர்வு மிக்கவர். "கண்ணீர்க் கவிதை" என்ற கவிதையில், ஈழத்தில் தமிழர்கள் படும் இன்னலை வடித்து உள்ளார். தமிழ்நாட்டு கவிஞர்களால் அதிகப்பட்சம், கவிதை தான் எழுத முடியும், வேறு எதுவும் பெரிதாக ஈழத்தமிழருக்கு செய்ய முடியாது- சூழ்நிலைக் கைதியாக தமிழ்நாட்டு தமிழன் உள்ளான்.

இலங்கையில் சுடுகாடு, இந்தியாவில் கருவாடு
என்னடி கொடுமையிது எம் தமிழன் படும் கொடுமை.

இயற்கையையும் மிக அழகாகப் பாடி உள்ளார். விதை நெல், நெல்மணிகளாக விளையும் விந்தையை விளக்கும் அழகிய கவிதை இதோ!

ஒரு துண்டுப் பொன்னைக் கொண்டு
ஓராயிரம் பொன்மணிகளைப்
பொன்னாரத்தில் கோர்த்துக் கொடுக்கும்
அற்புதப் பொற்கொல்லன்.

வித்தியாசமான சிந்தனை. பூமியை தாயாகத் தான் பலர் பாடி உள்ளனர். ஆனால், இவரோ பொற்கொல்லன் என்கிறார். ரசனை மிக்க நல்ல கற்பனை.

வரதட்சணைக் கொடுனை பற்றி, எய்ட்ஸ் பற்றி, தீபாவளி பற்றி, கடல் பற்றி இப்படி பல்வேறு தலைப்புகளில் மிக அழகாக நுட்பமாக கவிதை பாடி உள்ளார். இன்று மூட நன்பிகைகளில் ஒன்றாகி விட்டது, ஜனநாயகம் என்பது பணநாயகம் ஆகி விட்டது. ஒரு நாள் தரும் நன்கொடைக்கு ஆசைப்பட்டு அய்ந்து வருடங்களை அடகு வைத்து விடும் அவலம் இன்று தேர்தல் என்ற பெயரில் அரங்கேறி வரும் அவலத்தைச் சுட்டும் கவிதை.

பொதுத்தேர்தல்

வாக்குறுதிகளில் மயங்கி
இம் முடி சூட்டு விழாவில்
நம் நிர்வாணத்தை
நீட்டித்துக் கொள்கிறார்கள்

ஈழத்தமிழன் என்ற சொல்லிற்கு கவிஞர் மிகச்சிறப்பாக விளக்கம் தந்துள்ளார்.

ஈழம்

வெட்கம்,மானம்,ரோஷம்,சூடு,சொரணை
ஈரம்,வீரம் உள்ள தமிழன்
உலகின் எந்த மூலையிலிருந்தாலும்
அவன் பேர் ஈழத் தமிழன்

இன்று உலக அரங்கில் அன்னைத் தமிழுக்கு அழியாப் புகழை இணையத்தில் வழங்கி வரும் ஈடு இணையற்ற உழைப்பாளிகள் யார் என்றால் அது ஈழத் தமிழர்கள் என்றால் மிகையன்று.வலி மிகுந்த புலம் பெயர்ந்த வாழ்விலும் அன்னைத் தமிழை அரியணை ஏற்றி மகிழ்கின்றனர்.

அநீதி
சுருக்கெனக் கடித்த
சித்தெறும்புக்கு
மரண தண்டனை

ஹைக்கூ வடிவிலும் கவிதைகள் உள்ளது. சட்டம் பற்றி ஆங்கிலக் கவிதையும் மிக நன்று.

LAW

For each and every action there is an
Equal and opposite reaction it is Newton's Law
For each and every action there is a corruption
It's our Nation's Law.

நமது நாட்டில் எங்கும் ஊழல் தலைவிரித்து ஆடவதை மிக அழகாக சாடி உள்ளார். நியூட்டன் விதியைச் சொல்லி இதனைப் படிக்க கசப்பாக இருந்தாலும் நாட்டில் நடக்கும் உண்மையைக் குறிப்பிட்டுள்ளார்.

இப்படி நூல் முழுவதும் நல்ல பல கவிதைகள் உள்ளன. நூல் ஆசிரியர் தொடர்ந்து நல்ல பல கவிதை நூல்களை வெளியிட வாழ்த்துக்கள். நூலாசிரியரிடம் ஒரு வேண்டுகோள். சு. ராம்மோகன் என்று முன்னெழுத்தில் உள்ள ஆங்கிலத்தை விடுத்து அழகுத் தமிழ் பயன்படுத்த வேண்டுகிறேன்.



    Tags :    
யாரிவன் - நூல் விமர்சனம் : கவிஞர் இரா.இரவி, யாரிவன் - நூல் விமர்சனம் : கவிஞர் இரா.இரவி, யாரிவன் - நூல் விமர்சனம் : கவிஞர் இரா.இரவி,
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 இறையன்பு களஞ்சியம் – நூல் விமர்சனம் : கவிஞர் இரா.ரவி
தினம் ஒரு கருத்து கூறும் நவீன நூலிது தொகுப்பாசிரியர் : தமிழ்த்தேனீ இரா.மோகன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா.ரவி இளைஞர்களின் நம்பிக்கை நட்சத்திரமாகத் திகழும் திரு. இறையன்பு இஆப அவர்களின் களஞ்சியம். உலகப் பொதுமறையான திருக்குறளுக்கு உரை எழுதினார்கள், எழுதுகிறார்கள், எழுதுவார்கள். ஆது போல

மேலும்...

 மிதக்கும் சிற்பங்கள் , நூல் விமர்சனம் : கவிஞர் இரா.ரவி
நூல் ஆசிரியர் : கவிஞர் பரிமளாதேவி வேளியீடு : முள் சிற்றிதழ் விலை ரூ.10 நூலின் தலைப்பே நம்மை சிந்திக்க வைக்கின்றது. பொதுவாக சிற்பங்கள் மிதக்காது. வித்தியாசமான தலைப்பு எல்லா கவிஞர்களின் முதல் கவிதை காதல் கவிதையாகத்தான் இருக்கும். அந்த வகையில் நூலாசிரியர் கவிஞர் பரிமளாதேவியின் காதல்

மேலும்...

 தொட்டு விடும் தூரம் தான் வெற்றி - நூல் விமர்சனம்:கவிஞர் இரா.இரவி
நூலின் பெயர் :தொட்டு விடும் தூரம் தான் வெற்றி நூல் ஆசிரியர் : கவிஞர் கவிதாசன் கோவை மாவட்ட ஆட்சியர் திரு.வெ.பழனிக்குமார் இஆப அவர்களின் அணிந்துரை இந்த நூலின் வரவேற்பறையாக உள்ளது. "கோவைக்கு கிடைத்த மிகப்பெரிய கவிதைச் சொத்து" என்று நூலாசிரியர் கவிஞர் கவிதாசன் பற்றி குறிப்பிடுகின்றார்,

மேலும்...

 பாரதி இன்று இருந்திருந்தால் : நூல் விமர்சனம் – கவிஞர் இரா.இரவி
பாரதி இன்று இருந்திருந்தால்

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match




























மகளிர்























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in