tamilkurinji logo


 

விற்பனைக்கு புத்தன் (நூல் விமர்சனம் – கவிஞர் இரா.இரவி),




விற்பனைக்கு புத்தன் (நூல் விமர்சனம் – கவிஞர் இரா.இரவி)

First Published : Thursday , 5th November 2009 05:11:36 PM
Last Updated : Wednesday , 31st December 1969 05:00:00 PM




Warning: Division by zero in /home/content/14/7948114/html/tamilkurinji/Ilakkyam_details.php on line 303

விற்பனைக்கு புத்தன் (நூல் விமர்சனம் – கவிஞர் இரா.இரவி), நூல் ஆசிரியர் – கவிஞர் ம.ஞானசேகரன்

அட்டைபடமே அற்புதம் நவீன ஒவியத்தின் மூலம் நம்மை வரவேற்கிறது. இவரது ஹைக்கூ கவிதைகளைப் பிரசுரம் செய்து உதவிய அனைத்து சிற்றிதழ்களுக்கும் தனது நன்றியை அழகாகப்பதிவு செய்துள்ளார். என்னுரையையும் கவிதை வடிவில் மிகச் சிறப்பாக எழுதி உள்ளார். “தமிழா நீ பேசுவது தமிழா” என்ற ஒரே வரியின் மூலம் உலகத்தமிழர்கள் அனைவரிடமும் அறிமுகமாகிவிட்ட உணர்ச்சிக்கவிஞர் காசி ஆனந்தன் அணிந்துரை நூலிற்கு அழகு கூட்டுகின்றது.

சிறுவயதில் திக்கு வாய் குறை இருந்த பேராசிரியர் பெரியார்தாசன் இன்றைக்கு தமிழகத்தின் தலைசிறந்த பேச்சாளராக உயர்ந்தார்.முயற்சி திருவினையாக்கும் என்ற வள்ளுவன் வாக்கை மெய்ப்பித்தவர். அவரது அணித்துரையும் நூலிற்கு மெருகு கூட்டுகின்றன. கவிஞர்கள் வையவன், சீனு தமிழ்மணி, புதுவைத் தமிழ் நெஞ்சன் ஆகியோரின் விரிவான அணிந்துரைகள் நூலின் சிறப்பை நன்கு எடுத்து இயம்புகின்றன. ஓவியத்தை பார்க்கின்றனர்.சாலையில் ரசிக்கின்றனர்.ஆனால் உதவிட எவருக்கும் மனம் வருவதில்லை.

ஓட்டிய வயிருடன்
சாலையில் வரைகிறான்
தொந்திக் கணபதி

நாட்டில் மதவெறியின் காரணமாக ஆயிரக்கணக்கான உயிர்கள் பலியாகியது “சிந்து சமவெளி நாகரீகம்” நாம் கேள்விப்பட்டு இருக்கின்றோம்.புகழ் பெற்ற இந்தச் சொல்லில் இரண்டு எழுத்தை மட்டும் மாற்றி மிகச்சிறப்பாக ஹைக்கூவாக்கி இருக்கிறார்.

குஜராத்
அயோத்தி
இந்து சமவெறி நாகரிகம்

தொல்லைக்காட்சியாகிவிட்ட தொலைக்காட்சிகளில் ராசிக்கல் விளம்பரத்தொல்லை நாம் பார்த்து இருக்கிறோம் மூடப்பழகத்தை சாடிடும் ஹைக்கூ

விரலில் மாட்டியிருந்தது
அதிட்டக்கல் மோதிரம்
துண்டிக்கப்பட்ட கை

அறிவியல் புயல்,மாமனிதர் அப்துல் கலாம் கூறுகிறா. எனக்கு கடவுள் நம்பிக்கை உண்டு அறிவியல் கோடி கோடி மைல்களுக்கு அப்பால் உள்ள கிரகங்கள் நம்வாழ்வில் தாக்கங்கள் ஏற்படுத்தும் என்பதை நான் நம்பவில்லை” என்கிறார். அதைப்போல் நூலாசிரியர் மூடநம்பிக்கைகளை கடுமையாகச் சாடுகிறார். இன்றைக்கு காலத்திற்கேற்ப முற்போக்குக் கருத்துக்களை ஹைக்கூ கவிதைகளில் மிகவும் நூட்பமாக படைத்து உள்ளார். இன்றைக்கும் கோயில்கள் பளிங்குக் கற்களில் கட்டுவதையும், இலட்சக்கணக்கான மதிப்புள்ள தங்கம், வைரம் ஆபரணங்கள் கோவிலுக்கு வழங்குவதையும் செய்தித்தாளில் பார்க்கிறோம். பட்டினிச் சாவுகள் வறுமையின் காரணமாக தற்கொலைகள் இச்செய்திகளையும் படிக்கிறோம்.

இந்த முரண்பாட்டை விளக்கும் நல்ல ஹைக்கூ

பாதையில் குடிசை
பளிங்குக் கோயில்
பாருக்குள்ளே நல்ல நாடு?

எதிர்காலம் பற்றி எல்லோருக்கும் உரைக்கும் சோதிடனுக்கு தன்னை தேள் கொட்டப் போகின்றது என்பது கூட தெரியவில்லை, எனவே சோதிடம் என்பது பொய் என்பதை எடுத்து இயம்பும் சிறந்த ஹைக்கூ

தேள் கொட்டியது
கணியனை
குறி சொன்ன நேரம்

இந்த ஹைக்கூவை படிக்கும் போது இன்றைக்கு ஊடகங்களில் சோதிடப் புரட்டை ஊக்குவிக்கும் போக்கு தொடர்வதற்கு கண்டனத்தை பதிவு செய்கிறது. புலப்படுகின்றது. பெரிய சோதிடர் என்று மார் தட்டிக் கொள்ளும் எவராவது சுனாமி வரும் என்று முன் கூட்டியே சொன்னார்களா? சொல்லவில்லையே! இதிலிருந்தே நாம் அறிந்து கொள்ளலாம். சோதிடர்களுக்கு முன் கூட்டிச் சொல்லும் எந்த சக்தியும் இல்லை என்பதை

பெண்ணடிமைத்தனத்திற்கு முடிவு கட்டி ஆணாதிக்கத்திற்கு கொட்டு வைக்கும் நுட்பமான ஹைக்கூ

கண்ணகியா?
மாதவியா?
கற்பிழந்தவன் கோவலன்

சிலகாலம் முன்பு வரை இந்தத் தலைப்பில் பட்டிமன்றங்கள் நடந்ததை நாம் அறிவோம். இந்த பிற்போக்குத்தனமான தலைப்பைச் சாடிடும் ஹைக்கூ இது

உழைக்கும் மக்களை நாடு அங்கீகரிக்கவில்லை என்பதைச் சாடிடும் ஹைக்கூ

கல்வெட்டில்
இல்லை
உழைத்தவன் பெயர்

இப்படி நூல் முழுவதும் சிந்தனை மின்னல்களை உருவாக்கும் மூட நம்பிக்கைகளைத் தகர்க்கும் பகுத்தறிவு சிந்தனையை வளர்க்கும், இன உணர்வு ஊட்டும், மிகச்சிறப்பான ஹைக்கூ கவிதைகளின் தோரணம்,படிக்கும் வாசகர்களின் உள்ளத்தில் அசைபோட வைக்கும் அற்புதக் ஹைக்கூ கவிதைகளைப் படைத்துள்ள கவிஞர் ம.ஞானசேகரனை எப்படி பாராட்டுவது என்றே தெரியவில்லை அற்புதம்.



    Tags :    
விற்பனைக்கு புத்தன் (நூல் விமர்சனம் – கவிஞர் இரா.இரவி), விற்பனைக்கு புத்தன் (நூல் விமர்சனம் – கவிஞர் இரா.இரவி), விற்பனைக்கு புத்தன் (நூல் விமர்சனம் – கவிஞர் இரா.இரவி),
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 இறையன்பு களஞ்சியம் – நூல் விமர்சனம் : கவிஞர் இரா.ரவி
தினம் ஒரு கருத்து கூறும் நவீன நூலிது தொகுப்பாசிரியர் : தமிழ்த்தேனீ இரா.மோகன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா.ரவி இளைஞர்களின் நம்பிக்கை நட்சத்திரமாகத் திகழும் திரு. இறையன்பு இஆப அவர்களின் களஞ்சியம். உலகப் பொதுமறையான திருக்குறளுக்கு உரை எழுதினார்கள், எழுதுகிறார்கள், எழுதுவார்கள். ஆது போல

மேலும்...

 மிதக்கும் சிற்பங்கள் , நூல் விமர்சனம் : கவிஞர் இரா.ரவி
நூல் ஆசிரியர் : கவிஞர் பரிமளாதேவி வேளியீடு : முள் சிற்றிதழ் விலை ரூ.10 நூலின் தலைப்பே நம்மை சிந்திக்க வைக்கின்றது. பொதுவாக சிற்பங்கள் மிதக்காது. வித்தியாசமான தலைப்பு எல்லா கவிஞர்களின் முதல் கவிதை காதல் கவிதையாகத்தான் இருக்கும். அந்த வகையில் நூலாசிரியர் கவிஞர் பரிமளாதேவியின் காதல்

மேலும்...

 தொட்டு விடும் தூரம் தான் வெற்றி - நூல் விமர்சனம்:கவிஞர் இரா.இரவி
நூலின் பெயர் :தொட்டு விடும் தூரம் தான் வெற்றி நூல் ஆசிரியர் : கவிஞர் கவிதாசன் கோவை மாவட்ட ஆட்சியர் திரு.வெ.பழனிக்குமார் இஆப அவர்களின் அணிந்துரை இந்த நூலின் வரவேற்பறையாக உள்ளது. "கோவைக்கு கிடைத்த மிகப்பெரிய கவிதைச் சொத்து" என்று நூலாசிரியர் கவிஞர் கவிதாசன் பற்றி குறிப்பிடுகின்றார்,

மேலும்...

 பாரதி இன்று இருந்திருந்தால் : நூல் விமர்சனம் – கவிஞர் இரா.இரவி
பாரதி இன்று இருந்திருந்தால்

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in