tamilkurinji logo


 

ராமசாமி - தொடர்கதை - K.R.P.செந்தில்,




ராமசாமி - தொடர்கதை - K.R.P.செந்தில்

First Published : Sunday , 1st February 2009 11:13:50 PM
Last Updated : Wednesday , 31st December 1969 05:00:00 PM




Warning: Division by zero in /home/content/14/7948114/html/tamilkurinji/Ilakkyam_details.php on line 303

ராமசாமி - தொடர்கதை - K.R.P.செந்தில், அத்தியாயம் - 1

நான் நான்கு வயதுவரை அம்மாவிடம் பால் குடித்தவன் , என்னை மறக்கவைக்க எவ்வளவோ முயற்சி செய்தனர் ,காம்பில் வேப்பன்னை தடவி வைத்துதான் மறக்கடித்தனர் .

நான்தான் வீட்டில் கடைசி அதனால் செல்லம் அதிகம் ,நான்கு சகோதரிகள் ,ஒரு சகோதரன் , ஆனால் போகபோகத்தான் தெரிந்தது அண்ணனுக்கே அதிக முன்னுரிமை என்று.. ஆனால் என்னோட உலகம் வேறாக இருந்தது .. எப்போதும் விளையாட்டுதான் .. என்னுடைய வீடு இருக்கும் தெருவில் அனேகமாக எல்லோரும் மாமாக்கள் வீடுதான் .. எல்லாவீட்டிலும் என்னிடம் தனிப்பாசம் கொண்டிருந்தனர் , ஏன்னா நான் ஏறாத மரம் கிடையாது , தம்பிதான் மறுக்காம உதவி பண்ணும் என்று சொல்லியே எல்லாவேலையும் என்னிடம் வாங்கிவிடுவார்கள் . தேங்கா , மாங்கா , முருங்கைக்காய் பறிக்கிறது ,கடைகன்னிக்குப்போறது இப்படியாக வீட்டில் எந்த வேலையும் செய்யாத நான் .. எல்லோர் வீட்டிற்கும் வேலைக்காரன் ஆகிப்போனேன் ..

அப்பல்லாம் நான் ஒன்னாப்பு படிக்கயில என்னக்கு மட்டும் ஒரு பலக வேணும்னு அடம்புடிப்பேன் , என்னோட கட்ட டீச்சரும் (நாங்க இப்படித்தான் கூப்புடுவோம் )எனக்கு ஒரு பலகைய கொடுப்பாங்க, அப்பல்லாம் உக்கார பலகைதான் கொடுப்பார்கள் ..என்னோட விருப்பத்துக்குதான் ஸ்கூலுக்கு போவேன் , வீட்டுக்கு வரணும்ன்னு நெனச்சா உடனே பைய தூக்கிட்டு கெளம்பிடுவேன் .. அப்படிதான் ஒரு நாள் வீட்டுக்கு வர்றப்ப என்னோட தாய்மாமா டேப்பன் (எல்லோரும் அவரை அப்படித்தான் கூப்பிடுவார்கள் ) பாத்துட்டு அடி பின்னி எடுத்துட்டார் , அதன்பிறகு ஒழுங்கா பள்ளிக்கு போக ஆரம்பிச்சேன் ..

அப்புறம் நான் அஞ்சாப்பு படிக்கயில என்னோட செட்டுங்க ரொம்ப பெருசு , வயசு வித்தியாசம் இல்லாம எல்லோரும் விளையாடுவோம் ..அப்படிதான் ஒருமுறை நாங்க எல்லோரும் சேந்து காசு சேத்தோம், பொதுவான ஒரு எடத்துல உண்டியல் புதைத்து வைக்கப்பட்டது , ஆனால் திடீரென உண்டியல் ஒருநாள் காணாமல் போனது ..

என்னோட மாமா வீட்டு தோப்புல வெளியூருல இருந்து பிழைப்புதேடி வந்த ஒரு குடும்பம் இருந்தது , அந்த வீட்டு பையன் நான்தான் அந்த உண்டியல திருடியதாகவும் அதை தன் கண்ணால் பார்த்ததாகவும்சொன்னதால் ,எல்லோரும் என்னை கூப்பிட்டு பஞ்சாயத்து வைத்தனர் ,

நான் எவ்வளவோ மறுத்தும் ,சத்தியம் செய்தும் யாரும் என்னை நம்பவில்லை , என்னோட அம்மாவும் , சத்தி வீட்டு தாத்தாவும் (சத்தி அத்தான் பத்தி பின்னாடி சொல்றேன் ) மட்டும் நம்பினார்கள். ஆனாலும் என் சேக்காலிங்க நம்பாததால் , அம்மாவே அவர்களுக்கு கணக்கு சொன்ன இருவது ரூபாயும் கொடுத்தாங்க ..

அதன்பிறகு என் செட்டுங்க யாரும் என்கிட்டே பேசுறது கிடையாது . நான் கடைக்கு போகும்போதெல்லாம் என்னைபாத்து 'திருடன் போறான்னு' கத்துவாங்க ,

ஸ்கூல் விட்டுவந்து அவங்களோட விளையாட முடியாது , அத தவிர்ப்பதற்காக,ஸ்கூல் விட்டவுடன் நூலகம் செல்ல ஆரம்பித்தேன் , அப்படித்தான் நான் படிப்பாளி ஆனேன் ,

இப்படி சில மாசம் போன பின்னாடி ஒரு நாள் ஸ்கூல்ல இருக்கும்போது என்னோட அப்பா மற்றும் நான்தான் திருடினேன் என்று சொன்ன பையன் , அவனோட அப்பா ,அம்மா மற்றும் அவனோட தங்கச்சி எல்லோரும் வந்து என்னை ஹெட்மாஸ்ட்டர் ரூமுக்கு கூட்டிட்டு போனாங்க , அங்க என்னை திருடன்னு சொன்ன பையன் அவனோட தங்கச்சிய நான் கருக்கருவளால் (கதிர் அறுக்கும் அருவாள் ) வெட்டிவிட்டேன் என்று சொன்னான் , ஆனால் என் வகுப்பு ஆசிரியரோ அவனை விசாரித்து கேட்டபோது அவன் நான் காலை பதினோரு மணி அளவில் வெட்டியதாக சொன்னான் , அப்போது நான் பள்ளியில் இருந்ததால் அவன் என்மேல் பொய் சொல்கிறான் என்று தெரிந்து அவனோட அப்பா ,அம்மா அவன செமை சாத்து சாத்துனாங்க ..

அப்புறம் இது என்னோட செட்டுங்களுக்கு தெரிஞ்சு அவங்களும் அவன புடிச்சு அடிச்சப்பதான் தானே திருடிவிட்டு என் மேல் பழிசுமத்தியதை ஒப்புக்கொண்டான். என் சேக்காலிங்க என்கிட்டே மன்னிப்பு கேட்டு மறுபடியும் செட்டுல சேத்துகிட்டங்க ..,

ஆனாலும் என்னோட ஆர்வம் லைப்ரரி மேல மாறிப்போனதால் என் மாமா அவரோட உறுப்பினர் அட்டையை கொடுத்து , என்னையும் உறுப்பினராக சேத்துவிட்டார் ..

இன்னைக்கு வரை தீவிர படிப்பளியாக நான் மாற காரணமான அந்த பையனுக்குதான் நன்றி சொல்லனும் ...

அடுத்த அத்தியாயம் என்னோட முதற்காதல் பத்திதான் .....

தொடரும்.......



    Tags :    
ராமசாமி - தொடர்கதை - K.R.P.செந்தில், ராமசாமி - தொடர்கதை - K.R.P.செந்தில், ராமசாமி - தொடர்கதை - K.R.P.செந்தில்,
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 ' பாவிகள்!' சு.செந்தில்ராஜ் ஆசிரியர், தமிழ்குறிஞ்சி.
ஆதவன்  மேற்கில்  மறைந்து  கொண்டிருந்தான்.  டிசம்பர்  மாதத்துக்  குளிர்  சில்லென்று  இறங்கிக்  கொண்டிருந்து.  நான்  அந்தக்  குளக்கரையின்  மீது  நடந்து  கொண்டிருந்தேன்.  குளிர்  கலந்த  காற்று  மென்மையாய்  முகத்தை  வருடிச்  சென்றது.இடது  பக்கம்  குளத்து  நீர்  சலசலத்தது.  வலது  பக்கம்  கண்ணுக்கெட்டிய

மேலும்...

 சார்! கார்த்துடைக்கனுமா?
உடல் முழுக்க வியர்வையுடனும், நெஞ்சு நிறைய வெப்பத்துடனும், தன் இயலாமையால் எழுந்த கோபம், ஆத்திரம், கவலை, பயம் என உணர்ச்சிகளின் கலவையாய் வீட்டினுள் நுழைந்தான் முரளி. சமீபத்தில் ஒரு அரசு நிறுவனத்திலிருந்து ஓய்வு பெற்று விட்ட அப்பா ஈசிச் சேரில் கண் மூடிச்

மேலும்...

 மலரும் முள்ளாகும்
எல்லாம் முடிந்து விட்டது. அவள் பிரிந்து விட்டாள். கோர்ட் பிரித்து விட்டது. அவள் பிரிந்ததைப் பற்றிக் கூட அவன் கவலைப்படவில்லை. ஆனால் அதற்காக அவள் எப்படியெல்லாம் பொய் சொன்னாள்? என்னென்ன பழியையெல்லாம் அவன் மீது சுமத்தினாள்? அதைத்தான் அவனால் தாங்க முடியவில்லை.

மேலும்...

 கைக்காசு,,,-விமலன்
  , எந்தப் பக்கம் கையை விட்டபோதிலும் அவரது உடம்பிலிருந்து ரூபாயை எடுத்து விடுகிறார். விட்டால் எட்டு திசகளிலும் இருந்து எடுப்பார் போலிருக்கிறது. வலதுபக்கம் கையைவிடுகிறார். மடித்து கட்டப்பட்டிருந்த கட்டம் போட்ட லுங்கியை மீறி வெளித் தெரிந்த அண்டர்வேர் பாக்கெட்டிலிருந்து ரூபாயை எடுக்கிறார்.

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in