tamilkurinji logo
 

தாய்மையைக் கொண்டாடுவோம் - அமுதா,


தாய்மையைக் கொண்டாடுவோம் - அமுதா

First Published : Thursday , 7th May 2009 02:45:40 PM
Last Updated : Wednesday , 31st December 1969 05:00:00 PMதாய்மை என்பது ஓர் உன்னதமான உணர்வு. கடவுள் ஒவ்வொருவருடனும் இருக்க இயலாது என்று தாயைப் படைத்தான் என்பார்கள். அத்தகைய தாயைக் குடும்பத்தினர் போற்ற , மே மாதத்தின் இரண்டாவது ஞாயிறு அன்னையர் தினமாக சில நாடுகளில் கொண்டாடப் படுகிறது.தாய்மை பெண்ணின் குணங்களை மேம்படுத்துகிறது. அவளது உலகையே மாற்றி அமைக்கும் வல்லமை படைத்தது. ஒரு சின்ன எ.கா இந்த சிறுகதை

[அவள் அந்த குட்டிக் கதையைப் படித்துக் கொண்டிருந்தாள்.

"அம்மாவும் குழந்தையும் தூங்கிக் கொண்டிருந்த முற்றத்தில் பாம்பு புகுந்திருந்தது. தாயை எழுப்ப எல்லோரும் சத்தம் கொடுத்துப் பார்த்தார்கள். ம்ஹீம்... அவள் அசைவதாகத் தெரியவில்லை. நல்ல அசதி போல். சற்றுத் தொலைவில் இருந்து கம்பால் தொட்டுப் பார்த்தார்கள். அசைந்தாள் , ஆனால் எழவில்லை. ஒரு பெண், மல்லிகைப் பூவை எடுத்து அக்குழந்தையின் மேல் போட, சட்டென்று எழுந்து அந்த பெண் பூவைத் தட்டி விட்டாள்". "சினிமாத்தனமாக இருக்கு", முணுமுணுத்தவாறு, பத்திரிகையைத் தூக்கி எறிந்தாள்.இரண்டு வருடங்களுக்குப் பின்... யாரோ தொடும் உணர்ச்சியில் திடுக்கிட்டு விழித்தாள். ஜன்னலருகே கணவன் கோபத்துடன் நிற்பது தெரிந்தது. கையில் குச்சி, அவளை ஜன்னல் வழியாகத் தொட்டு எழுப்ப. "எத்தனை தடவை பெல் அடிக்கிறது. எழுந்து வந்து கதவைத் திற..." என்றான். இரண்டு வருடங்களுக்குப் பின்... சட்டென்று விழிப்பு தட்டியது. கண்கள் உடனே தொட்டிலுக்குச் சென்றது. குழந்தை விழிப்பதற்கான ஆயத்தங்களுடன் நெளிய ஆரம்பித்திருந்தாள். பார்த்துக் கொண்டிருக்கும் பொழுதே தொட்டிலை ஈரமாக்கிவிட்டு அழ ஆயத்தமானாள். மெல்ல எடுத்து மார்போடு அணைக்கையில் , அந்த குட்டிக் கதை நினைவுக்கு வந்தது. "உண்மை தான்", என்று நிறைவோடு மனம் முணுமுணுத்தது.]தாய்மை என்பது அன்பு, கருணை, பொறுமை, சகிப்புத்தன்மை போன்ற நற்குணங்களின் வெளிப்பாடு. ஈரைந்து மாதம் சுமந்து, அமுதூட்டி அன்புடனும் பொறுமையுடனும் போற்றி வளர்க்கும் தாய்மார்கள் அனைவருமே போற்றப்படவேண்டியவரே. இந்த தாய்மையுள்ளும் சிறப்பு கவனம் செலுத்தி தாய்மையின் பல பரிமாணங்களில் மிளிரும் தாய்மாருக்கு தனிச்சிறப்பாக வாழ்த்து கூற விரும்புகிறேன்.


- உடற்கூறால் தனிப்பட்ட கவனிப்பு தேவைப்படும் குழந்தைகளுக்கு அன்பும் ஊக்கமும் அளித்து உயர்த்தும் அன்புள்ளம் கொண்ட தாய்மார்கள்

- மனதால் தனிப்பட்ட கவனிப்பு தேவைப்படும் குழந்தைகளுக்கு அன்பால் அவர்களது திறமையை வெளிக்கொணரும் பொறுமையான தாய்மார்கள்

- பெற்றால் தான் பிள்ளையா என்று ஆதரவற்ற குழந்தைகளுக்கும் தாயன்பு ஊட்டும் கருணை மிக்க தாய்மார்கள்

- சமூகத்தில் பல எதிர்ப்புகளுக்கும் நடுவில் எந்த துணையுன்றி குழந்தைகளின் நலனுக்காகப் போராடி உயர்த்தும் சகிப்புத்தன்மை மிக்க தாய்மார்கள்


இப்படி தாய்மையின் பரிமாணங்கள் பல பல...அன்னையரை அன்னையர் தினத்தில் போற்றுவோம், என்றென்றும் கொண்டாடுவோம்.
அம்மாக்களின் பதிவுகள்  Tags :    
தாய்மையைக் கொண்டாடுவோம் - அமுதா, தாய்மையைக் கொண்டாடுவோம் - அமுதா, தாய்மையைக் கொண்டாடுவோம் - அமுதா,
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 மனைவியின் அன்பையும் உணர்வையும் புரிந்து கொள்ளுங்கள்
வீட்டு வேலை தவிர தங்களால் நிறைய விஷயங்கள்முடியும் என்று பெண்கள் நிரூபித்து நீண்டநாட்களாகி விட்டன. எனவே மனைவியை அவரது திறமைக்காக மதியுங்கள். புதிய விஷயங்களைச் சாதிப்பதற்கு ஊக்குயவியுங்கள்.இன்றைய பெண்கள் இலக்கு சார்ந்தவர்களாக உள்ளனர். அவர்களுக்கு ஓர் இலட்சியம் இருக்கிறது, ஒரு கனவு

மேலும்...

 இல்லறம் இனிக்க சில வழிமுறைகள்
தாம்பத்தியம் கசந்தால் வாழ்க்கையே சிதைத்துவிடும். தாம்பத்தியம் சிறப்பதற்கான சூத்திரங்கள் மிக எளிமையானவை. தம்பதியர் இருவரும் தங்களின் மகிழ்ச்சியான தருணங்களை அடிக்கடி ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொண்டு, அப்போதைய சூழ்நிலையை இன்பமாக புதுப்பித்துக் கொள்ளுங்கள். உங்கள் கனவுகள், லட்சியங்கள், எதிர்காலத் திட்டங்கள் போன்றவற்றை வாழ்க்கைத் துணையிடம்

மேலும்...

 குடும்ப உறவுகளில் விரிசல்கள் ஏற்படாமல் இருக்க சில ஆலோசனைகள்
குடும்பத்திலும் சரி, அலுவலகத்திலும் சரி மனித உறவுகளில் விரிசல்கள் ஏற்படாமல் இருக்கவும், ஏற்பட்ட விரிசல்களை மேலும் பெரிதாக்காமல் இருக்க சில வழிமுறைகள்ஒரு நொடிக்கு குறைவான நேரத்திலேயே மனிதனை உருக்குலைத்து விடக் கூடிய ஒரு வார்த்தை கோபம் .. இது உலகில் சொந்த

மேலும்...

 திருமணத்திற்கு பின் ஆண் - பெண் தவறான உறவுகளுக்கு காரணம்
திருமணத்திற்கு அப்பாற்பட்ட தகாத உறவு என்பது ஆண்-பெண் மத்தியில் இன்று சகஜமாகி வருகிறது. திருமணமான பெண்களில் சுமார் ஐம்பது சதவிகிதத்தினர் தன் கணவன் அல்லாத வேறு ஆணுடன் உறவு கொள்வதும், அதற்காகத் தம் திருமண வாழ்க்கையையே இழக்கத் தயாராக இருப்பதும் சர்வ

மேலும்...

 
பிற குறிப்புகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


மகளிர்

Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in