tamilkurinji logo
 

பெண்கள் பணம் சேமிக்க சில வழிகள். ,women savings money

women,savings,money


பெண்கள் பணம் சேமிக்க சில வழிகள்.

First Published : Tuesday , 26th March 2013 12:13:58 AM
Last Updated : Tuesday , 26th March 2013 07:28:31 AM




பெண்கள் பணம் சேமிக்க சில வழிகள்.

,women savings money



சம்பாதிக்கும் பணத்தில் சிறிதளவை எடுத்து தங்கத்தில் முதலீடு செய்யலாம். தங்க நகையாகவோ அல்லது தங்க காசாகவோ வாங்கலாம். இப்பொழுதெல்லாம் இ-கோல்ட் முறையில் தங்கத்தில் முதலீடு செய்யலாம். இது தங்கம் வாங்குவதற்கு இணையான நன்மையை தரும். இதனால் லாக்கரில் தங்கத்தை வைத்து பயப்படத் தேவையில்லை. 

 நிரந்தர வைப்புத்தொகை (fixed deposits) தொடங்கலாம். இப்பொழுதெல்லாம் பல வங்கிகளில் வைப்புத் தொகையை குறிப்பிட்ட காலம் முடிந்தபின் திரும்பப்பெறும் போது 6 முதல் 8.5 சதவிகிதம் வரை வட்டி தருகிறார்கள். இதில் அதிக பணத்தை முதலீடு செய்யக் கூடாது. இரண்டிலிருந்து மூவாயிரம் ரூபாய் வரை முதலீடு செய்தாலே போதும். வருமான வரி தள்ளுபடி பெறலாம்.

 பி.பி.எஃப் கணக்கில் பணத்தை போடலாம். வருடத்திற்கு எட்டு சதவிகித வட்டி கிடைக்கிறது. இது ஒரு பாதுகாப்பான முதலீடாகும். இதிலும் வருமான வரி விலக்கு உண்டு.

ஒரு வீட்டை வாங்கலாம். இதனால் வாடகையை மிச்சப்படுத்தலாம். மேலும் ஒரு அசையா சொத்தை தக்க வைத்துக் கொள்ளும் சிறந்த நிலையைப் பெறலாம். இப்பொழுதெல்லாம் நிலத்தில் பணத்தை முதலீடு செய்தால், மிகக்குறுகிய காலத்தில் முதலீடு செய்த பணமானது இரட்டிப்பாகி விடுகிறது.

முதலீடு செய்வது பற்றி ஒவ்வொரு பெண்ணும் தெரிந்து கொள்வது நல்லது. இதற்காக தனிப்பட்ட முறையில் நன்கு விசாரித்து எதில் முதலீடு செய்தால் லாபம் கிடைக்கும் என்பதில் கவனமாக இருக்கவும்.

 வேலைக்கு செல்லும் பெண்களாயின் கூட்டு முயற்சியின் மூலமும் பணத்தை சேமிக்கலாம். சிலர் கணவரின் துணையுடன் பல்வேறு துறைகளில் பணத்தை முதலீடு செய்து பெருத்த லாபத்தை ஈட்டுகிறார்கள். சில பெண்கள் சிறிய குழந்தைகள் காப்பகத்தை தொடங்கி நல்ல லாபத்தை ஈட்டுகிறார்கள்.

பொதுவாக பெண்களுக்கு அரசானது பல்வேறு வரிச் சலுகைகளை வழங்கியுள்ளது. உதாரணத்திற்கு மாதம் சம்பாதிக்கும் தொகையில் ஆண்டுக்கு இரண்டரை லட்சம் வரை வரி செலுத்த வேண்டியதில்லை. மேலும் காப்பீட்டு திட்டங்கள் போன்றவற்றில் பணத்தை முதலீடு செய்யும் போதும் திட்டங்களில் போடப்படும் பணத்திற்கும் வரிச் சலுகைகள் தரப்படுகின்றன. இவற்றை எல்லாம் தெரிந்து கொண்டு பெண்கள் சரியான விதத்தில் முதலீடு செய்ய பிற்காலத்தில் பெருத்த லாபத்தை அடையலாம்.



  Tags :    
பெண்கள் பணம் சேமிக்க சில வழிகள்.

,women savings money பெண்கள் பணம் சேமிக்க சில வழிகள்.

,women savings money பெண்கள் பணம் சேமிக்க சில வழிகள்.

,women savings money
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 மனைவியின் அன்பையும் உணர்வையும் புரிந்து கொள்ளுங்கள்
வீட்டு வேலை தவிர தங்களால் நிறைய விஷயங்கள்முடியும் என்று பெண்கள் நிரூபித்து நீண்டநாட்களாகி விட்டன. எனவே மனைவியை அவரது திறமைக்காக மதியுங்கள். புதிய விஷயங்களைச் சாதிப்பதற்கு ஊக்குயவியுங்கள்.இன்றைய பெண்கள் இலக்கு சார்ந்தவர்களாக உள்ளனர். அவர்களுக்கு ஓர் இலட்சியம் இருக்கிறது, ஒரு கனவு

மேலும்...

 திருமணத்திற்கு பின் ஆண் - பெண் தவறான உறவுகளுக்கு காரணம்
திருமணத்திற்கு அப்பாற்பட்ட தகாத உறவு என்பது ஆண்-பெண் மத்தியில் இன்று சகஜமாகி வருகிறது. திருமணமான பெண்களில் சுமார் ஐம்பது சதவிகிதத்தினர் தன் கணவன் அல்லாத வேறு ஆணுடன் உறவு கொள்வதும், அதற்காகத் தம் திருமண வாழ்க்கையையே இழக்கத் தயாராக இருப்பதும் சர்வ

மேலும்...

 பெண்கள் வீட்டினுள் தீ விபத்தைத் தடுக்க:
* பம்ப் ஸ்டவ்வை உபயோகப்படுத்தும் போது அதிகமாகப் பம்ப் செய்ய வேண்டாம். * நைலக்ஸ் புடவையைக் கட்டிக் கொண்டு சமையல் செய்யக்கூடாது. * அடுப்பினருகே கெரசின் டின்னை வைக்க வேண்டாம். * தீப்பிடித்துக் கொண்டால் அங்குமிங்கும் ஓட வேண்டாம். தரையில் விழுந்து புரளுங்கள்.      

மேலும்...

 மார்பக புற்றுநோய் வராமல் தடுக்க
பொதுவாக மார்பக புற்றுநோயானது அம்மா, பாட்டி போன்றவர்களுக்கு, 50 வயதிற்கு முன்னரே மார்பக புற்றுநோயானது வந்தால், அவை நிச்சயம் அவர்களது குழந்தைகளுக்கு வரும் வாய்ப்பு அதிகம் உள்ளது.இதை ஒரு பரம்பரை நோய் என்றும் சொல்லலாம். ஆகவே இத்தகைய நோய் வருவதற்கு முன்பே,

மேலும்...

 
பிற குறிப்புகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


























மகளிர்





















Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in