மார்பக புற்றுநோய் வராமல் தடுக்க
First Published : Wednesday , 6th March 2013 08:07:38 AM
Last Updated : Wednesday , 6th March 2013 08:07:38 AM
பொதுவாக மார்பக புற்றுநோயானது அம்மா, பாட்டி போன்றவர்களுக்கு, 50 வயதிற்கு முன்னரே மார்பக புற்றுநோயானது வந்தால், அவை நிச்சயம் அவர்களது குழந்தைகளுக்கு வரும் வாய்ப்பு அதிகம் உள்ளது.
இதை ஒரு பரம்பரை நோய் என்றும் சொல்லலாம். ஆகவே இத்தகைய நோய் வருவதற்கு முன்பே, அதனை வராமல் தடுப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக, இந்த நோய் ஒருசில பழக்கவழக்கங்கள் மற்றும் அதனால் ஏற்படும் விளைவுகளின் மூலமாகவும், மார்பக புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகரிக்கிறது.
உதாரணமாக, உணவுக்கட்டுப்பாடு இல்லாதால் உடல் எடை அதிகரித்தல், புகைப்பிடித்தல், போதைப் பொருட்களை பயன்படுத்துதல் போன்றவையும் மார்பக புற்றுநோயை அதிகரிக்கும்
.
மார்பக புற்றுநோயை தடுப்பதற்கான எளிய வழிகள்
1. காய்கறி மற்றும் பழங்களில் கரோட்டினாய்டு அதிகம் உள்ளது. இவை புற்றுநோயை உண்டாவதைத் தடுக்கும் . ஆகவே கரோட்டினாய்டு அதிகம் உள்ள உணவுகளை சாப்பிட வேண்டும். ஆனால் உடலில் கரோட்டினாடு குறைவாக இருந்தால், புற்றுநோய் உண்டாவதற்கான வாய்ப்பு இருமடங்கு அதிகம் உள்ளது. எனவே தினமும் பழங்கள் மற்றும் காய்கறிகளில், கேரட், தக்காளி, தர்பூசணி மற்றும் கீரைகள் போன்றவற்றை தவறாமல் சேர்ப்பது நல்லது.
2. சோயா பொருட்கள் சோயா பொருட்களை அதிகமான அளவில் உணவில் சேர்ப்பதன் மூலம் மார்பக புற்றுநோயை தடுக்க முடியும். ஏனெனில் அதில் உளள பைட்டோ ஈஸ்ட்ரோஜன்கள், மார்பக புற்றுநோயை உண்டாக்கும் கிருமிகளின் தாக்கத்தை குறைத்துவிடும். எனவே பெண்கள் சோயா பொருட்களை அதிகம் உணவில் சேர்க்க வேண்டும்
3. தாய்ப்பால் கொடுப்பது குழந்தைகளுக்கு மட்டும் நல்லதல்ல, தாய்க்கும் தான். இதனால் ஈஸ்ட்ரோஜனின் அளவு சீராக இருக்கும். எனவே தாய்ப்பால் கொடுத்தால், மார்பக புற்றுநோய் வருவதைத் தவிர்க்கலாம்.