அடிவயிற்று சதையை குறைக்க
First Published : Friday , 17th February 2012 07:31:38 PM
Last Updated : Friday , 17th February 2012 07:40:14 AM
நம்மவர்களில் ஆண் பெண் பாகுபாடில்லாம் பலருக்கு உள்ள பிரச்சனை உடல் பருமன் அதில் பெரும்பாலான பெண் களுக்கு அடிவயிற்று பருத்து இருக்கும் இவர்களில் மருத்துவத்திற்க்கு செலவு செய்த பர்ஸ் மட்டுமே இளைத்து உடல் இளைக்காமல் இருப்பவர்கள் தான் எராளம்.
நீங்கள் இதவரையிலும் கவலைப்பட்டது போதும் இனிமேல் கவலைபட வேண்டாம். உங்களுக்காக எளிதில் மேற்கொள்ளக் கூடிய சில வழிமுறைகளை கூறுகிறேன். கடைப்பிடித்து பாருங்கள் வெற்றி நிச்சயம்.
நோகாமல் நோன்பிருக்க முடியாது. என்ற கிராமத்தில் ஒரு பழமொழி கூறவார்கள் அதுபோல நமது மக்கள் உடல் நோகாமல் உடல் மெலிய நினைக்கிறார்கள். அதனால் தான் பிரச்சளையே!
அளவான உடற்பயிற்சி உடல் பருமனை கட்டுப்படுத்துதோடு மடடுமல்லாமல் ஆயுள் காலத்தையும் அதிகரிக்கிறது. தினமும் காலை அல்லது மாலை வேளையில் ஒரு கிலோ மீட்டர் தூரம் வேகமாக நடப்பதோ ஒடுவதோ நல்ல உடற்பயிற்சி இரவு நேர உணவிற்க்கு பிறகு சுறுசுறுப்புடன் கூடிய நடை நல்ல தூக்கத்தை தரும்.
எலுமிச்சம் பழச்சாறுடன் சிறிது தேன் கலந்து பருகலாம் பால் சீனி கலக்காத காபி குடிக்கலாம் இளநீர் குடிக்கலாம் அதனுள் இருக்கும் வழுக்கை தேங்காய் வேண்டாம் .
சட்னியில் தேங்காய்க்கு பதில் வெங்காயம் சேர்த்துக் கொள்ளலாம்
பப்பாளிக்காயை கூட்டு சாம்பார் செய்த சாப்பிடலாம்
முள்ளங்கீரை உணவில் சோத்துக் கொள்ளலாம் ஆமணக்கு வேரை நன்றாக இடித்து தேன் கலந்து பிசைந்து சிறிது தண்ணீர் ஊற்றி இரவு முழுவதும் ஊறவைத்து மறுநாள் நீரை வடிகட்டி தினமும் அரை தம்ளர் குடித்து வர இடுப்பு பக்கம் அதிகரித்து சதை குறையும்.
பிரண்டை தண்டுகளை ஒடித்துவந்து அதன் மேல் தோலை சீவி சிறு சிறு துண்டுகளாக்கி வேக வைத்து அதனை காய வைத்து பொடி செய்து கொள்ள வேண்டும் இந்த பொடியுடன் ஒரு தேக்கரண்டி இந்துப்பு ஐந்து எலமிச்சம் பழச்சாறு சோத்து மறுபடியும் உலர்த்தி எடுத்தக் கொள்ள வேண்டும்.
தினசரி அதில் அரை தேக்கரண்டி பொடியை உணவுடனோ உணவுக்கு முன்பு தண்ணீரிலோ கலந்து சாப்பிட உடல் பருமன் குறையும். பெண்களுக்கு உண்டாக்கும் பின்னிடுப்பு வலியும் சரியாக்கும்.