tamilkurinji logo
 

ஆயுர்வேத குளியல் முறை , Shower yourself the Ayurvedic way

,,,,Shower,yourself,the,Ayurvedic,way,


ஆயுர்வேத குளியல் முறை

First Published : Friday , 24th January 2014 01:10:14 AM
Last Updated : Friday , 24th January 2014 01:17:09 AM







குளிப்பதற்கு முன்:

மிகவும் குளிர்ந்த நீரில் குளிக்கக் கூடாது. நீர்த்தேங்கலில், ஆறு, குளம், அருவிகளில் ஆடையின்றி குளிக்கக் கூடாது. மிகக் குறைந்த அளவுள்ள நீரில் அதாவது குட்டைகளில் குளிக்கக் கூடாது. தண்ணீரை உடலில் ஊற்றவது முதலில் தலையில் ஊற்றிப் பிறகு உடலில் ஊற்ற வேண்டும்.

முகபட்ச வாதம் எனப்படும் முகத்தினை ஒரு பக்கம் இழுத்து வாய் கோணலாக்கி விடும் அர்த்திதம் எனும் வாத நோய் உள்ளவர்கள், கண்வலி, கண் கூச்சம் உள்ளவர், காதில் வலி, இரைச்சல் முதலிய காது நோய் உள்ளவர், வயிற்றுப்போக்கு, வயிற்றுப்பொருமல்,ஜலதோஷம், அஜீரணம் ஆகிய நோய் உடையவர்கள் நீர்நிலைகளில் குளிக்கக் கூடாது.


குளிக்க இயலாதவர்கள் தலைக்கு ஊற்றாமல் உடலுக்கு மட்டும் ஊற்றிக் குளிக்கலாம். அல்லது உடலைக் குளிர்ந்த நீரிலோ, வெந்நீரிலோ நனைத்த துணியால் துடைத்துக் கொள்ளலாம்.
கலங்கிய நீரில் குளிக்கக் கூடாது. நச்சுப்பூச்சுகள், மலம், சிறுநீர், அழுகிய பொருட்கள், புல், குப்பை உள்ள நீர் மற்றும் சூரியன், சந்திரன், வாயு ஆகிய படாததும் புதிதாக மண்ணில் வீழ்ந்த வெள்ளநீர் ஆகியவை குளிப்பதற்கு ஏற்றதல்ல.


கிணறு, குளம் முதலியவற்றிலிருந்து தண்ணீரைக் காலைநேரத்தில் எடுத்து அன்றன்று பயன்படுத்த வைத்துக் கொள்ளலாம். ஏனெனில் நீர் அவ்வேளையில் குளிர்ந்து தெளிந்திருக்கும்.
நன்கு வயிறு முட்டச் சாப்பிட்ட பின்னும் நிறைய நீர் குடித்த பின்னும் குளிக்கக் கூடாது.


குளித்த பின்:


குளித்த பின் தோல் நனைந்துள்ள நிலையில் அதைத் துடைத்து விடாமல் ஈரத் தலைமுடியை உதறக் கூடாது. உடம்பு ஈரமாக இருக்கையில் ஆடை உடுத்தக் கூடாது. உடலைத் துடைத்துக் தோலின் ஈரம் உலர்ந்த பின் உடுத்த வேண்டும்.


குளித்த பின் அழுக்கில்லாத தூய்மையாகத் துவைத்த ஆடையை அணிய வேண்டும். ஏனெனில் அவையில் மதிப்பும், புகழும், ஆயுளும், அழகும், மகிழ்வும் கிட்டும்.

பட்டு, கம்பளம், சிவந்த ஆடை, வாயுவையும் கபத்தையும் போக்கும். ஆதலால் குளிர்காலத்தில் அவை அணியத்தக்கவை.


காவி நிற ஆடை புத்தியை வளர்க்கும்.குளிர்ச்சி அளிக்கும். பித்தத்தைப் போக்கும்.மெல்லிய காவி நிற ஆடை மிக நல்லது. கோடையில் அணியத்தக்கது.


வெண்ணிற ஆடை மங்களகரம், குளிரையும் வெப்பத்தையும் தாங்கிடும் குளிர்ச்சியோ, வெப்பமோ தராது. மழைக் காலத்தில் அணியலாம்.

கிழிந்த ஆடை, பிறர் அணிந்த ஆடை, பிறர் சூடிய மலர், பிறர் அணிந்த செருப்பு அணியக் கூடாது.
தூங்கும் போதும், வெளியில் செல்கையிலும், பூஜை செய்யும் போதும் புத்தாடை அணிவது நன்மையை உண்டாக்கும்.



    Tags :    
ஆயுர்வேத குளியல் முறை ,    Shower yourself the Ayurvedic way ஆயுர்வேத குளியல் முறை ,    Shower yourself the Ayurvedic way ஆயுர்வேத குளியல் முறை ,    Shower yourself the Ayurvedic way
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 இருதயத்தை பாதுகாக்கும் வழிகள் உணவு முறைகள்
   * நீங்கள் மீன் சாப்பிடுபவர் என்றால் நிச்சயம் மீன் எடுத்துக் கொள்ளலாம். மீன் ஒமேகா-3 சத்து அதிகம் கொண்டது. நீங்கள் சைவம் எனில் ப்ளாக்ஸ் விதைகள், ஒமேகா 3 மாத்திரைகள் எடுத்துக் கொள்ளுங்கள். * ஒரு கைப் பிடி பாதாமோ,

மேலும்...

 என்றும் இளமையாக இருக்க தினமும் ஓட்ஸ் சாப்புடுங்க!
உடம்பில் நோய்கள் இருந்தாலும் வாழ்க்கையை மகிழ்ச்சியாக வைத்திருக்க முடியும் என்கின்றனர் உணவியல் வல்லுநர்கள். ஓட்ஸ் உணவு உட்கொள்வதன் மூலம் நோய்களை கட்டுப்படுத்தி சந்தோசமாக வாழமுடியும் என்று பல்வேறு ஆய்வுகளின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.ஓட்ஸ் உணவில் மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் குணப்படுத்தும்

மேலும்...

 வைட்டமின் ஏ புற்றுநோயை குணப்படுத்தும் : இங்கிலாந்தில் கண்டுபிடிப்பு
கேன்சர் உருவக்காக் கூறுகளுக்கும், வைட்டமின் ஏ பற்றாக்குறைக்கும் தொடர்பிருப்பதாக  இங்கிலாந்தில் உள்ள யார்க் பல்கலை ஆய்வாளர்கள் இதனை கண்டுபிடித்துள்ளனர்.இதனால் புற்றுநோய் நீக சிகிச்சையில் வைட்டமின் ஏ-யை பயன்படுத்தலாம் என்று இந்த ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.எனவே தினமும் நாம் எடுத்துக் கொள்ளும் உணவுப்பொருட்களில் வைட்டமின்

மேலும்...

 ரத்த அழுத்தம் குணமாக பெரிய வெங்காயம் சாப்புடுங்க!!
ஆஸ்திரேலியாவின் சதர்ன் குவீன்ஸ் லேண்ட் பல்கலைக்கழகத்தின் உயிர் மருத்துவத்துறை விஞ்ஞானிகள் சமீபத்தில் இதுதொடர்பாக தீவிர ஆய்வு மேற்கொண்டனர்.பெரிய வெங்காயத்தில் இருந்து எடுக்கப்பட்ட சத்துக்களை எலிகளுக்கு செலுத்தி இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இது வெற்றிகரமாக  நடந்ததைத் தொடர்ந்து மனிதர்களிடமும் அடுத்தகட்டசோதனை நடத்தப்பட்டது. அதிலும்

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match






















மகளிர்































Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in