tamilkurinji logo
 

இந்தியாவில் 'நிமோனியா'வுக்கு ஆண்டுதோறும் 4 லட்ச குழந்தைகள் மரணம் :உலக சுகாதார நிறுவனம்,


இந்தியாவில் 'நிமோனியா'வுக்கு ஆண்டுதோறும் 4 லட்ச குழந்தைகள் மரணம் :உலக சுகாதார நிறுவனம்

First Published : Tuesday , 27th October 2009 09:41:49 AM
Last Updated : Wednesday , 31st December 1969 05:00:00 PM







உரிய முறையில் சிகிச்சை மேற்கொண்டால் குணப்படுத்தக் கூடிய நிமோனியா காய்ச்சலுக்கு, இந்தியாவில் ஆண்டுதோறும் ஏறத்தாழ 4 லட்ச குழந்தைகள் பலியாவதாக, உலக சுகாதார நிறுவனம் (WHO) மற்றும் ஐக்கிய நாடுகளின் சிறார்களுக்கான நிதியம் (UNICEF) தெரிவித்துள்ளது.

உலக அளவில் ஆண்டுதோறும் நிமோனியா பாதிப்பால் 10 லட்சம் மரணங்கள் நிகழ்கின்றன. உரிய முறையில் முன்னெச்சரிக்கையாக இருப்பதாலும், தவறாமல் சிகிச்சை எடுத்துக் கொள்வதாலும் இந்த உயிர்ப் பலியை தவிர்க்க முடியும் என்பது உலக அளவில் உள்ள மருத்துவ நிபுணர்களின் நம்பிக்கை.

நிமோனியா மரணத்தைத் தவிர்ப்பதற்கு விழிப்பு உணர்வு ஏற்படுத்தும் நோக்கில், இந்த ஆண்டு நவம்பர் 2-ம் தேதி, முதல் முறையாக 'உலக நிமோனியா தினம்' அனுசரிக்கப்படுகிறது.

இதற்னான செயல்பாடுகளில் இந்திய குழந்தைகள் மருத்துவ மையம், இந்திய பொது நல அறக்கட்டளை, உலக சுகாதார நிறுவனம், ஐக்கிய நாடுகளின் சிறார்களுக்கான நிதியம், எய்ம்ஸ் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களும் ஈடுபட்டு வருகின்றன.

இந்தச் சூழலில், "இந்தியாவில் ஒவ்வொரு நிமிடமும் 5 வயதுக்குட்பட்ட 82 குழந்தைகள் நிமோனியாவால் பாதிக்கப்படுகின்றன; ஒரு மணி நேரத்துக்கு 45 குழந்தைகள் உயிரிழக்கின்றன; ஒவ்வொரு ஆண்டும் நிமோனியா காய்ச்சலுக்கு 4 லட்சம் குழந்தைகள் பலியாகின்றன; இந்தியாவில் குழந்தைகள் உயிரிழப்பில் முதல் இடத்தில் இருப்பது நிமோனியா நோயே," என்று உலக சுகாதார அமைப்பின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உலக அளவில் நிமோனியாவில் ஏற்படும் உயிரிழப்பில், சுமார் 25 சதவீதம் இந்தியாவில் தான் ஏற்படுகிறது என்று உலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

இந்திய குழந்தைகள் மருத்துவ கல்வி மையத்தின் தலைவர் மருத்துவர் பன்னா சவுத்ரி அளித்த பேட்டியில், "இந்திய மக்களிடையே நிமோனியா குறித்த விழிப்பு உணர்வு மிகக் குறைவாக இருக்கிறது. இந்நோயைத் தடுப்பதற்கு அரசும் முழுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை.

மக்களிடையே விழிப்பு உணர்வு ஏற்படுத்தும் வகையிலும், பொது நல பிரச்னையாக கருதி நிமோனியாவை எதிர்கொள்ள அரசு நடவடிக்கை எடுக்க வழிவகை செய்ய கவனத்தை ஈர்க்க முயற்சித்து வருகிறோம். இதன் மூலம் ஆண்டுதோறும் லட்சக்கணக்கான குழந்தைகள் பலியாவதைத் தடுக்க முடியும் என்று நம்புகிறோம்," என்றார் மருத்துவர் பன்னா சவுத்ரி

பொதுவாக குழந்தைகளை அதிகம் தாக்கும் நிமோனியா காய்ச்சலானது ஃபங்கஸ் எனப்படும் பூஞ்சை, வைரஸ் மற்றும் பாக்டீரியா தாக்குதலால் ஏற்படும் என்பதை அனைவரும் அறிவோம்.

அதேநேரத்தில், போதிய அளவு ஊட்டச்சத்து இல்லாமை, பிறக்கும் போதே எடை குறைவு, அதிக நெருக்கடியான பகுதிகளில் வாழ்வது, தாய்ப்பால் கொடுப்பதன் அவசியத்தை அறியாமை போன்ற காரணங்களினாலும் நிமோனியா காய்ச்சல் ஏற்படுகிறது.

நிமோனியா காய்ச்சலை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்துவிட்டால், உயிர்க்கொல்லி நோயாக அது மாறாமல் குழந்தைகள் உயிரிழப்பை வெகுவாகத் தடுத்து விட முடியும் என்பதும் கவனத்துக்குரியது. இதற்கு, நிமோனியா நோய்த் தடுப்புக்கு சிகிச்சையும், மருந்துகளும் உள்ளன என்பதை மக்கள் முதலில் அறிந்து கொள்ள வேண்டும். மருந்துக் கடைகளுக்குச் சென்று தாங்களாகவே குறிப்பிட்ட அறிகுறிகளைச் சொல்லி மாத்திரை வாங்கி உபயோகிப்பதை நிறுத்த வேண்டியது கட்டாயம்.

கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் போலியோ நோய் ஒரு மிகக்கொடிய நோயாக இருந்தது. ஆனால், தற்போது இந்தியாவில் 99 சதவீத அளவுக்கு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அதைப் போலவே போதிய விழிப்பு உணர்வு இருக்கும் பட்சத்தில், நிமோனியா பாதிப்பை தவிர்க்க முடியும் என்பது மருத்துவர்களின் கருத்து.



    Tags :    
இந்தியாவில் 'நிமோனியா'வுக்கு ஆண்டுதோறும் 4 லட்ச குழந்தைகள் மரணம் :உலக சுகாதார நிறுவனம், இந்தியாவில் 'நிமோனியா'வுக்கு ஆண்டுதோறும் 4 லட்ச குழந்தைகள் மரணம் :உலக சுகாதார நிறுவனம், இந்தியாவில் 'நிமோனியா'வுக்கு ஆண்டுதோறும் 4 லட்ச குழந்தைகள் மரணம் :உலக சுகாதார நிறுவனம்,
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 இருதயத்தை பாதுகாக்கும் வழிகள் உணவு முறைகள்
   * நீங்கள் மீன் சாப்பிடுபவர் என்றால் நிச்சயம் மீன் எடுத்துக் கொள்ளலாம். மீன் ஒமேகா-3 சத்து அதிகம் கொண்டது. நீங்கள் சைவம் எனில் ப்ளாக்ஸ் விதைகள், ஒமேகா 3 மாத்திரைகள் எடுத்துக் கொள்ளுங்கள். * ஒரு கைப் பிடி பாதாமோ,

மேலும்...

 ஆயுர்வேத குளியல் முறை
குளிப்பதற்கு முன்:மிகவும் குளிர்ந்த நீரில் குளிக்கக் கூடாது. நீர்த்தேங்கலில், ஆறு, குளம், அருவிகளில் ஆடையின்றி குளிக்கக் கூடாது. மிகக் குறைந்த அளவுள்ள நீரில் அதாவது குட்டைகளில் குளிக்கக் கூடாது. தண்ணீரை உடலில் ஊற்றவது முதலில் தலையில் ஊற்றிப் பிறகு உடலில் ஊற்ற

மேலும்...

 என்றும் இளமையாக இருக்க தினமும் ஓட்ஸ் சாப்புடுங்க!
உடம்பில் நோய்கள் இருந்தாலும் வாழ்க்கையை மகிழ்ச்சியாக வைத்திருக்க முடியும் என்கின்றனர் உணவியல் வல்லுநர்கள். ஓட்ஸ் உணவு உட்கொள்வதன் மூலம் நோய்களை கட்டுப்படுத்தி சந்தோசமாக வாழமுடியும் என்று பல்வேறு ஆய்வுகளின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.ஓட்ஸ் உணவில் மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் குணப்படுத்தும்

மேலும்...

 வைட்டமின் ஏ புற்றுநோயை குணப்படுத்தும் : இங்கிலாந்தில் கண்டுபிடிப்பு
கேன்சர் உருவக்காக் கூறுகளுக்கும், வைட்டமின் ஏ பற்றாக்குறைக்கும் தொடர்பிருப்பதாக  இங்கிலாந்தில் உள்ள யார்க் பல்கலை ஆய்வாளர்கள் இதனை கண்டுபிடித்துள்ளனர்.இதனால் புற்றுநோய் நீக சிகிச்சையில் வைட்டமின் ஏ-யை பயன்படுத்தலாம் என்று இந்த ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.எனவே தினமும் நாம் எடுத்துக் கொள்ளும் உணவுப்பொருட்களில் வைட்டமின்

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match




























மகளிர்























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in