tamilkurinji logo
 

லிவ்விங் டு கெதர் = விபச்சாரம்,living togetherலிவ்விங் டு கெதர் = விபச்சாரம்,living together , Tamil News | தமிழ் செய்திகள் | Tamilkurinji

லிவ்விங்,,,டு,,,கெதர்,,,விபச்சாரம்,லிவ்விங்,டு,கெதர்,=,விபச்சாரம்,living,togetherலிவ்விங் டு கெதர் = விபச்சாரம்,living together , Tamil News | தமிழ் செய்திகள் | Tamilkurinji

லிவ்விங் டு கெதர் = விபச்சாரம்

Thursday , 24th November 2011 09:42:02 AM

search
லிவ்விங் டு கெதர் = விபச்சாரம்,living together

இது குறித்து பரவலாகவே,பதிவர்கள் ஆதரவாகவும்,எதிராகவும், தங்களது கருத்துக்களை பதிந்து வர.நானும்,என் பங்குக்கு,எனது கருத்தையும் சொல்லிவிடலாம் என முடிவெடுத்துவிட்டேன்.

லிவ்விங் டு கெதர்.அதாவது.ஆண் பெண் இருவரும் திருமணம் இன்றி,ஒன்றாக வாழ்வது.பிடித்து இருந்தால் சேர்ந்து வாழ்க்கை தொடரும்,இல்லை என்றால்,அவர் அவர் வழியை அவரவர் பார்த்துக் கொண்டு சென்றுவிடுவது.பிறகு,திரும்பவும் அவரவர் விரும்பியவருடன் வாழ்வை ஆரம்பித்துவிடுவது.

சற்றே இவ்விடயத்தை சிந்தித்தால்,இது விலங்குகளின் வாழ்வு முறையை ஒத்து காணப்படும். இதில் பல விலங்குகள் கூட ஒரு துணையுடன் வாழும் பண்புடையதாக இருக்கிறது.

மனிதனுக்கும்,விலங்குகளுக்கும்,அடிப்படையில் வேறுபாடு காணப்படுவது பகுத்தறிவு எனும் மேலான சிந்தனைத்திறனால்.அது தவிர்த்தும்வெட்க உணர்வு,பேச்சு,உறவுகள்,வாழ்க்கை முறை, என பல விடயங்களில் நாம் அவைகளில் இருந்து வேறுபடுகிறோம்.


ஆனால்,தற்காலங்களில்,நாம் விலங்குகளுக்கு ஒப்பாகவும்,பல நேரங்களில் அதைவிட கேவலமாகவும் இறங்கிவிடுகிறோம். தற்கால ஃபேஷன் என்ற வார்த்தை மனிதனை வெட்க உணர்வில் இருந்து வெளியேற்றி வருகிறது,கலாச்சாரம் என்ற ஒன்று உறவுகளை உடைத்து,தனித்து நிற்க பணிக்கிறது.பிற நாகரீக மோகம் நம்மை நம் வாழ்க்கை முறையில் இருந்து தனிமைப்படுத்தி,ஒவ்வாத வாழ்க்கை முறையை கைகொள்ளச் செய்கிறது.

இவ்வாறாகவே,வெகுகாலமாக மேற்கத்திய நாடுகளில் புழங்கிவரப்பட்ட இந்த லிவ்விங் டு கெதர் என்ற கேடுகெட்ட கலாச்சாரம் இன்று நம்மையும் தொத்திக் கொண்டுவிட்டது,


குடும்ப உறவின் மதிப்பே தெரியாத மேற்கத்தியர்களும்,அவர்களது வாழ்க்கைமுறையும், ஒருகாலும் நமக்கு நல்லதோர் வாழ்வை நல்கிவிடாது.அவர்களது வாழ்க்கை எப்படிப்பட்டது?.

உதாரணமாக ஒரு குடும்பம் இருக்கிறது என வைத்துக் கொள்வோம்.ஒரு கணவன் மனைவி.அவர்களது புரிதல் எப்படிப்பட்டது? நீ என்னை கேள்வி கேட்க கூடாது,நான் உன்னை கேட்கமாட்டேன்.இதை தாண்டி ஒருவர் மற்றவரை கேள்வி கேட்டால்,பதில் வராது.ஈவ்னிங் வீட்டுக்கு வரும் போது ஒரு ஸ்ட்டிக்கி நோட் பிரிஜ் மேல ஒட்டப்பட்டு  இருக்கும் "I AM LEAVING"என்ற வாசகத்தோடு...அவ்ளோதான்...

எந்த ஒரு ஒப்பந்தமும் இல்லை என்பதை ஒப்பந்தமாக கொண்டதே அவர்களது லிவ்விங் டு கெதர்.வழுவான பிணைப்பு இருக்காது.ஆலோசனை கூற அவர்கள் யாரையும் அருகில் வைத்துக் கொள்வதில்லை.அப்படிபட்டவர்களுக்கு பிறக்கும் பிள்ளைகள்??தன் பெற்றோர்களிடம் இருந்து எதை கற்றுக் கொண்டார்கள்.அவர்களது எதிர்காலம் என்னவாகும்.அவர்களுக்கு ஆலோசனை கூறவோ, வழிநடத்தவோ,யாரும் இல்லாத நிலையில் அவர்களது பாதை தன் மனம் போன போக்கில் அமைந்துவிடுகிறது.

அவர்களை பொருத்தவரை ஆண் பெண் இருவருக்கும்,கற்பு,என்பது என்னவென்றே தெரியாது.வயது வந்த ஒரு பெண் கன்னியாக இருப்பது அவர்களுக்கு கேலிக்குறிய செய்தி "you are still Virgin" என ஆச்சர்யமாகவும் வினோதமாகவும் கேட்கும் போக்கு அவர்களுடையது.வயது வந்தவர்களும்,வராதவர்களும்,செக்ஸ் என்ற புள்ளியை எளிதாக தொட்டுவிட முடிகிறது,அதன் விளைவு,அதிகமாக பள்ளிக் குழந்தைகள் கற்பமடைவதும்,11 வயதில் பிள்ளை பெற்றுக்கொள்வதும்,.14வயதில் தகப்பன் ஆகிவிடுவதும் நடந்தேருகிறது,


செக்ஸ் கல்வி:

செக்ஸ் கல்வி தேவை தேவை என மேற்கத்தியம் அலர காரணம் என்ன??? அவர்களது கலாச்சாரத்தால் பெருகிவிட்ட வகைதொகையற்ற ஆண் பெண் உறவு,அதனை தொட்டு உண்டாகும் எயிட்ஸ்,பாலியல் நோய்கள்,கர்ப்பங்கள்,இவைகளை தடுக்கவே.அவர்களால் அப்படிப்பட்ட தாறுமாறான உறவுகளை தடுக்க முடிவதில்லை.அதனால் குறைந்தபட்சம் பாதுகாப்பாகவாவது செக்ஸ் வைத்துக்கொள்ளுங்கள் என்பதே அவர்களின் பிரச்சாரம்..விசயகாந்து சொல்வருல்ல "குடிக்கிறதுதா குடிக்கிற பஞ்சு வச்ச சிகரெட்டு வாங்கி குடின்னு"..அதுமாறி.

இந்தியா உலகில் எயிட்ஸ்ல இரண்டாவது இடம்..தெரியுமா?? என்னமோ பெருஸ்ஸா பேசுரன்னு  கேட்பவர்கள்,ஒன்றை உணர்வதில்லை.இந்தியாவில் எயிட்ஸ் விபச்சாரிகளால் பரவுகிறது.விபச்சாரியிடம் படுப்பவன் மட்டுமே பாலியல் நோய்க்கு ஆளாவான்.

இப்படி வைத்துக் கொள்வோம்.உலகம் முழுதும் ஒரு வாரம் condoms ஐ தடை செய்து விடுவோம் .ஆனால் இயல்பான அவர்களது வாழ்க்கை நடத்த வேண்டும் என வைத்துக் கொண்டால்,அவர்களின் எயிட்ஸ் எண்ணிக்கை உலகை மிகைத்துவிடும்...

ஆனால் கவனிக்க வேண்டியது,அவர்களில் விபச்சாரிகள் தவிர சாதாரண மக்களுக்கே பாலியல் நோய்கள் பெருகி இருக்கும்.அது நம் நாட்டில் இருக்காது.

மேற்கத்தியர்கள் மத்தியில் எடுக்கப்பட்ட ஒரு சர்வே,ஆனது அவர்களின் செக்ஸ் வாழ்வு எங்ஙனம் உள்ளது என்பதை சொல்கிறது,அவர்கள் யாராவது ஒரு நபர் தனக்கு பாவமாக தெரிந்தால் அவர்களுடன் செக்ஸ் வைத்துக் கொள்வார்களாம், அதாவது ப்ளீஸ் ஒரே ஒருதடவை என கெஞ்சினால் போதும்.அவன் பாவமாக தெரிவானல்லவா?.. நல்ல டின்னர் கொடுத்தால் செக்ஸ் வைத்துக் கொள்வார்களாம்,ஏதாவது அன்பளிப்பு செய்தால் செக்ஸ் வைத்துக் கொள்வார்களாம்.இப்படி பட்டியல் நீள்கிறது.

இத்தகையவர்களின் சமுதாயம்,எப்படிப்பட்டதாக இருக்கும்.அடுத்த தலைமுறை முந்தய தலைமுறையிடம் இருந்து எதை கற்றுக் கொள்ளும்??? இன்னும் 1000 பேருடன் நான் உறவு வைத்துக் கொண்டேன்,5000 பேருடன் நான் படுத்திருக்கிறேன் என பெருமையுடன் பத்திரிக்கைகளில் பெண்கள் பேட்டி தருவதும்,அது அவர்கள் மத்தியில் எந்த ஒரு சலனத்தையும் ஏற்படுத்தாத,சாதாரண விடயமாக இருப்பது,எதை சுட்டுகிறது.அவர்களது வாழ்வானது,விபச்சாரம் என்ற ஒன்றை தனது கலாச்சாரமாக ஏற்றுக் கொண்டுவிட்டது.அதில் அவர்களுக்கு எந்த வித்தியாசமும் தெரிவதில்லை.அவர்களை பொருத்தவரை அன்றைய வாழ்வு சந்தோஷமாக் இருக்க வேண்டும் அவ்ளோதான்.

அவர்களில் யாரும் தனது சந்ததியினர் குறித்து கவலை கொள்வதில்லை.அவர்களின் சந்ததி குறித்த கவலை எப்படிப்பட்டதெனில்,எனது மகனுக்கு/மகளுக்கு 18 வயதாகியும்,இன்னும் ஒரு பாய் பிரண்டு/கேள் பிரண்டு அமையவில்லையே..அவள் எப்படி பார்ட்டிகளுக்கு தனித்து செல்வாள்.என்பதே அவர்களது கவலை.ஒரு வயதுக்கப்புரம்,தனது ஆண்/பெண் நண்பர்களை தன் பெற்றோரிடம் அறிமுகப்படுத்திக் கொள்வதை பெருமையாக இருதரப்பும் கருதும் போக்கு அவர்களுடையது.

இது தொடரும் போது,அவர்கள் பார்ட்டைம் ஜாப்,இரவு தங்குதல்,தனி பிளாட்,என நீண்டு, அவர்களது வாழ்வு அப்படியே துவங்கி விடுகிறது.பெற்றோரும்,ஏன் என கேட்பதில்லை.கேட்க அவர்களும் எத்தனிப்பதில்லை.ஏனெனில்,அவர்களின் வாழ்க்கை அங்கு அருந்து வேறு வேறாகி இருக்கும்,தனது புதிய பார்ட்னருடனான தனது புது வாழ்வு பாதிக்கப்படகூடாது என்பதற்காக அவர்கள் தங்களது பிள்ளைகளை கண்டு கொள்வதில்லை....

இப்படியாக அடுத்த ஜெனரேஷன் தொடர்கிறது....

குடும்பவாழ்வில் ஒருவருக்கொருவர் அர்ப்பணிப்புடனும்,விட்டுக் கொடுத்தும்,ஆதரவாகவும், அன்பாகவும்,இணக்கமாகவும்,பாதுகாப்பாகவும்,வாழும் வாழ்வே மனிதன் வாழ தகுந்த வாழ்க்கை முறை.

மேற்சொன்ன இத்தியாதிகளை கொடுக்க மறுப்பவர்களே,இப்படியான லிவ்விங் டு ப்ராஸ்டிட்டியூஷன் (நான் இதை சொல்ல வரல) கெதர் என்ற கேவலமான வாழ்வை தேர்ந்தெடுக்கிறார்கள்.

இப்படியான ஒரு சமுதாயம் இருக்கிறது என வைத்துக் கொள்வோம்..ஒரு 100 வீடுள்ள ஒரு ஊரில்,ஒரு பத்தாண்டுகளில் ஒவ்வொரு பெண்ணும் ஆணும் 10க்கும் மேலான வேறான வீடுகளில் வாழ்ந்து இருப்பார்கள்.இது ஒரு வகையான விபச்சாரமே.

சரி இதை ஆதரிப்பவர்களின் கூற்று என்ன?மனிதனின் ரசனை மாறிக்கொண்டே இருக்கிறது.பிடித்தவரைக்கும்,வாழ்ந்து விட்டு,பிரியும் போது,யாரும் யாரையும் கேள்வி கேட்கவோ,தடுக்கவோ கூடாது,.அதற்கு இந்த வாழ்வு வழிசெய்கிறது.

இதென்ன ரசனை....ரசனை மாற்றம் காலப்போக்கில் தாயை தாய் இல்லை என்று வேருருத்தியை தாய் என சொல்லுமா?இல்லை தந்தையைத்தான் ரசனை மாற்றம் தந்தை இல்லை என சொல்லிடுமா?,பெற்ற பிள்ளைதான் ரசனை மாற்றத்தால் இல்லை என்றாகிவிடுமா??? அப்படி இருக்க,தன்னுடன் வாழ்வை பகிர்ந்து கொள்பவளின் மீதான ரசனை மட்டும் மாறி கலட்டிக் கொள்ள இந்த ஈன வாழ்வு உதவுகிறதா?

இப்படிப்பட்ட வாழ்வு எப்படி ஒருவர்மீது ஒருவருக்கு நம்பிக்கையை கொடுத்துவிடும்,ஒரேயொரு எண்ணம் மட்டும் என்றுமே ஓங்கி இருக்கும்.அது என்றைக்காயினும்,இவன் நம்மைவிட்டு பிரிந்து விடப்போகிறவன்தான்.ஏதேனும் மன்ஸ்தாபம் ஏற்பட்டாலும்,பிரச்சனை இல்லை இவளை அத்துவிட்டுடலாம்.என்ற எண்ணத்தெளிவு இருக்கும்.


இப்படி இருக்கும் இருவருக்குமே,தாராளமாக ஆண் பெண் நட்புகள் இருக்கும்..இவர்களின் வாழ்வில் கேள்வி கேட்க எந்த முகாந்திரமும் இல்லாதிருக்க,இவர்களின் ஈன ரசனையானது, ஒருவரை விட ஒருவரை மேலாக காட்டிக் கொண்டே போகும்.எனவே அவர்கள் ரசனைக்கு ஏற்ப ஆளை மாற்றிக் கொண்டே போவார்கள்.நான் என்ன குறைவைத்தேன் என இருதரப்பும் கேள்வி எழுப்ப முடியாது,,.இதில் அதிகம் பாதிக்கப்படுவது பெண்களே.

//லிவிங் டுகெதராய் இருப்பவர்கள் சிறிது நாட்களில் திருமணமும் செய்து கொள்வார்கள். இப்படி திருமணம் செய்து கொள்பவர்கள் நீண்ட நாட்கள் விவாகரத்து செய்யாமல் வாழ்கிறார்கள்.//

இதென்ன நம்மூரு கொய்யாக்காய் வியாபாரமா? சாப்டு பாத்து புடிச்சிருந்தா காசு கொடுன்னு சொல்ரதுக்கு.....EMOTIONAL ATYACHAR - LOYALTY TEST:


BINDASS எனும் வட இந்திய தொலைக்காட்சி,ஒரு நிகழ்ச்சியை ஒளிபரப்பி வருகிறது.அதன் பெயர் "எமோஷனல் அத்யாச்சார்".சேர்ந்து வாழும் இருவரில் ஒருவருக்கு ஒருவர் மீது சந்தேகம் இருந்தால்,இவர்களிடம் வந்து சொல்லவேண்டும்.இதுவரையில் பெண்கள் மட்டுமே வந்து சந்தேகம் இருப்பதாக சொல்லி இருக்கிறார்கள்.உடனே இவர்கள்.அவர்களை அணுகி நெருங்கிப் பழகி,அவனது உண்மை நிலையை அறிய ஒரு MODEL,அதாவது நவீன கால விபச்சாரிகளை(அந்த நிகழ்ச்சியை பார்த்தால் தெரியும் நான் ஏன் இப்படி சொல்கிறேன் என்று.) அனுப்பிவைப்பார்கள்,அவளுடன்,கேமிரா சகிதம் ஒரு டீம் அவர்களின் நடவடிக்கையை லைவ் ரிலே செய்தவண்ணம் இருக்கும்.அவர்களுடன் அப்பெண்கள் நெருங்கிப்பழகி,கொஞ்சி ,குலாவ,இவர்களும்,ஓக்கே,நல்ல பார்ட்டி,தானா சிக்குது,,,அப்டீன்னு,அவகூட போய்டுவானுக..இத இந்த டிவி காரணுக,அந்த பொண்ணுகிட்ட போட்டு காட்டி,தெருவுல எறங்கி மல்லுகட்ட விட்டுட்டு,நடையகட்டிருவானுக.இதுதா புரோகிராமு.

இதுல HILIGHT என்னன்னா? இவள ப்ரொகிராமோட CLIMAX ல,அந்த பையன்,அந்த மாடல் கூட நெருக்கமா இருக்குர சமயத்துல,SPOTல கொண்டு போய் நிறுத்தீருவானுக.ரெண்டு பேரும்,அடிச்சுபாங்க,.கடைசில,நீ ஓ வெலைய பாத்துட்டு போன்னு,அவன் சொல்லிடுவான்,இவளும்,ஐ ஹேட் யூ ன்னு சொல்லிட்டு,கெளம்பீடுவா?


இதுதா இவங்க உறவோட சாராம்சம்.தப்பு பண்ணுவேன்.கேள்வி கேட்ட,ஓ வேலையபாருன்னு சொல்வான்..மூடிட்டு போய்டவேண்டியதுதா,

இதுல குறிப்பிட்டு சொல்லவேண்டியது என்னன்ன? வந்தவங்க அத்தன பேரும் இந்த கேடுகெட்ட வாழ்க்கைய வாழ்ரவங்க.இடைய ஒரு GAY வேர வந்துகிட்டு,எ பொண்டாட்டி??(ஐயயோ அவனுகள்ள யார் பொண்டாட்டி,யார் புருஷன்ன்னு கடைசிவர சொல்லலியே)நல்லவலான்னு செக் பண்ணனும்ன்னான்.கொடுமைதான்.அதையும் செக் பண்ணுனானுவ....

நம்ம கற்புக்கரசி குஷ்பு கூட சமீபத்தில் ஒரு கருத்தை வெளியிட்டார்,அது கல்யாணத்துக்கு முன் இருவரும் உறவு வைத்து கொள்வதில் தவறில்லை என.அவரும் இதே லிவ்விங் டூ கெதெர் ஐ தான் சுட்டினார் என இப்போதுதான் புரிகிறது,

சரி இந்த இடைப்பட்ட காலத்தில் வயிற்றில் பிள்ளை கொடுத்துவிட்டு,பிடிக்கவில்லை போ என்றாள்,அப்பெண்ணுக்கு என்ன பாதுகாப்பு,அப்பிள்ளையின் எதிர்காலம் என்ன? இப்படி 1000 கேள்விகளை கேட்க முடியும்.ஆனால் அந்த கலாச்சாரத்திடம் இருந்து பதில் ஏதும் இருக்காது. ஏனெனில் இவ்வாறான கேள்விகளே தேவை இல்லை என்பதே இக்கலாச்சாரத்தின் நோக்கம்.

//அதே போல அங்கே your children and my children are playing with our children என்பது சகஜம். அதை குழந்தைகளும் ஏற்றுக் கொள்ள அவர்கள் தயார்ப்படுத்தப்படுகின்றனர். இப்படி தயார்ப்படுத்தப்படும் குழந்தைகளுக்கு ஸ்டெப் ஃபாதர்/ஸ்டெப் மதரோடு வசிப்பது பெரிதாக எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது.//

your children,my children, எல்லா ஓக்கே தான்...அந்த குழந்தைகளை பழக்குகிறார்களாம்.த்தூ...நாங்க இப்புடித்தா புடிச்சா இருப்போம்.இல்லன்ன அத்துகிறுவோம்...உன்னை பெத்தவனே உனக்கு எப்போதும் அப்பனா இருக்கமாட்டான்..நீ எதுக்கும் தயாரா இருந்துக்கோன்னு சொல்றது..தயார்படுத்துரதாம்...தயார் படுத்துராங்களாம் என்னவோ புள்ளைய விண்வெளிக்கு அனுப்புறதுக்கு தயார்படுத்துறமாதிரி....

இப்படியான வாழ்வை வாழ்கிறவர்களுக்கு,தான் பெற்ற பிள்ளையே பாரமாகிவிடும்.இதில் பார்ட்னரின் பிள்ளை இனித்துவிடுமாம்...அப்படியே இருந்தாலும்.அவன் பிள்ளையை இவன் கண்டிக்கமுடியாது.இவள் பிள்ளையை அவன் கண்டிக்கமுடியாது..ஹ்ஹுக்ம்ம்ம்..இவன அவளும்,அவள இவனுமே கண்டிக்க கேள்வி கேக்க வக்கத்துபோய் நிக்கும் போது..இதெல்லா எதிர்பாக்கவே முடியாது,,,,அப்படியே கேட்டாலும்..நீ என்ன என்னைய பெத்தவளா/னா....மூடிட்டு போ...எனக்கு தெரியும்னு அது சொல்ல என்ன தடை இருக்கும்..ம்ம்...அப்புடி இருக்கும் போது கேட்பாரில்லாது வளரும் குழந்தை சீர் கெட்டு வளரும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

இன்னும் பொருப்பு என்பதை ஒருவருக்கொருவர் எடுத்துக் கொள்ள தயங்குவதாலே,இந்த லிவ்விங் டு கெதர் வாழ்வு தேர்வு செய்ய்ப்படுகிறது,அப்படி இருக்க பிள்ளை மட்டும் இனித்து விடுமா என்ன? பிடிக்காத ஒருவனுக்கு,பிள்ளை பெற்றுவிட்டால் நான் மட்டும் அவனை வளர்க்கவேண்டுமா? ஏன் அவனுக்கு பங்கு இல்லை என அவன்/அவள் மீது பொருப்பை சாட்ட இருவரும் முயல,இடையில் தனது புது பார்ட்னருடனான புது வாழ்வை அனுபவிக்க தயாராக....கடைசியில் இந்த குழந்தை விடுதியில் வளரும்.பெற்ற கடமைக்கு இருவரும் பணம் கொடுப்பர், அவ்வளவே....அதையும் கோர்ட்தான் முடிவு செய்யும்.//இந்த அளவுக்கு குழந்தை வளர்ப்பும் பக்குவமும் நம் நாட்டில் வந்துவிட்டதா என்றால் இல்லை என்றே சொல்லலாம்//


நல்லா வாய்ல வருது....தக்காளி, மேற்கத்திய மக்களே இதை  மெச்சுவதில்லை.நம்மூர்காரர் மெச்சுகிறார் என்றால்?? என்ன சொல்வது,,,,மெச்சுபவரது மனைவியும் பிள்ளைகளும் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும் என்றே சொல்லமுடிகிறது.அண்ணன் எப்போ வேன்னலும் அப்பீட்டாகிடுவார்.

//திருமணமாகி விவாகரத்தாரவங்களின் நிலை இதை ஒத்ததில்லையா? என கேட்கிறார்கள்.//

நண்பா சொந்த வண்டி ஓட்ரதுக்கும்,கேட்பாரில்லாத வண்டி ஓட்ரதுக்கும் வித்யாசம் இருக்கில்லையா?...திருமண பந்தத்துல,நாளைக்கு நீயோ,அல்லது உன் மனைவியோ தப்பு பண்ணுனா?அநீதம் இழைக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்க நாளுபேர் பேசலாம்.இல்லை கோர்ட் கூட அணுகலாம்.

ஆனால் உங்க கலாச்சாரத்துல??? ம்ம்ஹும்....மண்ணும் கிடையாது...

சரி திருமணத்த வேறாவும்,விபச்சாரத்த வேறாவும் பாக்குரவங்க. விபச்சாரத்துக்கு என்ன definition தருவாங்க? திருமண பந்தம் என்பது வேறு..விபச்சாரம் என்பது வேறு.லிவ்விங் டூ கெதர்'ல திருமணம் இல்லை...அப்டீன்னா????

ஊரறிய ஒரு விபச்சாரி இருக்கிறாள்,அவளிடம் போரவங்க எல்லாம் "லிவ்விங் டு கெதர்" சார்.இவள எனக்கு புடிக்கும் போதுலா, நான் வந்து இவகூட வாழ்ந்துட்டு போறேன்னு சொன்னா? அதுவும் ல்வ்விங் டூ கெதர்தான்...இரண்டும் வேறல்ல...

விபச்சாரத்தை அங்கீகரிக்கும் கலாச்சாரம் லிவ்விங் டூ கெதர் என்பதால் 
"லிவ்விங் டு கெதர் = விபச்சாரம்"

Comments
Reply Message
[url=http://cephalexin250mg.us.org/]cephalexin[/url]
By AaronBache
2017-09-17 02:36:00
 
[url=http://hydrochlorothiazide25mg.pro/]hydrochlorothiazide 12.5 mg cp[/url] [url=http://retina.directory/]generic retin a cream[/url] [url=http://lisinopril.live/]lisinopril[/url]
By MichaelDop
2017-09-14 07:00:51
 
[url=http://cialiscostperpill.us.org/]cialis canada pharmacy[/url]
By Charlesfef
2017-09-12 17:03:28
 
[url=http://indocin247.us.com/]indocin[/url] [url=http://trazodone247.us.com/]trazodone hydrochloride[/url]
By Bennytap
2017-09-25 07:27:48
 
[url=http://cephalexin250mg.us.org/]cephalexin 250 mg[/url] [url=http://effexorxr.us.org/]effexor xr[/url]
By Charlesfef
2017-09-25 22:35:07
 

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match
மகளிர்

பிற கவிதைகள்
Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in