நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவு வகைகள்
,15 Foods That Boost the Immune System - Healthline 10 Foods That Can Boost Your Immune System how to improve your immune system quickly how to boost immune system when sick
First Published : Friday , 26th May 2017 07:41:40 PM Last Updated : Friday , 26th May 2017 07:41:40 PM
உடலின் நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிப்பதற்கு உடற்பயிற்சிகள், ஊட்டச்சத்துக்கள், சுவாச பயிற்சி, தியானம் ஆகியவை முக்கிய பங்கு வகிக்கின்றன.
சிட்ரஸ் பழங்கள் உடல் ஆரோக்கியத்தையும், நோய் எதிர்ப்பு தன்மையையும் மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிப்பவை. அவற்றுள் ஆரஞ்சு, எலுமிச்சை, திராட்சை போன்ற பழங்களில் வைட்டமின் சி அதிகம் நிரம்பியிருக்கிறது.
அவை ரத்த வெள்ளை அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதோடு, நோய் தொற்றுவில் இருந்தும் உடலை பாதுகாக்கும். அத்துடன் காய்ச்சல் போன்ற உடல்நல பாதிப்பில் இருந்தும் காக்கும்.
எலுமிச்சை பழம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஆற்றல் கொண்டது. உடலுக்கு நன்மை செய்யும் பாக்டீரியாக்களின் செயல்பாடுகளை ஊக்குவித்து உடல் வெப்ப நிலையை சீராக பராமரிக்க உதவுகிறது. எலுமிச்சை பழத்தை சாறு பிழிந்து தண்ணீர், சூப்கள், சாலட்டுகளில் கலந்து சாப்பிடலாம்.
பேரீச்சம் பழத்தில் இரும்பு சத்து அதிகம் இருக்கிறது. அதனை தேனுடன் கலந்து சாப்பிட்டு வரலாம். தொடர்ந்து சாப்பிட்டு வருவது உடலுக்கு சக்தியை தரும். நோய் எதிர்ப்பு ஆற்றல் அதிகரிக்கும்.
மஞ்சள், சோம்பு, பூண்டு போன்றவை உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களை எதிர்த்து போராடும் தன்மை கொண்டவை. அதனை அன்றாட உணவில் பயன்படுத்தி வருவது நோய் எதிர்ப்பு சக்தியை பெருக்கும்.
பீன்ஸ், சிப்பி வகை மீன்கள் போன்றவற்றில் துத்தநாக சத்துக்கள் அதிகம் இருக்கின்றன. பொதுவாகவே உடலில் துத்தநாக பற்றாக்குறை ஏற்பட்டால் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து உடல் பலகீனமாகிவிடும். ஆதலால் துத்தநாக சத்துக்கள் கொண்ட உணவுகளை அவசியம் சாப்பிட்டு வர வேண்டும்.
கீரை வகைகளில் தாதுக்கள், வைட்டமின்கள், இரும்பு சத்துக்கள் அதிகம் இருக்கின்றன. அவை நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிப்பதோடு பலவகையான நோய்கள் வராமல் தற்காத்துக்கொள்ளவும் உதவிபுரிகின்றன.
தயிர் மற்றும் பால் சார்ந்த பொருட்கள் உடலுக்கு நன்மை செய்யும் பாக்டீரியாக்களின் செயல்பாட்டுக்கு உறுதுணையாக இருக்கின்றன. மேலும் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவுகின்றன.
கேரட், தக்காளி, நெல்லிக்காய், பச்சைக் காய்கறிகள் போன்றவற்றில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் இ போன்றவை நிறைந்திருக்கின்றன. அவை உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு உடலுக்கு தீங்கு விளைவிக்கும் நோய் தொற்றுவில் இருந்தும் காக்கின்றன.
உடல் சோர்வை நீக்கி ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் வாழ்வதற்கான சில வழிகள் தூக்கமின்மை, நாள்பட்ட மன அழுத்தம் மற்றும் குறைபாடுடைய திட்ட உணவு போன்ற சில விஷயங்கள் உங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தை பலவீனப்படுத்தக்கூடும்..அதற்கு பதிலாக, நீங்கள் உங்களை கவனித்து உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஆரோக்கியமான பழக்கங்களை உருவாக்க வேண்டும். ஆரோக்கியமான வாழ்க்கை
ஆஸ்துமா, புற்றுநோய், சர்க்கரை நோயை குணமாக்கும் பாகற்காயின் மருத்துவ குணங்கள் கோடைகாலத்தில் தாராளமாக கிடைக்கும் பாகற்காயின் நன்மைகள் குறித்து பார்க்கலாம். பாகற்காயின் கசப்பு தன்மைக்காகவே இதனை பயன்படுத்த தயங்குவோர் ஏராளம். ஆனால் இதன் இலை, காய், பழம், வேர் என அனைத்துமே மிகுந்த மருத்துவப் பயன்களை உள்ளடக்கியது. பல்வேறு நோய்களை போக்கும் நோய்
குழந்தைகளுக்கு பாதாம் பால் கொடுப்பதனால் கிடைக்கும் பலன்கள் பொதுவாக பாதாம் எல்லோருக்கும் மிகவும் நல்லது. அதிக நார்சத்து, இரும்பு, கால்சியம், பொட்டாசியம் மற்றும் பல முக்கிய மினரல்களை கொண்டுள்ளது. குறைந்த அளவு கொழுப்பு உள்ளது. விட்டமின் ஏ, பி நிறைந்தது. எலும்பு வளர்ச்சிக்கு தேவையான 33% கால்சியம் கொண்டுள்ளது.பாதாமை அப்படியே