ரஜினிகாந்த் நடிக்கும் 164-ஆவது படத்தின் பெயர் காலா சப்டைட்டில் கரிகாலன்,Super star rajinikanth 164 th film has been named as "KAALA tamil seithigal india news tamil seithigal
india seithigal tamil news
ரஜினிகாந்த் நடிக்கும் 164-ஆவது படத்தின் பெயர் காலா சப்டைட்டில் கரிகாலன்
First Published : Thursday , 25th May 2017 04:34:56 PM Last Updated : Thursday , 25th May 2017 04:34:56 PM
அட்டகத்தி, மெட்ராஸ் படங்களை டைரக்டு செய்து பிரபலமான பா.ரஞ்சித் கடந்த வருடம் ரஜினிகாந்தை வைத்து ‘கபாலி’ படத்தை இயக்கி வெளியிட்டார்.
இந்த படம் உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து மீண்டும் புதிய படமொன்றில் ரஜினிகாந்தும் பா.ரஞ்சித்தும் இணைந்துள்ளனர்.
இந்த படத்தை நடிகர் தனுஷ், தனது ‘வொண்டர்பார்’ பட நிறுவனம் சார்பில் தயாரிப்பதாக அறிவித்து உள்ளார். பட வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
மும்பையில் பிரபல தாதாவாக விளங்கிய ஹாஜி மஸ்தான் வாழ்க்கையை மையமாக வைத்து இந்த படம் தயாராவதாகவும் ஹாஜி மஸ்தான் கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் நடிக்கிறார் என்றும் செய்திகள் வெளிவந்தன. இதனால் படத்துக்கு பரபரப்பான எதிர்பார்ப்பு நிலவியது.
இந்த நிலையில் பாரதீய சிறுபான்மையினர் கட்சியின் தலைவர் சுந்தர்சேகர், படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்ததுடன்,சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று குறிப்பிட்டு இருந்தார்.
இதற்கு பதில் அளித்து தனுசின் ‘வொண்டர்பார்’ பட நிறுவனம் இந்த படத்தின் கதை எந்த வகையிலும் ஹாஜி மஸ்தான் மற்றும் அவர்களுடைய குடும்ப பின்னணியை வைத்து உருவாக்கப்பட்ட கதை கிடையாது என அறிவித்தது.
ரஜினிகாந்த் நடிக்கும் இந்தபட்ம் அவரின் 164-ஆவது படமாகும். இந்த படத்திற்கு காலா என பெயர் வைக்கப்பட்டுள்ளது.காலா படத்தலைப்புக்கு கீழே கரிகாலன் என சப்டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. என இயக்குனர் பா.ரஞ்சித் தனது டுவிட்டரில் தெரிவித்து உள்ளார்.
கரிகாலன் என்ற பெயரின் சுருக்கமே காலா; ரஜினிக்கு பிடித்த பெயர் என்பதால் காலா என வைக்கப்பட்டுள்ளது என இயக்குநர் ரஞ்சித் கூறி உள்ளார்.
ரஜினியின் காலா படம் தமிழ், இந்தி, தெலுங்கு என 3 மொழிகளில் வெளியாகிறது;காலா படத்தின் படப்பிடிப்பு மும்பையில் 28 ஆம் தேதி தொடங்குகிறது என ரஞ்சித் கூறினார்.
எங்க வீட்டு மாப்பிள்ளை’ - ஜோடியைத் தேர்ந்தெடுக்காமல் நழுவிய ஆர்யா எங்க வீட்டு மாப்பிள்ளை’ நிகழ்ச்சியில் தன்னுடைய ஜோடியைத் தேர்ந்தெடுக்காமல் ஆர்யா நழுவிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிகழ்ச்சி ‘எங்க வீட்டு மாப்பிள்ளை’. ஆர்யாவுக்கு ஏற்ற பெண்ணை, ஆர்யாவே தேர்ந்தெடுப்பதுதான் இந்த நிகழ்ச்சியின் நோக்கம். நடிகை சங்கீதா தொகுத்து வழங்கிய
எல்லா துறைகளிலும் பெண்களுக்கு செக்ஸ் தொல்லை இருக்கிறது - ரம்யா நம்பீசன் படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் சினிமா துறையில் மட்டுமல்ல, அனைத்து துறைகளிலும் உள்ளது என்றும், பெண்கள் தைரியமாக இதுபற்றி பேச வேண்டும் என்றும் ரம்யா நம்பீசன் கூறியிருக்கிறார். படவாய்ப்புக்காக பெண்களை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் இருக்கிறது என்று பல்வேறு நடிகைகள் தெரிவித்து வருகிறார்கள்.
தன் மீதும் கணவர் மீதும் பாலியல் புகார் சட்டப்படி நடவடிக்கை - நடிகை ஜீவிதா தெலுங்கு நடிகை ஸ்ரீ ரெட்டி பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைப்பவர்களின் விபரங்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் தெலுங்கு டிவி சேனல் ஒன்றில் திரையுலகம் குறித்த விவாத நிகழ்ச்சி நடந்தது.இந்த நிகழ்ச்சியில் சமூக ஆர்வலர் சந்தியா கலந்து கொண்டு பேசினார்.நடிகை ஜீவிதா தனது