tamilkurinji logo
 

இந்தியா-தென்னாப்பிரிக்கா மோதல் தயார்,


செய்திகள் >>> விளையாட்டு

இந்தியா-தென்னாப்பிரிக்கா மோதல் தயார்

First Published : Monday , 25th May 2015 08:33:21 PM
Last Updated : Monday , 25th May 2015 08:33:41 PM


இந்தியா-தென்னாப்பிரிக்கா மோதல் தயார்,

இந்தியா, தென் ஆப்ரிக்கா அணிகளுக்கு இடையிலான ஒருநாள் போட்டி சென்னையில் வரும் அக்டோபர் அல்லது நவம்பர் மாதம் நடக்கவுள்ளது.

வரும் அக்டோபர் மாதம் இந்தியா வரவுள்ள தென் ஆப்ரிக்க அணி நான்கு டெஸ்ட், ஐந்து ஒருநாள் மற்றும் மூன்று சர்வதேச ‘டுவென்டி–20’ போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இத்தொடருக்கான போட்டிகள் நடக்கும் மைதானங்களை, இந்திய கிரிக்கெட் போர்டின் (பி.சி.சி.ஐ.,) பயணம் மற்றும் அட்டவணை கமிட்டி  நேற்று அறிவித்தது.

இதன்படி தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான நான்கு டெஸ்ட் போட்டிகள் டில்லி, பெங்களூரு, ஆமதாபாத், நாக்பூரில் நடத்த முடிவு செய்யப்பட்டது. ஐந்து ஒருநாள் போட்டிகள் சென்னை, கான்பூர், மத்திய பிரதேசம், ராஜ்கோட் மற்றும் மும்பையில் நடந்த தீர்மானிக்கப்பட்டது.

மத்திய பிரதேசத்தில் நடக்கவுள்ள போட்டியை இந்துார் அல்லது குவாலியரில் நடத்தப்படும். மூன்று சர்வதேச ‘டுவென்டி–20’ போட்டிகளை கோல்கட்டா, மொகாலி, தரம்சாலாவில் நடத்த முடிவெடுக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து இலங்கைக்கு எதிரான மூன்று சர்வதேச ‘டுவென்டி–20’ போட்டிகளை புனே, விசாகப்பட்டினம், டில்லியில் நடத்த முடிவு செய்யப்பட்டது.

தென் ஆப்ரிக்கா மற்றும் இலங்கை தொடர்களுக்கான முழுஅட்டவணை விரைவில் வெளியிடப்படும் என பி.சி.சி.ஐ., சார்பில் தெரிவிக்கப்பட்டது.



  Tags :  
இந்தியா-தென்னாப்பிரிக்கா மோதல் தயார், இந்தியா-தென்னாப்பிரிக்கா மோதல் தயார், இந்தியா-தென்னாப்பிரிக்கா மோதல் தயார்,
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 தெண்டுல்கரை ஓய்வுபெறும்படி சொல்லும் உரிமை யாருக்கும் கிடையாது.
இந்திய கிரிகெட் அணியின் மூத்த வீரர் 39 வயதான சச்சின் தெண்டுல்கர் சமீபத்தில் நடந்த ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் ஒரே ஒரு அரைசதம் மட்டுமே அடித்தார். அவர் உடனடியாக ஓய்வு பெற வேண்டும் என்று முன்னாள் கேப்டன் கபில்தேவ் உள்ளிட்டோர் வலியுறுத்தியுள்ளனர். இந்த

மேலும்...

 சென்னையில் சேப்பாக்கத்தில் ஐ.பி.எல். கிரிக்கெட்: டிக்கெட் வாங்க திரண்ட ரசிகர்கள்
6-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஏப்ரல் 3-ந்தேதி தொடங்குகிறது. மே 26-ந்தேதி வரை இந்தப்போட்டி நடைபெறுகிறது. ஐ.பி.எல். போட்டியில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 10 ஆட்டங்கள் நடக்கிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் மோதும் 8 `லீக்\\\' ஆட்டமும், குவாலிபையர்1

மேலும்...

 லண்டன் ஒலிம்பிக் கோலாகல தொடக்கம்
உலகில் உள்ள கோடிக்கணக்கான ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த லண்டன் ஒலிம்பிக் போட்டி சனிக்கிழமை அதிகாலை 1.30 மணிக்கு கோலாகலமாகத் தொடங்கியது. பிரிட்டன் தலைநகர் லண்டனில் போட்டி நடைபெறும் இடமான ஒலிம்பிக் பார்க் பகுதியே விழாக்கோலம் பூண்டிருந்தது. லண்டன் நகரில் திரும்பும் திசையெல்லாம்

மேலும்...

 முதல் ஒருநாள் போட்டி: இந்தியா-இலங்கை நாளை மோதல்
டோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 5 ஒருநாள் போட்டி மற்றும் ஒரே ஒரு 20 ஓவர் போட்டிகளில் விளையாடுவதற்காக இலங்கை சென்றுள்ளது. இந்தியா-இலங்கை அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி ஹம்பன் டோடா மைதானத்தில் நாளை (21-ந்தேதி) நடக்கிறது. இதற்காக

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


























மகளிர்





















Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in