இளமையை தக்கவைக்கவும் வயதான தோற்றத்தை மறைப்பதற்குமான உணவுகள்

இளமையை தக்கவைக்கவும்  வயதான தோற்றத்தை மறைப்பதற்குமான உணவுகள்

நெல்லிக்காயில்தான் வைட்டமின் சி அதிக அளவில் இருக்கிறது. தினமும் ஒரு நெல்லிக்காய், தேனில் ஊறவைத்த சிறு துண்டு இஞ்சியை எடுத்துக்கொள்ளுங்கள்.

 மிளகு சேர்த்துச் சமைத்த பொன்னாங்கண்ணிக் கீரை கண்களைப் பாதுகாப்பதுடன் மேனியைப் பளபளப்பாக வைத்திருக்கும்.


மணத்தக்காளிக் கீரை, வயிற்றுப் புண் போக்கி, ஜீரணத்தைச் சீராக்கும். கரிசலாங்கண்ணிக் கீரை, வயதானால் தோலில் தோன்றும் வெண்புள்ளிகள், தேமல் போன்றவற்றைப் போக்கி, மூப்பைக் குறைக்கும்.

காலையில் வெறும் வயிற்றில் வெண்பூசணிச் சாறு குடிக்கலாம். உடல் எடை மற்றும் உடல் சூட்டைக் குறைக்கும். அசிடிட்டி பிரச்னை போயே போச்சு.

ஆண்களுக்கு வயது அதிகரிக்கும்போது, 'ப்ராஸ்டேட்’ சுரப்பி வீக்கமடையும். அவர்கள், சுரைக்காயை, பூண்டு சேர்த்துச் சமைத்துச் சாப்பிட்டால், மிகவும் நல்லது.

மேலே சொன்ன எதையுமே என்னால் வாங்கிச் செய்து சாப்பிட முடியாது'' என்பவர்கள், திரிபலாசூரணம் சாப்பிடலாம்.

நாட்டுமருந்துக் கடைகளில் கிடைக்கும் இந்த சூரணத்தை முதல் நாள் இரவே ஒரு மண் குவளையில் 2 டீஸ்பூன்  போட்டு, தண்ணீர் ஊற்றி ஊறவைக்கவேண்டும், காலையில் வெறும் வயிற்றில் அந்தத் தண்ணீரை அருந்த வேண்டும். இது நரையைத் தடுக்கும். மலச்சிக்கல் தீரும். சரும நோய்கள் சரியாகும். 

ஒவ்வொரு வேளை உணவுடனும் ஒரு பச்சை நிறக் காய் அல்லது கனியைக் கண்டிப்பாகச் சேர்க்க வேண்டும்.

மஞ்சள் அல்லது ஆரஞ்சு நிறக் காய் அல்லது பழத்தைச் சாப்பிடுவது கூடுதல் நலம்.

நடுத்தர வயதில், தோல் பராமரிப்புக்குக் கண்டிப்பாக வைட்டமின் இ தேவை. முளைகட்டிய தானியங்கள், பாதம், பிஸ்தா போன்றவற்றைச் சேர்த்துக்கொள்ளுங்கள். வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் வேர்க்கடலை சாப்பிட்டால், இளமை உங்கள் கைவசம்.


 அசைவ உணவு சாப்பிடுபவர்களுக்கு செலினியம், துத்தநாகம் எளிதில் கிடைத்துவிடும். சைவம் சாப்பிடுபவர்கள் அதற்கு மாற்றாக எள் மற்றும் கொட்டைப் பருப்பு வகைகளைச் சேர்த்துக்கொள்ளலாம். 


 வெற்றிலையில் குரோமியம் மிக அதிக அளவில் உள்ளது. தினமும் இரண்டு வெற்றிலைகளை மென்று சாப்பிட வேண்டும். இளமையைத் தக்கவைப்பதுடன், சர்க்கரையைக் கட்டுப்படுத்தவும் உதவும்.


சுத்திகரிக்கப்படாத நல்லெண்ணெய், கடலை எண்ணெய் மற்றும் கடுகு எண்ணெய் மட்டுமே நல்லது. மற்ற எண்ணெய்களுக்கு கூடிய விரைவில் குட்பை சொல்லுங்கள்.

காலையில் குடம் குடமாகத் தண்ணீர் குடிக்க வேண்டாம். தினமும், ஒரு மணி நேரத்துக்கு ஒரு டம்ளர் என்ற அளவில் குடித்தாலே போதுமானது.

முகம் கழுவியதும் அல்லது குளித்ததும் டவல் அல்லது கைக்குட்டையால், மேலிருந்து கீழ்நோக்கி அழுந்தத் துடைக்கக் கூடாது. வயது ஏற ஏற, நம் சருமம் தளர ஆரம்பிக்கிறது.

அதை, நாமும் அழுத்தினால், சீக்கிரமே முகம் தொங்கிவிடும். எப்போதுமே, முகம் கழுவிய பின் ஒற்றி எடுப்பதுதான் சிறந்தது. இல்லையெனில், அப்படியே விட்டுவிடலாம்.

குளிக்கும்போது, சோப்பைக் கைகளில் தேய்த்துக்கொண்டு, அந்த நுரையை உடல், முகம், கை, கால்களில் கீழிருந்து மேல்நோக்கித் தடவ வேண்டும்.

சோப்புக்குப் பதில் கடலைமாவு, பயத்தமாவு போட்டால், இன்னும் நல்லது. இவற்றில் எண்ணெய்த்தன்மை இருப்பதால், முகத்தில் வறட்சி நீங்கி, பளபளப்பு கிடைக்கும்.

வாரம் ஒருமுறை நல்லெண்ணெய்க் குளியல் அவசியம். தலைக்கு சீயக்காய்த்தூள் உபயோகிப்பதும், வயோதிகத்தைத் தள்ளிப்போடும் செயல்தான். வறட்சி, பொடுகு போன்ற பிரச்னைகளால் முடி உதிராது. நரையும் ஏற்படாது.


செம்பருத்தி இலை அல்லது பூவை அரைத்து, கை, கால்களில் தடவி 10 நிமிடங்கள் கழித்துக் கழுவினால், வறட்சி நீங்கி மிருதுவான சருமம் கிடைக்கும்.

தினமும் உடற்பயிற்சி செய்வது அவசியம். அதில், முதல் இடம் பிராணாயாமத்துக்குத் தான்.  ஹார்மோன் செயல்பாடுகளைச் சீராக்க, பிராணாயாமத்தைவிடச் சிறந்த மருத்துவம் இல்லை.


யோகாசனம் செய்ய முடியாதவர்கள், நீச்சல் பயிற்சி அல்லது நடைப்பயிற்சியாவது செய்ய வேண்டும். அந்தப் பயிற்சியை, 'கடனே’ என்று செய்யாமல் ரசித்து, அனுபவித்துச் செய்தால் பலன் இன்னும் அதிகம்.


இஸ்லாமியர்கள் தொழுகையின்போது கால்களை மடக்கி அமரும் நிலைதான் வஜ்ராசனம். 'வஜ்ரம்’ என்றால் வைரம் என்று பொருள். வைரம் பாய்ந்த கட்டையாக நம் உடலை வைத்திருக்க, வஜ்ராசனத்தை விடச் சிறந்த பயிற்சி இல்லை.

சாதாரணமாக வீட்டில் அமரும்போதும், வீட்டில் மற்றவர்களுடன் பேசிக்கொண்டிருக்கும்போதும், நாளிதழ் வாசிக்கும்போதும், வஜ்ராசனத்தில் இருக்கலாம். தினசரி 15 நிமிடங்கள் இருந்தால் போதும்.

https://goo.gl/m2An6T






06 Feb 2019

கர்ப்ப காலத்தில் மனஅழுத்தத்தை போக்குவதற்கான சில வழிமுறைகள்.Reduce Stress During Pregnancy

31 Jan 2019

மாதவிடாய் கோளாறுகள், உடல் பருமன், புற்றுநோய் இவற்றை குணப்படுத்தும் கருஞ்சீரகத்தின் மருத்துவ பயன்கள் / karunjeeragam benefits in tamil

01 Jan 2019

நெஞ்சில் இருக்கும் நாள்பட்ட சளியை நீக்க பாட்டி மருத்துவம்.

27 Dec 2018

கல்லீரலுக்கு பலம் தரும் மணத்தக்காளி கீரை மருத்துவ குறிப்புகள்.

25 Dec 2018

நெஞ்செரிச்சலை உடனே போக்க கூடிய 4 மருத்துவ குறிப்புகள்.

14 Sep 2018

உடல் எடையை குறைக்க அற்புதமான எளிய வழிமுறைகள்

31 Jul 2018

இளமையை தக்கவைக்கவும் வயதான தோற்றத்தை மறைப்பதற்குமான உணவுகள்

23 Jul 2018

அதிகப்படியான கொலஸ்டராலை குறைப்பதற்கான எளிய வழிகள் | simple ways to control cholesterol

18 Jul 2018

இதயத்தை பலப்படுத்தும் பேரீச்சைப் பழத்தின் மருத்துவ குணங்களும் நன்மைகளும்

09 Jul 2018

வயிற்று புண்களை குணமாக்கும் சீத்தாபழத்தின் மருத்துவ பயன்கள் .| seetha palam medicinal uses