இளம்பெண்கள் கடலில் இறந்து மிதந்தது தொடர்பாக விசாரணை ஆரம்பம்.

இளம்பெண்கள்  கடலில் இறந்து மிதந்தது தொடர்பாக விசாரணை ஆரம்பம்.
ஆப்பிரிக்க நாடுகளில் உள்ள அகதிகள் தாக்குதல் காரணமாக ஐரோப்பிய நாடுகளுக்கு தரைக்கடல் வழியாக ஆபத்தான படகுப் பயணம் மேற்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் மத்திய தரைக்கடலில் இத்தாலி அதிகாரிகள் மேற்கொண்ட மீட்பு பணியின்போது, 22 இளம் பெண்களின் உடல்களை மீட்டுள்ளனர்.

இது தொடர்பான விசாரணையை இத்தாலிய அதிகாரிகள் தொடங்கியுள்ளனர். உள்நாட்டுப் போர் நடைபெற்று வரும் சிரியா, லிபியா உள்ளிட்ட ஆப்பிரிக்க நாடுகளில் உள்ள அகதிகள் மீது தாக்குதல் நடத்துவதால் அங்கிலிருந்து வேறு நாட்டிற்கு சென்று தஞ்சமடைகின்றனர்.

இவர்கள் மத்திய தரைக்கடல் வழியாக ஆபத்தான படகுப் பயணம் மேற்கொள்ளும்போது சில சமயங்களில் விபத்தில் சிக்கி உயிரிழக்கின்றனர்.

14 முதல் 18 வயது வரை கொண்ட அந்தப் பெண்கள் நைஜர் மற்றும் நைஜீரியாவைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. லிபியா வழியாக ஐரோப்பிய நாடுகளுக்கு செல்ல இந்த ஆபத்தான பாதையில் பயணித்திருக்கலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

படகு மூழ்கியதால் அவர்கள் இறந்திருக்கலாம் என்று பொதுவாக கூறப்பட்டாலும், அவர்கள் சாவுக்கான உண்மையான காரணம் தெரியவில்லை.

இளம்பெண்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளதால் இது குறித்து விசாரணை நடத்தப்படும் எனவும் தகவல்கள் தெரியவந்துள்ளது. மேலும் ஆட்கடத்தல் தொடர்பாக எகிப்து மற்றும் லிபியாவைச் சேர்ந்த இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் கூறப்படுகிறது.
https://goo.gl/uvRy5r






03 Aug 2018

1 டிரில்லியன் அமெரிக்க டாலர் வியாபார உலகில் புதிய உச்சம் தொட்டு சாதித்த ஆப்பிள்

11 Jul 2018

மருந்தில் வி‌ஷம் கலந்து 20 நோயாளிகளை கொன்ற செவிலியர்.

10 Jul 2018

தாய்லாந்து குகையிலிருந்து 13 பேரும் பத்திரமாக மீட்பு

06 Jul 2018

விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக பேசிய இலங்கை பெண் அமைச்சர் ராஜினாமா

02 Jul 2018

குகைக்குள் சிக்கிய கால்பந்து அணி சிறுவர்கள் 9 நாட்களுக்கு பிறகு உயிருடன் மீட்பு

24 Jun 2018

சவுதி அரேபியாவில் கார் ஓட்ட பெண்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீங்கியது

19 Jun 2018

காரில் மேக்-அப் போட்டுக் கொண்டே சென்ற பெண்ணுக்கு நடந்த விபரிதம்

18 Jun 2018

டொனால்டு டிரம்பின் திட்டத்திற்கு அவருடைய மனைவி மெலானியா எதிர்ப்பு

29 May 2018

முன்னாள் காதலர்களுக்கு ஆந்தராக்ஸ் பவுடர் மிரட்டல் விடுத்த பெண்ணுக்கு 2 ஆண்டு தண்டனை

20 Apr 2018

டைம் இதழ் வெளியிட்ட செல்வாக்கு மிக்க 100 பேர் பட்டியலில் வீராட் கோலி - தீபிகா படுகோனே