tamilkurinji logo
 

எச்.டி.சி. போன்கள் விண்டோஸ் 8 சிஸ்டத்துடன் வெளியீடு ,


எச்.டி.சி. போன்கள் விண்டோஸ் 8 சிஸ்டத்துடன் வெளியீடு

First Published : Monday , 16th December 2013 09:05:47 PM
Last Updated : Monday , 16th December 2013 09:24:14 PM


எச்.டி.சி. போன்கள் விண்டோஸ் 8 சிஸ்டத்துடன் வெளியீடு
,

ஸ்மார்ட் போன்களைத் தயாரித்து வழங்குவதில் பல ஆண்டுகால அனுபவம் பெற்றுள்ள, எச்.டி.சி. நிறுவனம், விரைவில், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் கூடிய புதிய ஸ்மார்ட் போன்களைத் தயாரித்து விற்பனைக்கு அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது.

ஏற்கனவே விற்பனை செய்யப்பட்டு வரும் மாடல்கள், அவற்றின் பயன்பாட்டுக் காலத்தை நெருங்கி விட்டதால், புதிய மாடல்களை வடிவமைக்க எச்.டி.சி. திட்டமிடுவதாக, இந்நிறுவனத்தின் இந்தியப் பிரிவு தலைவர் சித்திக் தெரிவித்துள்ளார்.

விண்டோஸ் 8 சிஸ்டத்துடன் முதன் முதலில் மொபைல் போனை வடிவமைத்து வெளியிட்டது எச்.டி.சி. நிறுவனம் தான் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் கட்டமைப்பினைப் பயன்படுத்தி, விண்டோஸ் 8 எக்ஸ் மற்றும் விண்டோஸ் 8எஸ் என இரண்டு மாடல்களை, எச்.டி.சி. முதலில் வெளியிட்டது. தொடர்ந்து மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் புதிய மாடல்கள் வடிவமைக்கப்படும் எனத் தெரிகிறது.


எச்.டி.சி. 1 என்ற வரிசையில் மூன்று மாடல்களையும், அனைவரும் வாங்கும் நிலையில் டிசையர் என்ற பெயரில் எட்டு மாடல்களையும் எச்.டி.சி. வெளியிட்டது. வரும் டிசம்பருக்குள், டிசையர் வரிசையில், மேலும் இரண்டு அல்லது நான்கு மாடல்களை, இந்நிறுவனம் கொண்டு வரும். இவற்றுடன், எச்.டி.சி. 1 மேக்ஸ் என்ற ஸ்மார்ட் போன் ரூ.56,000 என்ற விலையில் வெளியிடப்படும்.


இந்திய ஸ்மார்ட் போன் சந்தையில், எச்.டி.சி. நிறுவனத்திற்கு ஐந்து முதல் ஆறு சதவீத பங்கு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2012 ஆம் ஆண்டில், இந்தியாவில், ஒரு கோடியே 80 லட்சம் ஸ்மார்ட் போன்கள் விற்பனை செய்யப்பட்டன. இந்த ஆண்டில் இது 2 கோடியே 60 லட்சமாக உயரும். வரும் 2014ல் இது, 4 கோடி என்ற எண்ணிக்கையை எட்டும் எனவும் கருதப்படுகிறது.


இந்தியாவில், ஸ்மார்ட் போன் விற்பனை 80 முதல் 90 சதவீதம் வரை உயர்ந்து வருகிறது. இந்த வளர்ச்சி, போன்களின் விலையைப் பொறுத்தவரை பல்வேறு நிலைகளில் உள்ளது. எச்.டி.சி.15 சதவீத சந்தைப் பங்கினைப் பிடிக்க இலக்கு நிர்ணயித்துள்ளதாக சித்திக் அறிவித்துள்ளார்.



  Tags :  
எச்.டி.சி. போன்கள் விண்டோஸ் 8 சிஸ்டத்துடன் வெளியீடு
, எச்.டி.சி. போன்கள் விண்டோஸ் 8 சிஸ்டத்துடன் வெளியீடு
, எச்.டி.சி. போன்கள் விண்டோஸ் 8 சிஸ்டத்துடன் வெளியீடு
,
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 ஸ்மார்ட் போன் விற்பணையில் மைக்ரோமேக்ஸ் சாதணை
மைக்ரோமேக்ஸ் நிறுவனம், கூடுமானவரை பட்ஜெட் விலையில், இரண்டு சிம் இயக்கத்தில், மக்கள் விரும்பும் அனைத்து வசதிகளும் கொண்ட மொபைல் போன்களைத் தொடர்ந்து விற்பனை செய்து வருகிறது. இதே போல, கேன்வாஸ் என்ற பெயரில் ஸ்மார்ட் போன்களைத் தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. அண்மையில்,

மேலும்...

 லூமியா 720 ரூ.18,000
சென்ற மாதம், நோக்கியா நிறுவனம் லூமியா 520 மொபைல் போனை அறிமுகப்படுத்திய போது, லூமியா 720 மொபைல் போனையும் கொண்டு வந்தது. இப்போதுதான், இந்தியாவில் வர்த்தக இணைய தளமான Flipkartல், இந்த போன் ரூ.18,999 விலையிடப்பட்டு பட்டியலிடப்பட்டுள்ளது. 4.3 அங்குல கருப்பு

மேலும்...

 விற்பணைக்கு வந்தது எல்.ஜி பி 715
எல்.ஜி. நிறுவனம், சென்ற பிப்ரவரியில் அறிவித்த தன் 3ஜி மொபைல் போனை, தற்போது விற்பனைக்கு அறிமுகப் படுத்தியுள்ளது. பி 715 என அழைக்கப்படும் இந்த போனின் அதிக பட்ச சில்லரை விலை ரூ. 14,999. நான்கு அலைவரிசைகளில் இயங்கும் இந்த போனில்

மேலும்...

 இன்று முதல் கேலக்ஸி எஸ் 4 இந்தியாவில் விற்பணை
சாம்சங் நிறுவனம் அண்மையில் அறிமுகப்படுத்திய சாம்சங் காலக்ஸி எஸ் 4 ஸ்மார்ட் போன், வரும் ஏப்ரல் 25ல் இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்ற மாதம் நியூயார்க் நகரில், இந்த போன் அறிமுகப்படுத்தப்பட்டது. ஏப்ரல் 26 மற்றும் 27 தேதிகளில்,

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


























மகளிர்





















Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in