tamilkurinji logo
 

என்னுடைய தங்கையின் திருமணத்தை மிஸ் செய்கிறேன், நியூசிலாந்தை இறுதி போட்டிக்கு அழைத்து சென்ற எலியாட் ,Grant Elliott to Miss Sister\'s Wedding After Taking New Zealand to World Cup 2015 Final

Grant,Elliott,to,Miss,Sister\'s,Wedding,After,Taking,New,Zealand,to,World,Cup,2015,Final


செய்திகள் >>> விளையாட்டு

என்னுடைய தங்கையின் திருமணத்தை மிஸ் செய்கிறேன், நியூசிலாந்தை இறுதி போட்டிக்கு அழைத்து சென்ற எலியாட்

First Published : Wednesday , 25th March 2015 05:42:23 AM
Last Updated : Wednesday , 25th March 2015 05:42:23 AM


என்னுடைய தங்கையின் திருமணத்தை மிஸ் செய்கிறேன், நியூசிலாந்தை இறுதி போட்டிக்கு அழைத்து சென்ற எலியாட் ,Grant Elliott to Miss Sister\'s Wedding After Taking New Zealand to World Cup 2015 Final

ன்னுடைய தங்கையின் திருமணத்தை மிஸ் செய்கிறேன், என்று நியூசிலாந்து அணியை இறுதி போட்டிக்கு அழைத்து சென்றுள்ள எலியாட் கூறியுள்ளார்.

 11–வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய நாடுகளில் நடந்து வருகிறது. இதில் நேற்று ஆக்லாந்தில் உள்ள ஈடன்பார்க் மைதானத்தில் நடந்த முதலாவது அரைஇறுதியில் உள்ளூர் அணியான நியூசிலாந்தும், தென்ஆப்பிரிக்காவும் பலப்பரீட்சை நடத்தின.

 தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான திரிலிங்கான அரைஇறுதியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்று முதல்முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.


 தென்ஆப்பிரிக்காவை ஓட ஓட விரட்டியடித்த 36 வயதான கிரான்ட் எலியாட் நியூசிலாந்து மண்ணின் மைந்தன் கிடையாது. அவர் தென்ஆப்பிரிக்க நாட்டுக்காரர் என்பது ஆச்சரியமான உண்மையாகும்.

தென்ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் பிறந்த எலியாட், அங்கு உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடி இருக்கிறார்.


தென்ஆப்பிரிக்க அணித்தேர்வில் இனரீதியிலான இடஒதுக்கீடு கொள்கை கடைபிடிக்கப்படுவதால் அவருக்கு அந்த அணியில் இடம் மறுக்கப்பட்டது.


அவரது திறமையை கண்டு வியந்த நியூசிலாந்து முன்னாள் டெஸ்ட் வீரர் கென் ருதர்போர்டு, தங்கள் நாட்டிற்கு வரும்படி ஆலோசனை வழங்கினார்.


அதன்படி 2001–ம் ஆண்டு தென்ஆப்பிரிக்காவை காலி செய்து விட்டு நியூசிலாந்துக்கு இடம் பெயர்ந்தார். படிப்படியாக நியூசிலாந்து அணியில் இடம் பிடித்து இன்று ஒரே நாளில் புதிய ஹீரோவாகவும் உருவெடுத்து விட்டார்.

84 ரன்கள் விளாசி நியூசிலாந்தை முதல்முறையாக இறுதிப்போட்டிக்கு அழைத்துச் சென்ற அவரே ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

எலியாட் கூறுகையில், ‘இந்த வெற்றி எனக்குரியதோ அல்லது நியூசிலாந்து அணிக்குரியதோ அல்ல. ஒட்டுமொத்த நியூசிலாந்து மக்களுக்குரியது. நியூசிலாந்து அணிக்காக விளையாடுவது உண்மையிலேயே பெருமை அளிக்கிறது.


இறுதிப்போட்டியில் யாரை சந்திக்கப்போகிறோம் என்பது கவலையில்லை. இரு அணியுமே (இந்தியா அல்லது ஆஸ்திரேலியா) தரமான அணி தான். இதே போன்று நாங்கள் தொடர்ந்து விளையாடினால் கோப்பையை வெல்வதற்கு எங்களுக்கு நல்ல வாய்ப்புள்ளது’ என்றார்.

என்னுடைய தங்கையின் திருமணத்தை மிஸ் செய்கிறேன், என்றும் நியூசிலாந்து அணியை இறுதி போட்டிக்கு அழைத்து சென்றுள்ள எலியாட் கூறியுள்ளார்.


 போட்டியில் தான் விளையாடிய நியூசிலாந்து வெற்றிபெற்றாலும், தோல்வியின் ஏமாற்றத்தை தாங்க முடியாமல் மைதானத்தில் விழுந்த ஸ்டெயினுக்கு, எலியாட் ஆறுதல் கூறினார்.


 எனது தங்கைக்கு வருகிற வெள்ளியன்று திருமணம் நடைபெற உள்ளது, துரதிஷ்டவசமாக நான் அவருடைய திருமணத்தை மிஸ் செய்கிறேன். நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். அவர் என்னுடைய அழகான சந்தோஷம், ஆனால் நான் அவருக்கான சிறப்பு பரிசை பெறுவதற்கு செல்கிறேன் என்று நினைக்கிறேன். என்று எலியாட் கூறினார்.


என்னுடைய தங்கையின் திருமணத்தை மிஸ் செய்கிறேன், நியூசிலாந்தை இறுதி போட்டிக்கு அழைத்து சென்ற எலியாட் ,Grant Elliott to Miss Sister\'s Wedding After Taking New Zealand to World Cup 2015 Final என்னுடைய தங்கையின் திருமணத்தை மிஸ் செய்கிறேன், நியூசிலாந்தை இறுதி போட்டிக்கு அழைத்து சென்ற எலியாட் ,Grant Elliott to Miss Sister\'s Wedding After Taking New Zealand to World Cup 2015 Final என்னுடைய தங்கையின் திருமணத்தை மிஸ் செய்கிறேன், நியூசிலாந்தை இறுதி போட்டிக்கு அழைத்து சென்ற எலியாட் ,Grant Elliott to Miss Sister\'s Wedding After Taking New Zealand to World Cup 2015 Final
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 IPL கிரிக்கெட்டில் புனே அணிக்கு 9–வது வெற்றி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது
IPL 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் புனே அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப்பை தோற்கடித்து 9–வது வெற்றியை பெற்றதுடன், அடுத்த சுற்றுக்கும் முன்னேறியது. 10–வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த ஏப்ரல்

மேலும்...

 IPL கிரிக்கெட்டில் குஜராத்தை வீழ்த்தியது, ஐதராபாத் அணி
ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் ஐதராபாத் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத்தை எளிதில் தோற்கடித்து அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.10–வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இறுதிகட்டத்தை எட்டி விட்டது. இதில் பங்கேற்றுள்ள

மேலும்...

 மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: கனடா வீராங்கனை பவுச்சர்டிடம் ‌ஷரபோவா தோல்வி
மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியின் பெண்கள் ஒற்றையர் பிரிவில் 2–வது சுற்று ஆட்டத்தில் ரஷிய வீராங்கனை ‌ஷரபோவா, கனடா வீராங்கனை பவுச்சர்டிடம் அதிர்ச்சி தோல்வி கண்டு வெளியேறினார்.மாட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ஸ்பெயினில் நடந்து வருகிறது. இதன் பெண்கள் ஒற்றையர்

மேலும்...

 ஐ.பி.எல். கிரிக்கெட்டில் கொல்கத்தாவை தோற்கடித்து பஞ்சாப் அணி 6–வது வெற்றி
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் பஞ்சாப் அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தாவை தோற்கடித்து 6–வது வெற்றியை பெற்றது.  10–வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இறுதிகட்டத்தை நெருங்கி வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகளும்

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match




























மகளிர்























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in