tamilkurinji logo
 

கெய்ல் அதிரடி சதம் வீண்,Gayle vain threshing

Gayle,vain,threshing,

செய்திகள் >>> விளையாட்டு

கெய்ல் அதிரடி சதம் வீண்

First Published : Monday , 1st June 2015 09:04:09 PM
Last Updated : Monday , 1st June 2015 09:04:09 PM


கெய்ல் அதிரடி சதம் வீண்,Gayle vain threshing

இங்கிலாந்தில் நடைபெறும் உள்ளூர் டி20 தொடரில், வெஸ்ட் இண்டீஸ் வீரர் கிறிஸ் கேல் அதிரடியாக 62 பந்தில் 151 ரன் விளாசியும்  சாமர்செட் அணி பரிதாபமாக தோல்வியைத் தழுவியது. டான்டன் கவுன்டி மைதானத்தில் நடந்த இந்த போட்டியில், டாசில் வென்று முதலில் பேட்  செய்த கென்ட் அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 227 ரன் குவித்தது. பெல் டிரம்மாண்ட் 51, கேப்டன் சாம் நார்த்ஈஸ்ட் 114 ரன் (58 பந்து, 16  பவுண்டரி, 2 சிக்சர்) விளாசினர்.

பில்லிங்ஸ் 24, ஸ்டீவன்ஸ் 22 ரன் எடுத்தனர். அடுத்து 20 ஓவரில் 228 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய சாமர்செட்  அணி, 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 224 ரன் எடுத்து 3 ரன் வித்தியாசத்தில் தோற்றது.

தொடக்க வீரராகக் களமிறங்கிய கிறிஸ் கேல் 151 ரன் விளாசி (62 பந்து, 10 பவுண்டரி, 15 சிக்சர்) இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். மற்ற  வீரர்களின் சொதப்பலான ஆட்டத்தால் சாமர்செட் அணி நூலிழையில் வெற்றி வாய்ப்பை நழுவவிட்டது. கேல் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.



    Tags :    
கெய்ல் அதிரடி சதம் வீண்,Gayle vain threshing கெய்ல் அதிரடி சதம் வீண்,Gayle vain threshing கெய்ல் அதிரடி சதம் வீண்,Gayle vain threshing
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 3-வது ஒருநாள் கிரிக்கெட்: விராட் கோலி சதம் வீண், இந்தியா மீண்டும் தோல்வி -ஆஸ்திரேலியா வெற்றி
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது ஒரு நாள் போட்டியிலும் இந்தியா தோல்வியடைந்தது. மேலும், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரையும் இழந்ததுஇந்தியா–ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3–வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மெல்போர்னில் நடைபெற்றது. போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில்

மேலும்...

 பாகிஸ்தான் ஆர்ப்பாட்டமான வெற்றி
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதல் ‘டுவென்டி–20’ போட்டியில் பாகிஸ்தான் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆறு ஆண்டுகளுக்குப்பின் பாகிஸ்தான் மண்ணில் சர்வதேச கிரிக்கெட் துவங்கியது. நேற்று லாகூரில் நடந்த முதலாவது ‘டுவென்டி–20’ போட்டியில் பாகிஸ்தான், ஜிம்பாப்வே அணிகள் மோதின.

மேலும்...

 பைனலில் கர்ஜிக்குமா சென்னை சிங்கம்!!!
எட்டாவது ஐ.பி.எல்., தொடரின் பைனலுக்கு சென்னை அணி முன்னேறியது. நேற்று நடந்த தகுதிச் சுற்று–2ல் மைக்கேல் ஹசியின் அரைசதம் கைகொடுக்க, 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பெங்களூரு அணி வெளியேறியது.ராஞ்சியில் நேற்று நடந்த 8வது ஐ.பி.எல்., தொடருக்கான தகுதிச் சுற்று–2ல்

மேலும்...

 அர்ஜுனா விருதுக்கு ரோஹித் சர்மாவின் பெயரை பரிந்துரைத்து பி.சி.சி.ஐ.
இந்திய கிரிகெட் அணியின் தொடக்க ஆட்டகாரர் ரோஹித் சர்மாவின் பெயர் இந்த ஆண்டுக்கான அர்ஜுனா விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. நேற்று கொல்லத்தாவில் நடந்த இந்திய கிரிக்கெட் வாரிய செயற்குழு கூட்டம் நடந்தது. அக்கூட்டத்தில் 2015-ம் ஆண்டுக்கான அர்ஜுனா விருதுக்கு ரோஹித் சர்மாவின்

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match




























மகளிர்





























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in