tamilkurinji logo
 

சிரியாவில் ட்விட்டர் உதவியோடு ஏழு வயது சிறுமி பத்திரமாக மீட்பு,SevenSeven-year old gets rescued from Aleppo after tweeting about the war in Syria

SevenSeven-year,old,gets,rescued,from,Aleppo,after,tweeting,about,the,war,in,Syria


செய்திகள் >>> உலகம்

சிரியாவில் ட்விட்டர் உதவியோடு ஏழு வயது சிறுமி பத்திரமாக மீட்பு

First Published : Tuesday , 20th December 2016 06:08:01 PM
Last Updated : Tuesday , 20th December 2016 06:08:01 PM


சிரியாவில்  ட்விட்டர் உதவியோடு ஏழு வயது சிறுமி   பத்திரமாக மீட்பு,SevenSeven-year old gets rescued from Aleppo after tweeting about the war in Syria


சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்தை பதவி நீக்கம் செய்யக் கோரி உள்நாட்டுப்போர் கடந்த ஆறு ஆண்டுகளாக நடந்து வருகிறது. இதில் சிரியாவின் பல்வேறு பகுதிகளிலும் கிளிர்ச்சியாளர்கள் மற்றும் அதிபர் ஆதரவு படையினர் இடையே ஏற்பட்ட சண்டையில் இதுவரை லட்சக் கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் ஏழு வயது குழந்தையான பனா அலாபெத் தனது தாய் ஃபாத்திமா உதவியுடன் ட்வீட் செய்து அலெப்போ நகரில் இருந்து பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார். வார இறுதியில் அலெப்போ நகரை விட்டு வெளியேற அனுமதிக்கப்பட்ட 2700 குழந்தைகளில் பனா அலாபெத் இடம் பெற்றிருக்கிறார்.

தனது தாயின் உதவியுடன் அலாபெத், அலெப்போவின் சூழ்நிலைகளை மிகவும் உருக்கமாக ட்விட்டரில் பதிவு செய்துள்ளார். கடந்த செப்டம்பர் மாதம் முதல் அலாபெத் மற்றும் அவரது தாயாரின் ட்விட்டரை சுமார் 211,000 பேர் பின்தொடர்ந்து வருகின்றனர். தனது வீடு முற்றிலுமாக அழிக்கப்பட்டதையும் அலாபெத் ட்விட்டரில் பதிவு செய்திருக்கிறார்.

தொடர்ந்து ட்வீட் செய்து வந்த அலாபெத் 24 மணி நேரத்திற்கு ட்வீட் செய்யாததை தொடர்ந்து அவரை பின் தொடர்பவர்கள் ட்விட்டரில் புதிய ஹேஷ் டேக் “WhereIsBana” ஒன்றை உருவாக்கி அதனை ட்ரெண்ட் செய்தனர்.

பின் அலாபெத் செய்த ட்வீட்டில் "தாக்குதலில் சிக்கியுள்ளோம், எங்கும் செல்ல இயலவில்லை, ஒவ்வொரு நிமிடமும் மரண பீதியை உணர்கிறோம். எங்களுக்காக பிரார்த்தனை செய்யுங்கள். குட்பை – ஃபாத்திமா." என குறிப்பிட்டிருந்தார்.

அதன் பின்னர் அப்பகுதியை சுற்றி வளைத்திருந்த அரசு படையினர் அப்பகுதியில் உள்ள பொது மக்களை வெளியேற்றினர். அதில் அலாபெத் குடும்பத்தினரும் இடம் பெற்றிருந்தனர்.



  Tags :  
சிரியாவில்  ட்விட்டர் உதவியோடு ஏழு வயது சிறுமி   பத்திரமாக மீட்பு,SevenSeven-year old gets rescued from Aleppo after tweeting about the war in Syria சிரியாவில்  ட்விட்டர் உதவியோடு ஏழு வயது சிறுமி   பத்திரமாக மீட்பு,SevenSeven-year old gets rescued from Aleppo after tweeting about the war in Syria சிரியாவில்  ட்விட்டர் உதவியோடு ஏழு வயது சிறுமி   பத்திரமாக மீட்பு,SevenSeven-year old gets rescued from Aleppo after tweeting about the war in Syria
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 நகைக்கடையில் பிரேஸ்லெட்டை உடைத்த பெண்ரூ.28 லட்சம் விலை அறிந்ததும் அதிர்ச்சியில் மயக்கம்
சீனாவின் யுன்னன் மாகாணத்தில் உள்ள நகைக்கடையில் ஒரு பெண் $44,110 (கிட்டத்தட்ட ரூ.28 லட்சம்) மதிப்புள்ள ஜேட் பிரேஸ்லெட்டை உடைத்துவிட்டார். தீய சக்திகள் இருந்து பாதுகாக்கவும், உடல் ஆரோக்கியத்துடன் இருக்கவும் ஜேட் பிரேஸ்லெட்டை சீனர்கள் அணிவது வழக்கம். அதனடிப்படையில் நகைக்கடையில் பெண்

மேலும்...

 தீவிரவாதிகளுக்கு பாலியல் அடிமைகளாகும் பெண்களின் நிலை குறித்து பெண் எம்.பி கண்ணீர்
சிரியாவில் ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு பாலியல் அடிமைகளாக துன்புறத்தப்படும் யாசிதி பெண்களின் நிலை குறித்து இராக்கின் பெண் எம்.பி ஒருவர் கண்ணீருடன் குறிப்பிட்டுள்ளார்.எகிப்தில் உள்ள தனியார் செய்தி ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த ஈராக்கின் பெண் எம்.பி வியான் தேகில் ஐ.எஸ் தீவிரவாதிகள் யாஷ்டி

மேலும்...

 அதிபர் டிரம்ப் மனநலம் பாதிக்கப்பட்டவர்:வடகொரியா கடும் விமர்சனம்
அமெரிக்க மாணவர் ஓட்டோ வார்ம்பியர் வடகொரிய சிறையில் சித்ரவதைச் செய்யப்பட்டு மரணமடைந்ததையடுத்து பதற்றமான சூழல் நிலவுவதையடுத்து பதற்றத்தை மேலும் அதிகரிக்கும் விதமாக அதிபர் ட்ரம்ப்பை மனநிலை பிறழ்ந்தவர் என்று வடகொரியா வர்ணித்துள்ளது. வடகொரியாவின் அரசு நாளிதழான சின்மன் செய்தித் தாளில் எழுதப்பட்ட

மேலும்...

 இந்தியாவை சேர்ந்தவரை சர்வதேச தீவிரவாதியாக அறிவத்த அமெரிக்கா
ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கம் இந்தியாவில் ஆதிக்கம் செலுத்த மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளை அமெரிக்கா அம்பலப்படுத்தியுள்ளது. அமெரிக்க வெளியுறவுத் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இது குறித்து தகவல் வெளியாகியுள்ளன. ஐஎஸ் இயக்கத்திற்கு இந்தியாவில் ஆட்களை திரட்டும் பணிக்காக அந்த இயக்கத்தின் முக்கிய தளபதி செயல்பட்டு

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


























மகளிர்





















Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in