சென்னையில் பயங்கரம் மனைவியைக் கொன்று கணவனும் தற்கொலை

சென்னையில் பயங்கரம் மனைவியைக் கொன்று கணவனும் தற்கொலை
பூந்தமல்லி அருகே உள்ள ஒரு கிராமத்தில் சாதாரண குடும்பத் தகராறில் ஆத்திரமுற்ற கணவன் மனைவியைக் கொன்று தானும் தற்கொலை செய்துகொண்டார்.

பூந்தமல்லி சின்னமாங்காட்டைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (30). இவரது மனைவி துர்கா(26). இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். வெங்கடேசன் கூலி வேலை செய்து வந்துள்ளார். குடும்பப் பிரச்சினை காரணமாக கணவன் மனைவி இருவருக்கும் அடிக்கடி தகராறு வரும்.

அதில் வாக்குவாதம் ஏற்பட்டு தாக்குதலும் நடக்கும். அக்கம் பக்கம் உள்ள உறவினர்கள் தலையிட்டு சமாதானம் செய்து வைப்பார்கள். இந்நிலையில் நேற்று கணவன் - மனைவி இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இன்று அதிகாலை மீண்டும் வெங்கடேசனுக்கும் அவரது மனைவி துர்காவுக்கும் வாய்ச்சண்டை ஏற்பட்டுள்ளது.

இதில் வாக்குவாதம் முற்றியதில் கோபமடைந்த வெங்கடேசன் தனது இரு பெண் குழந்தைகள் எதிரிலேயே தனது மனைவி துர்காவின் கழுத்தை நெரித்துக் கொன்றார். இதில் சம்பவ இடத்திலேயே துர்கா உயிரிழந்தார்.

இதையடுத்து தனது இரு பெண் குழந்தைகளை அருகில் உள்ள துர்காவின் தாயார் வீட்டில் விட்டுவிட்டு வந்த வெங்கடேசன், தனது வீட்டின் மின் விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

ஏதேச்சையாக துர்கா வீட்டுக்கு வந்த உறவினர்கள் தூக்கில் வெங்கடேசனும், படுக்கையில் துர்காவும் பிணமாகக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து உடனடியாக பூந்தமல்லி போலீஸாருக்குப் புகார் அளித்தனர். அங்கு வந்த பூந்தமல்லி போலீஸார் இருவரது பிணத்தையும் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

குடும்பப் பிரச்சினையில் மனைவியைக் கொன்ற கணவன் தற்கொலை செய்துகொண்டதால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். கணவன் மனைவி உயிரிழந்ததால் இரண்டு பெண் குழந்தைகளும் அனாதைகளாகி விட்டனர்.
https://goo.gl/GyRGka


18 Dec 2018

வீடு கட்ட லஞ்சம் கொடுக்க வேண்டுமா?- அதிகாரியிடம் போனில் பேசிய கமல்

14 Dec 2018

நான் உழைத்து முதல்வரானேன்: நீங்கள் அப்பாவின் தயவால் உயர்ந்துள்ளீர்கள்: ஸ்டாலின்மீது எடப்பாடி பாய்ச்சல்

14 Dec 2018

புயலால் 8 மீட்டர் வரை அலை எழும்பும்: இந்திய வானிலை மையம் எச்சரிக்கை

14 Dec 2018

கருணாநிதி சிலை திறப்பு விழாவில் ரஜினி, கமல் பங்கேற்க வாய்ப்பு என தகவல்

13 Dec 2018

பள்ளியில் 5 மாணவிகள் வி‌ஷம் குடித்து தற்கொலை முயற்சி

13 Dec 2018

கழிவறை கேட்டு தந்தை மீது புகார் தந்த 7 வயது சிறுமி.. ஆம்பூர் தூய்மை இந்தியா தூதுவரானார்

13 Dec 2018

காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக மாறும் : வட தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு

13 Dec 2018

தினகரனை தவிர பிரிந்து சென்றவர்கள் யார் வேண்டுமானாலும் திரும்பி வரலாம் - முதல்வர் பகிரங்க அழைப்பு

11 Dec 2018

குடும்ப வறுமையில் மகனுக்கு வி‌ஷம் கொடுத்து கொன்று தந்தை தற்கொலை

11 Dec 2018

கூடைப்பந்து விளையாடும்போது மாரடைப்பு: கல்லூரி மாணவி பரிதாப மரணம்