ஜெயலலிதாவை உணர்வற்ற நிலையில் தான் பார்த்தேன்': ஜனாதிபதிக்கு எழுதிய கடிதத்தில் வித்யாசாகர் ராவ் தகவல்

ஜெயலலிதாவை உணர்வற்ற நிலையில் தான் பார்த்தேன்': ஜனாதிபதிக்கு எழுதிய கடிதத்தில் வித்யாசாகர் ராவ் தகவல்
ஜெயலலிதாவை மருத்துவமனையில் பார்த்தபோது அவர் எந்த நிலையில் இருந்தார் என தமிழக முன்னாள் ஆளுநர் வித்யாசாகர் ராவ் ஆறுமுகசாமி ஆணையத்தில் விளக்கமளித்துள்ளார்.

தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், அதிமுகவின் முன்னாள் பொதுச்செயலாளருமான ஜெயலலிதா உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர்  5-ம்தேதி உயிரிழந்தார்.


ஆனால் 2016 செப்டம்பர் 22-ம் தேதி அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதில் இருந்து அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து முறையான விபரங்கள் எதுவும் வெளியாகவில்லை.

அவர் உயிரிழந்ததை தொடர்ந்து அவரது மரணத்தில் இருக்கும் மர்மம் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையமும் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற போது, அப்போது தமிழக பொறுப்பு கவர்னராக இருந்த வித்யாசாகர் ராவ் 01.10.16 அன்று மருத்துவமனைக்கு நேரில் சென்று பார்த்தார். இது தொடர்பாக , 06.10.2016 ல் ஜனாதிபதிக்கு ஆளுநர் கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதம் தற்போது வெளியாகியுள்ளது. அதில், ஜெயலலிதாவுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவர்கள் கூறினர். தலைமை செயலாளரிடம் சட்டம் - ஒழுங்கு குறித்து கேட்டறிந்தேன். காவிரி விவகாரம் குறித்து அவர் ஆலோசனை நடத்தினார்.

அவரை நான் அப்பல்லோவில் பார்க்கும்போது அவர் மயக்க நிலையில் இருந்தார் என கூறியிருக்கிறார். அவ்வப்போது, ஜெயலலிதாவின் மருத்துவ அறிக்கையை வெளியிட வேண்டும் எனவும் கூறினேன்.

முன்னதாக ஜெயலலிதாவை நான் மருத்துவமனையில் பார்த்தபோது அவர் சுய நினைவோடு தன்னை பார்த்து கட்டைவிரலை உயர்த்தி தம்ப்ஸ் அப் சிம்பல் காண்பித்ததாக வித்யாசாகர் ராவ் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
https://goo.gl/hymbGD


11 Dec 2018

குடும்ப வறுமையில் மகனுக்கு வி‌ஷம் கொடுத்து கொன்று தந்தை தற்கொலை

11 Dec 2018

கூடைப்பந்து விளையாடும்போது மாரடைப்பு: கல்லூரி மாணவி பரிதாப மரணம்

10 Dec 2018

கிராமங்களுக்கு மின்சாரம் கிடைத்த பின்னர் தான் சென்னை செல்வேன்- அமைச்சர் விஜயபாஸ்கர்

10 Dec 2018

பெண்கள் பாதுகாப்புக்காக \"181\" உதவி எண் சேவையை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் பழனிசாமி

01 Nov 2018

ஜெயலலிதாவை உணர்வற்ற நிலையில் தான் பார்த்தேன்': ஜனாதிபதிக்கு எழுதிய கடிதத்தில் வித்யாசாகர் ராவ் தகவல்

01 Nov 2018

உயிரைப் பறித்த செல்ஃபி மோகம்: 800 அடி மலை உச்சியில் இருந்து விழுந்த ஜோடி மரணம்

31 Oct 2018

தாயை கொன்று குழந்தையையும் கொல்ல முயன்ற இளைஞர் கைது

31 Oct 2018

நாளை முதல் தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கும்- சென்னை வானிலை மையம்

25 Oct 2018

18 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்தது செல்லும் - உயர்நீதிமன்றம் தீர்ப்பு

22 Oct 2018

சென்னை மாதவரத்தில் டெங்கு காய்ச்சலுக்கு இரட்டை குழந்தைகள் பலி