tamilkurinji logo


 

தகவல் தொழில்நுட்பத்தின் அடுத்த புரட்சி: யாஹூ வீடியோ மெசஞ்சர்,Yahoo Quietly Launches A New “Video Texting” Mobile Messaging App On iTunes

Yahoo,Quietly,Launches,A,New,“Video,Texting”,Mobile,Messaging,App,On,iTunes
தகவல் தொழில்நுட்பத்தின் அடுத்த புரட்சி: யாஹூ வீடியோ மெசஞ்சர்

First Published : Saturday , 18th July 2015 11:04:55 PM
Last Updated : Saturday , 18th July 2015 11:04:55 PM


தகவல் தொழில்நுட்பத்தின் அடுத்த புரட்சி: யாஹூ வீடியோ மெசஞ்சர்,Yahoo Quietly Launches A New “Video Texting” Mobile Messaging App On iTunes

தொலைபேசி, பேஜர், கைபேசி, குறுந்தகவல், ஃபேஸ்புக், ஸ்கைப், வாட்ஸ்அப், வீச்சாட், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்டைம் என படிப்படியாக கண்டுபிடிக்கப்பட்ட பல்வேறு தகவல் தொழில்நுட்பச் சாதனங்கள், நமது நட்பு வட்டாரங்களையும், தொழில்முறையிலான தொடர்புகளையும் விரிவடையச் செய்துகொண்டே போகும் அதேவேளையில் மக்களை மிக நெருக்கமாகவும் கொண்டுவர உதவியுள்ளன.

இந்த தொழில்நுட்பப் புரட்சியில் ஒருபடி மேலே சென்று முன்னர் வெறும் குறுந்தகவலை மட்டும் பரிமாறும் நோக்கத்தில் யாஹூ மெஸெஞ்சர் என்ற செயலியை வெளியிட்ட யாஹூ நிறுவனம், தற்போது ’யாஹூ லைவ் டெக்ஸ்ட்’ என்ற வீடியோ மெஸெஞ்சரை அறிமுகப்படுத்தியுள்ளது.

இதன்மூலம், வாடிக்கையான டெக்ஸ்ட் மெஸேஜை அனுப்புவதுடன் நமது வீடியோவையும் அதே நேரத்தில் அனுப்பலாம். நமது மெஸேஜுக்கு எதிர்முனையில் இருப்பவரின் ‘ரியாக்‌ஷன்’ என்ன? என்பதையும் உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம். ஆனால், இந்த வீடியோவில் நமது குரல் பதிவு இருக்காது.

தற்போது, ஹாங்காங் நகரில் உள்ள ஐடியூன் ஆப்ஸ் கடைகளில் மட்டும் விறபனையாகும் இந்த ’யாஹூ லைவ் டெக்ஸ்ட்’ வெகு விரைவில் இந்தியாவிலும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன்மூலம், வைஃபை வசதியுடன் கூடிய சராசரி கம்ப்யூட்டர் மற்றும் நவீன கைபேசிகளில் இந்த ’யாஹூ லைவ் டெக்ஸ்ட்’ செயலியை இலவசமாக பதிவிறக்கம் செய்து, நமக்கு விருப்பமான நபருடன் வீடியோ மூலம் எந்நேரமும் தொடர்பில் இணைந்திருக்கலாம்.

நமது கைபேசியில் இந்த வசதியை ஏற்படுத்தி கொண்ட பிறகு நம்முடன் தொடர்பில் உள்ளவர்களில் யார்யாரெல்லாம் ’யாஹூ லைவ் டெக்ஸ்ட்’ செயலியை பயன்படுத்துகிறார்களோ.., (வாட்ஸ்அப்பில் உள்ளது போல்) அவர்களுடன் நீங்கள் (ஓசையில்லாமல்) வீடியோ டெக்ஸ்ட் செய்து மகிழலாம்.

தற்போது, ஒருவரோடு ஒருவர் மட்டும் தொடர்பு கொள்ளும் வகையில் இந்த செயலி செயல்பட்டு வருகிறது. இருவருக்கு மேற்பட்ட ‘குரூப் சாட்டிங்’ வசதி இதில் இல்லை என்பது, குறிப்பிடத்தக்கது.

தகவல் தொழில்நுட்பத்தின் அடுத்த புரட்சி: யாஹூ வீடியோ மெசஞ்சர்,Yahoo Quietly Launches A New “Video Texting” Mobile Messaging App On iTunes தகவல் தொழில்நுட்பத்தின் அடுத்த புரட்சி: யாஹூ வீடியோ மெசஞ்சர்,Yahoo Quietly Launches A New “Video Texting” Mobile Messaging App On iTunes தகவல் தொழில்நுட்பத்தின் அடுத்த புரட்சி: யாஹூ வீடியோ மெசஞ்சர்,Yahoo Quietly Launches A New “Video Texting” Mobile Messaging App On iTunes
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 வாட்ஸ் அப் மூலம் வீடியோ காலிங் செய்வதில் இந்தியா முதலிடம்:
வாட்ஸ் அப் மூலம் வீடியோ கால் செய்வதில், இந்தியா முதலிடத்தில் இருப்பதாக வாட்ஸ் அப் நிறுவனம் தெரிவித்துள்ளது. வாட்ஸ் அப் மூலம் வீடியோ கால் செய்யும் வசதியை கடந்த ஆண்டு நவம்பரில், வாட்ஸ் அப் நிறுவனம் அறிமுகப்படுத்தியது. இதன்மூலம், உலகம் முழுவதும்

மேலும்...

 ஐந்து ஆண்டுகளில் சாலையில் ஓடும் கூகுளின் தானியங்கி கார்
இன்னும் ஐந்தே ஆண்டில் சாலைகளில் ஓட்டுனர் இல்லாத கார்களை அறிமுகப்படுத்துவோம் என்று கூகுள் நிறுவனம் கடந்த வாரம் அறிவித்து பலரையும் ஆச்சரியப்படுத்தி இருக்கிறது. கூகுள் கடந்த சில ஆண்டுகளாக நடத்திய சோதனை ஓட்டங்களில் 11 சிறு விபத்துக்களை (மனிதர்கள் யாருக்கும் காயம்

மேலும்...

 வாட்ஸேஎஅப்’பை 16 பில்லியன் டாலர்களுக்கு வாங்கும் ‘ஃபேஸ்புக்’ நிறுவனம்
காலத்தின் நவீனமயத்துக்கு ஏற்ப இந்த பரந்த உலகின் தகவல் தொடர்பு சாதனங்கள் மிகவும் குறுகிப்போய் கைபேசியின் துணையால் உள்ளங்கையில் உலகம் என்ற அளவுக்கு சுருங்கி விட்டது. ’பேஜர்’, ’செல்போன்’, எதிர் முனையில் இருப்பவரின்  முகத்தை பார்த்தபடியே பேசும் திறன் கொண்ட ‘3-ஜி

மேலும்...

 இன்ஃபோசிஸ் தலைவரானார் நாராயணமூர்த்தி
இன்போசிஸ் நிறுவனத்தின், செயல் தலைவர் மற்றும் கூடுதல் இயக்குனராக, என்.ஆர். நாராயணமூர்த்தி மீண்டும் நியமிக்கப்பட்டு உள்ளார். பெங்களூரில், @நற்று நடைபெற்ற இன்போசிஸ் நிறுவனத்தின், நிர்வாக குழு கூட்டத்தில், இதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.பங்குதாரர்கள் :இதுகுறித்து, இன்போசிஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை விவரம்:தகவல்

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


மகளிர்

Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in

Warning: mysql_close(): 3 is not a valid MySQL-Link resource in /home/content/14/7948114/html/tamilkurinji/footer.php on line 164