தாயை கொன்று குழந்தையையும் கொல்ல முயன்ற இளைஞர் கைது

தாயை கொன்று குழந்தையையும் கொல்ல முயன்ற இளைஞர் கைது
 நீலகிரி மாவட்டம் கோத்தகிரி ரோஸ் காட்டேஜ் பகுதியில் உள்ள வாடகை வீடு ஒன்றில் ராஜேஷ்குமார் - லோகேஸ்வரி தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு மூன்றரை வயதில் காத்திகேயன் என்ற மகன் உள்ளான்.

ராஜேஷ்குமார், தற்போது பெங்களூருவில் பணிபுரிந்து வருகி றார். கோத்தகிரியில் உள்ள வீட்டில் லோகேஸ்வரி தனது மகன் கார்த்திகேயனுடன் தனியாக வசித்து வந்தார். கோத்தகிரியில் இருந்து 12 கிமீ தொலைவில் அம்பேத்கர் நகரில் லோகேஸ்வரி யின் பெற்றோர் வசிக்கின்றனர்.

இந்நிலையில், லோகேஸ்வ ரியை பார்க்க நேற்று வந்த அவ ரது பெற்றோர் வீட்டின் கதவு பின்புறமாக பூட்டப்பட்டிருந்ததால் முன்புறம் காத்திருந்துள்ளனர். வெகுநேரமானதால் செல்போனில் தொடர்பு கொண்டனர். அப்போது செல்போன் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது.

இதனால், சந்தேகம் அடைந்த அவர்கள் பின்பக்கம் ஜன்னல் வழியாகப் பார்த்துள்ளனர். அப் போது லோகேஸ்வரி கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்த தையும், பேரன் கார்த்திகேயன், கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் உயிருக்குப் போராடிக் கொண்டி ருந்ததையும் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

உடனடியாக போலீ ஸாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீஸார் விரைந்து வந்து சிறுவனை மீட்டு கோவை மருத்துவ மனைக்கும், லோகேஸ்வரியின் உடலை கோத்தகிரி அரசு மருத்துவ மனைக்கும் அனுப்பி வைத்தனர்.

லோகேஸ்வரியின் கழுத்தில் இருந்த 5 சவரன் தாலிச் சங்கிலி மற்றும் செல்போனை காண வில்லை. வீட்டுக்குள் கொலை நடந்திருப்பதால் கொலையாளி அறிமுகமான நபராக இருக்கலாம் என்று காவல்துறையினர் சந்தேகிக் கித்தனர். லோகேஸ்வரியின் செல் போன் தொடர்பு எண்களைக் கொண்டு விசாரித்தனர்.

இந்நிலையில், ஈரோட்டை சேர்ந்த இளைஞரை போலீஸார் கைது செய்தனர். இதுகுறித்து, போலீஸார் கூறியதாவது: ஈரோடு மாவட்டம் நஞ்சை ஊத்துக் குளியைச் சேர்ந்த திருமூர்த்தி என்பவரது மகன் கவுரிசங்கர்(27) என்பவரை கைது செய்துள்ளோம்.

இவருக்கும் லோகேஸ்வரிக் கும் வணிகரீதியான தொடர்பு இருந்துள்ளது. இதனால் ஏற்பட்ட கொடுக்கல் வாங்கல் தகராறில் லோகேஸ்வரியின் கழுத்தை அறுத்து கவுரி சங்கர் கொலை செய்துள்ளார். அப்போது, லோகேஸ்வரியின் மகன் கார்த்தி கேயன் கவுரிசங்கரின் கையை கடித்தபோது குழந்தையின் கழுத் தையும் அறுத்துள்ளார்.

பின்னர், நகை மற்றும் செல் போனை திருடிக்கொண்டு தப்பி விட்டார். லோகேஸ்வரியின் செல் போன் தொடர்புகளைக் கொண்டு கவுரிசங்கரை ஈரோட்டில் கைது செய்தோம் என்றனர்.
https://goo.gl/njebqc


11 Dec 2018

குடும்ப வறுமையில் மகனுக்கு வி‌ஷம் கொடுத்து கொன்று தந்தை தற்கொலை

11 Dec 2018

கூடைப்பந்து விளையாடும்போது மாரடைப்பு: கல்லூரி மாணவி பரிதாப மரணம்

10 Dec 2018

கிராமங்களுக்கு மின்சாரம் கிடைத்த பின்னர் தான் சென்னை செல்வேன்- அமைச்சர் விஜயபாஸ்கர்

10 Dec 2018

பெண்கள் பாதுகாப்புக்காக \"181\" உதவி எண் சேவையை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் பழனிசாமி

01 Nov 2018

ஜெயலலிதாவை உணர்வற்ற நிலையில் தான் பார்த்தேன்': ஜனாதிபதிக்கு எழுதிய கடிதத்தில் வித்யாசாகர் ராவ் தகவல்

01 Nov 2018

உயிரைப் பறித்த செல்ஃபி மோகம்: 800 அடி மலை உச்சியில் இருந்து விழுந்த ஜோடி மரணம்

31 Oct 2018

தாயை கொன்று குழந்தையையும் கொல்ல முயன்ற இளைஞர் கைது

31 Oct 2018

நாளை முதல் தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கும்- சென்னை வானிலை மையம்

25 Oct 2018

18 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்தது செல்லும் - உயர்நீதிமன்றம் தீர்ப்பு

22 Oct 2018

சென்னை மாதவரத்தில் டெங்கு காய்ச்சலுக்கு இரட்டை குழந்தைகள் பலி