tamilkurinji logo
 

நாடு திரும்பினார் யுவராஜ்,Yuvraj returns home to emotional welcome

Yuvraj,returns,home,to,emotional,welcome



செய்திகள் >>> விளையாட்டு

நாடு திரும்பினார் யுவராஜ்

First Published : Monday , 9th April 2012 09:37:55 PM
Last Updated : Monday , 9th April 2012 09:37:55 PM


நாடு திரும்பினார் யுவராஜ்,Yuvraj returns home to emotional welcome

புற்றுநோய் கட்டிக்காக அமெரிக்காவில் சிகிச்சை பெற்ற யுவராஜ் சிங், லண்டனில் இருந்து நேற்று நாடு திரும்பினார். டெல்லியில் ரசிகர்கள், குடும்பத்தினர் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் யுவராஜ் சிங். கடந்த ஆண்டு நடந்த உலக கோப்பை தொடரில் இந்தியா சாம்பியன் கோப்பை வெல்ல முக்கிய காரணமாக இருந்தவர். இவருக்கு நுரையீரலில் புற்றுநோய் கட்டி இருப்பதாக கண்டறியப்பட்டது. இதற்காக யுவராஜ் அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் கடந்த ஜனவரி மாதம் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். யுவராஜுக்கு கீமோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சை முடிந்து கடந்த மாதம் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட அவர், லண்டனில் ஓய்வு எடுத்து வந்தார்.

இந்நிலையில், 3 மாத சிகிச்சை மற்றும் ஓய்வுக்கு பிறகு யுவராஜ் நேற்று நாடு திரும்பினார். டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் அவரது வருகைக்காக ஏராளமான ரசிகர்களும், பத்திரிகையாளர்களும் மற்றும் அவரது குடும்பத்தினரும் காத்திருந்திருந்தனர். கறுப்பு நிற சட்டையும், சிவப்பு நிற தொப்பியும் அணிந்து காலை 10 மணிக்கு வந்திறங்கிய யுவராஜை ரசிகர்கள் உற்சாகமாக வரவேற்று வாழ்த்து தெரிவித்தனர். யுவராஜின் தாய் ஷப்னம் சிங் வாழ்த்து தெரிவித்து, சொந்த ஊரான குர்கானுக்கு அழைத்துச் சென்றார்.

விமான நிலையத்தில் அவரது தாய் ஷப்னம் நிருபர்களிடம் கூறுகையில், ‘யுவராஜ் நாடு திரும்பியதால் அளவுகடந்த மகிழ்ச்சி அடைகிறேன். அவர் 10,15 நாட்கள் வரை ஓய்வில் இருக்க வேண்டுமென டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர். ஓய்வுக்கு பிறகுதான் அடுத்தகட்ட நடவடிக்கை பற்றி யோசிப்போம். அதுவரை எனது மகனுக்கு ரொம்பவும் பிடித்த பராதாஸ் (நம்மூர் பரோட்டா மாதிரி) சமைத்து தர இருக்கிறேன். யுவராஜும் இப்போது நல்ல தைரியத்துடன் இருக்கிறார். இதுவும் அவருக்கு ஒரு இன்னிங்ஸ் மாதிரிதான். இந்த கஷ்டமான காலகட்டத்தை ரசிகர்களின் பிரார்த்தனையுடன் தனியாக சமாளித்துள்ளார்.

எங்களை பொறுத்த வரையில் யுவராஜ் குணமடைந்து வீடு திரும்பியிருப்பது, மீண்டும் ஒருமுறை உலக கோப்பையை வென்ற மாதிரி இருக்கிறது. யுவராஜுக்காக கடவுளை வேண்டிக் கொண்ட அனைத்து ரசிகர்களுக்கும் நன்றி’ என்றார். யுவராஜின் தந்தை யோக் ராஜ் கூறுகையில், ‘யுவராஜ் நலம் பெற வேண்டிக் கொண்ட ரசிகர்களுக்கும் உறவினர்களுக்கும், அருள்புரிந்த கடவுளுக்கும் நன்றி. எனது மகனைப் பார்த்து நான் பெருமைப்படுகிறேன். இவ்வளவு கஷ்டத்திலும் அவன் மனதைரியத்துடன் இருந்ததற்கு காரணம் கடவுள்தான். இனியும் எல்லா கஷ்டங்களையும் அவன் சமாளித்து மீண்டும் நாட்டுக்காக விளையாடுவான்’ என்றார். இதே போல, கிரிக்கெட் வீரர்கள், முக்கிய பிரபலங்கள், விஐபிக்கள், அரசியல் தலைவர்கள் பலரும் யுவராஜுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

சச்சின் டிவிட்டர் இணையத்தில் அனுப்பியுள்ள வாழ்த்து செய்தியில், ‘புற்றுநோயால் ஏற்பட்ட அனைத்து சோதனைகளையும், தடைகளையும் முறியடித்து வெற்றியுடன் நாடு திரும்பியிருக்கும் எனது சகோதரனே உன்னை மனமார வாழ்த்தி வரவேற்கிறேன். விரைவில் முழு குணமடைந்து அணிக்கு திரும்ப வேண்டுமென உனது ரசிகனாகவும் இருந்து பிரார்த்திக்கிறேன்’ என்று கூறியுள்ளார்.

நாடு திரும்பினார் யுவராஜ்,Yuvraj returns home to emotional welcome நாடு திரும்பினார் யுவராஜ்,Yuvraj returns home to emotional welcome நாடு திரும்பினார் யுவராஜ்,Yuvraj returns home to emotional welcome
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 IPL கிரிக்கெட்டில் குஜராத்தை வீழ்த்தியது, ஐதராபாத் அணி
ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் ஐதராபாத் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத்தை எளிதில் தோற்கடித்து அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.10–வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இறுதிகட்டத்தை எட்டி விட்டது. இதில் பங்கேற்றுள்ள

மேலும்...

 விராட் கோலி, அனுஷ்காவின் தனிப்பட்ட வாழ்க்கைக்கு மதிப்பளியுங்கள் - யுவராஜ் சிங்
விராட் கோலி - அனுஷ்காவின் தனிப்பட்ட வாழ்க்கைக்கு மதிப்பு அளியுங்கள் என்று இந்திய அணியின் ஆல் ரவுண்டர் யுவராஜ் சிங் கேட்டுக் கொண்டார். நடந்து முடிந்த உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில், அரைஇறுதியில் ஆஸ்திரேலியாவிடம் அடிவாங்கி இந்தியா வெளியேறியது. ஆஸ்திரேலியா நிர்ணயம்

மேலும்...

 ஐ.பி.எல். ஏலம் யுவராஜ் சிங்கை 16 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்தது டெல்லி டேர்டெவில்ஸ்
எட்டாவது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் ஏப்ரல் 8-ந்தேதி முதல் மே 24-ந்தேதி வரை நடைபெறுகிறது. இதையொட்டி அணிகள் மொத்தம் 123 வீரர்களை தக்க வைத்துக் கொண்டுள்ளது. இதில் 44 வெளிநாட்டு வீரர்களும் அடங்குவர். கழற்றி

மேலும்...

  காமன்வெல்த் பளுதூக்கும் போட்டியில் தங்கம் வென்று வேலூர் வீரர் சாதனை
வேலூர் சத்துவாச்சாரி புதுதெருவை சேர்ந்தவர் சதீஷ்குமார் சிவலிங்கம். காமன்வெல்த் போட்டியில் சதீஷ்குமார் தங்கம் வென்றதை கேள்விபட்ட அவரது குடும்பத்தினர் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.சதீஷ்குமார் தந்தை சிவலிங்கம்(48) முன்னாள் ராணுவவீரர். இவர் தற்போது விஐடி பல்கலைக்கழகத்தில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். தாய் தெய்வானை(42)

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


























மகளிர்





























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in