நெஞ்சில் இருக்கும் நாள்பட்ட சளியை நீக்க பாட்டி மருத்துவம்.

நெஞ்சில் இருக்கும் நாள்பட்ட சளியை நீக்க பாட்டி மருத்துவம்.
நாள்பட்ட சளியை சரிசெய்ய நம்முடைய பாட்டி வைத்தியங்கள் மிகச் சிறந்த தீர்வைக் கொடுக்கும்.

தூதுவளை, ஆடாதொடை, கண்டங்கத்திரி ஆகிய இலைகளை ஒரு கைப்பிடியளவு எடுத்துக் கொண்டு அதனுடன் சுக்கு, மிளகு, திப்பிலி ஆகியவற்றையும் கலந்து கஷாயம் போல செய்து அதில் இனிப்புக்காக சிறிது தேன் கலந்து காலையும் மாலையும் சாப்பிட்டு வந்தால் அதன்மூலம் நாள்பட்ட சளியும் கரைய ஆரம்பித்துவிடும்.

கருந்துளசியை கொஞ்சம் நன்கு கசக்கிப் பிழிந்து அதிலிருந்து சாறெடுத்து தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் ஒரு ஸ்பூன் அளவுக்கு குடித்து வந்தால், நாள்பட்ட கடுமையான சளியும் கபம் மற்றும் மார்புச் சளியும் கரைய ஆரம்பிக்கும்.

நன்கு உலர்த்திய கடுக்காய் மற்றும் நெல்லி பொடியையும் சம அளவில் கலந்து அதை தேனில் குழைத்து சாப்பிட வேண்டும். அப்படி காலையும் மாலையும் சாப்பிட்டு வந்தால், நீண்ட நாள் தீராமல் இருந்த சளி மற்றும் கபம் நீங்கும்

குழந்தைகளுக்கு சளி அதிகமானால் மூச்சுத்திணறல் ஏற்படும். அப்படி குழந்தகள் மூச்சுவிட சிரமப்படுகிற பொழுது, குழநதைகளுக்கு மூக்கின் மேல் சிறிதளவு தேங்காய் எண்ணெய் தடவினால், மூச்சு விடுவது எளிதாகும். சளியால் உண்டாகும் சிரமம் குறையும். தேங்காய் எண்ணெயை சுட வைத்து அதனுடன் கற்பூரம் சேர்த்து குழைத்து நெஞ்சில் தடவினால் நீண்ட நாள் கட்டியிருக்கும் நெஞ்சு சளி கரைந்துவிடும்.


https://goo.gl/FbM5LQ


01 Jan 2019

நெஞ்சில் இருக்கும் நாள்பட்ட சளியை நீக்க பாட்டி மருத்துவம்.

27 Dec 2018

கல்லீரலுக்கு பலம் தரும் மணத்தக்காளி கீரை மருத்துவ குறிப்புகள்.

25 Dec 2018

நெஞ்செரிச்சலை உடனே போக்க கூடிய 4 மருத்துவ குறிப்புகள்.

14 Sep 2018

உடல் எடையை குறைக்க அற்புதமான எளிய வழிமுறைகள்

31 Jul 2018

இளமையை தக்கவைக்கவும் வயதான தோற்றத்தை மறைப்பதற்குமான உணவுகள்

23 Jul 2018

அதிகப்படியான கொலஸ்டராலை குறைப்பதற்கான எளிய வழிகள் | simple ways to control cholesterol

18 Jul 2018

இதயத்தை பலப்படுத்தும் பேரீச்சைப் பழத்தின் மருத்துவ குணங்களும் நன்மைகளும்

09 Jul 2018

வயிற்று புண்களை குணமாக்கும் சீத்தாபழத்தின் மருத்துவ பயன்கள் .| seetha palam medicinal uses

05 Jul 2018

காலையில் வெறும் வயிற்றில் வெந்நீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்

28 Jun 2018

பிராய்லர் கோழி சாப்பிடுவதால் பெண்களுக்கு ஏற்படும் கர்ப்பப்பை பிரச்சனைகள்