tamilkurinji logo
 

நொடியில் 4 சாம்சங் காலக்ஸி எஸ் 4 விற்பணை,Tech

Tech


நொடியில் 4 சாம்சங் காலக்ஸி எஸ் 4 விற்பணை

First Published : Tuesday , 4th June 2013 11:31:42 PM
Last Updated : Tuesday , 4th June 2013 11:31:42 PM


நொடியில் 4 சாம்சங் காலக்ஸி எஸ் 4 விற்பணை,Tech

சாம்சங் நிறுவனத்தின் மொபைல் விற்பனை வரலாற்றில், அண்மையில், ஏப்ரல் 27ல் வெளியான அதி நவீன, கூடுதல் விலையுள்ள, சாம்சங் காலக்ஸி எஸ்4 ஸ்மார்ட் போன் புதிய சாதனையை ஏற்படுத்தியுள்ளது.

விற்பனைக்கு அறிமுகமாகி ஒரு மாதத்திற்குள்ளாகவே, விற்பனை யான போன்களின் எண்ணிக்கை ஒரு கோடியைத் தாண்டியுள்ளது. இந்த எண்ணிக்கையை காலக்ஸி எஸ்3, 50 நாட்களிலும், காலக்ஸி எஸ் 2, ஐந்து மாதங்களிலும் எட்டியது. சென்ற ஆண்டில், 40 கோடி மொபைல் போன்களை விற்பனை செய்த சாம்சங், இந்த ஆண்டில், பெரிய அளவில் இந்த எண்ணிக்கையை உயர்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆண்ட்ராய்ட் சாதனங்களின் விற்பனை யில், 95 சதவீத விற்பனையையும், லாபத்தையும் பெற்றது சாம்சங் நிறுவனமே.

கேலக்ஸி எஸ்4 மொபைலுக்குக் கிடைத்த பெரிய வரவேற்பினைப் பார்த்ததும், தற்போது கருப்பு மற்றும் வெள்ளை (சாம்சங் வார்த்தைகளில் சொல்வதாக இருந்தால் Black Forest and White Mist) நிறங்களில் மட்டுமே உள்ள இந்த போன், அடுத்து மேலும் பல வண்ணங்களில் (Blue Arctic, Red Aurora, Purple Mirage, and Brown Autumn) கிடைக்கும் என சாம்சங் அறிவித்துள்ளது.

ஆப்பிள் நிறுவனம் தன் ஐபோன் 5 போனில் புதிய வண்ணங்கள் எதனையும் அறிமுகப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


நொடியில் 4 சாம்சங் காலக்ஸி எஸ் 4 விற்பணை,Tech நொடியில் 4 சாம்சங் காலக்ஸி எஸ் 4 விற்பணை,Tech நொடியில் 4 சாம்சங் காலக்ஸி எஸ் 4 விற்பணை,Tech
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 வாட்ஸ்அப் செயல்பாட்டை ஆய்வு செய்ய சிசிஐ முடிவு
வாட்ஸ்அப் செயல்பாட்டை ஆய்வு செய்ய சிசிஐ முடிவு‘வாட்ஸ்அப்’ மென்பொருள் தொழில்நுட்பத் தின் மூலம் உலகின் எந்த மூலையில் உள்ளவர்களிட மும், தாங்கள் கையிலுள்ள செல்போன் மூலம் குறுஞ்செய்திகள் மற்றும் படங்களை அனுப்பி தொடர்பு வைத்துக் கொள்ள முடியும். இந்த வாட்ஸ்அப்பை சமூக

மேலும்...

 வாட்ஸேஎஅப்’பை 16 பில்லியன் டாலர்களுக்கு வாங்கும் ‘ஃபேஸ்புக்’ நிறுவனம்
காலத்தின் நவீனமயத்துக்கு ஏற்ப இந்த பரந்த உலகின் தகவல் தொடர்பு சாதனங்கள் மிகவும் குறுகிப்போய் கைபேசியின் துணையால் உள்ளங்கையில் உலகம் என்ற அளவுக்கு சுருங்கி விட்டது. ’பேஜர்’, ’செல்போன்’, எதிர் முனையில் இருப்பவரின்  முகத்தை பார்த்தபடியே பேசும் திறன் கொண்ட ‘3-ஜி

மேலும்...

 எச்.டி.சி. போன்கள் விண்டோஸ் 8 சிஸ்டத்துடன் வெளியீடு
ஸ்மார்ட் போன்களைத் தயாரித்து வழங்குவதில் பல ஆண்டுகால அனுபவம் பெற்றுள்ள, எச்.டி.சி. நிறுவனம், விரைவில், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் கூடிய புதிய ஸ்மார்ட் போன்களைத் தயாரித்து விற்பனைக்கு அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே விற்பனை செய்யப்பட்டு வரும் மாடல்கள்,

மேலும்...

 வாட்டர் புரூப் மொபைல் காலக்ஸி எஸ் 4 ஆக்டிவ் அறிமுகம்
சாம்சங் காலக்ஸி வரிசையில் வந்த நவீன ஸ்மார்ட் போன் காலக்ஸி எஸ் 4 வாங்க ஆசையா? சற்றுப் பொறுத்திருக்கவும். சாம்சங் தற்போது காலக்ஸி எஸ் 4 ஆக்டிவ் என்ற பெயரில் மொபைல் போன் ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த மொபைலில் விஷேசம் என்னவென்றால்

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match




























மகளிர்























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in