பாடகி சின்மயின் பாலியல் புகாருக்கு வைரமுத்து விளக்கம்

பாடகி சின்மயின் பாலியல் புகாருக்கு வைரமுத்து விளக்கம்
கவிஞர் வைரமுத்துவுக்கு எதிராக பாடகி சின்மயி, பல பகீர் பாலியல் குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார்.


உலக அளவில் பாதிப்புக்கு உள்ளாகும் பெண்கள் பயன்படுத்தும் ஹாஷ்டேக்கான #MeToo மூலமே தனது தரப்பு கருத்துகளை சின்மயி, ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.


சின்மயி தனது ட்விட்டரில், ‘2005 அல்லது 2006 என்று நினைக்கிறேன். ஸ்விட்சர்லாந்தில் ஒரு கச்சேரிக்காக சென்றிருந்தோம். அங்கு கச்சேரியை அரங்கேற்றிய பிறகு, அந்த நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் என்னையும் என் அம்மாவையும் மட்டும் இருக்குமாறு தெரிவித்தார்.

எதற்கு என்று நாங்கள் கேட்டதற்கு, ‘வைரமுத்து இருக்கும் ஓட்டலுக்கு செல்லுங்கள்’ என்று அவர் தெரிவித்தார். எதற்கு என்று கேட்டதற்கு, ‘அவருக்கு ஒத்துழைப்புக் கொடுங்கள்’ என்றார். நான் முடியாது என்று மறுத்துவிட்டேன். சென்னைக்கு அடுத்த விமானம் மூலம் திரும்பி விட்டோம்’ என்று பதிவிட்டுள்ளார்.

அவர் இந்த சம்பவத்துடன் நிற்காமல், ‘சில ஆண்டுகளுக்கு முன்னர் வைரமுத்து, அவர் எழுதிய புத்தக வெளியீட்டிற்கு என்னை அழைத்து, தமிழ்த் தாய் வாழ்த்து பாடுமாறு கேட்டார்.


நான் முடியாது என்று மறுத்துவிட்டேன். அதற்கு அவர், ‘அந்த அரசியல்வாதியைப் பற்றி நீ தரைக்குறைவாக பேசினாய் என்று சொல்லிவிடுவேன்’ என்று மிரட்டினார்.

இதையடுத்து என்னை, என் வீட்டிலிருந்தவர்கள் தேற்றினர். அதன் பிறகு வைரமுத்துவின் மேலாளருக்கு அழைத்து, ‘நான் அதே அரசியல்வாதியிடம் சென்று அப்படி பேசவில்லை என்பதை எடுத்துக் கூறுவேன். நான் இதுவரை அரசியல் குறித்து பொது இடங்களில் பேசியதில்லை என்பதை கூறுவேன்.

அவர் என்னை நம்புவார்’ என்று தெரிவித்தேன். தற்போது, என்னிடம் அவர் குறித்து மற்றவர்கள் ஏன் குற்றம் சுமத்த மறுக்கிறார்கள் என்று கேட்கிறார்கள். இப்போது ஏன் என்று புரிகிறதா?’ என்று ட்வீட்டினார்.

சின்மயிக்கு நடிகர் சித்தார்த் ஆதரவுக்கரம் நீட்டினார். அவரும் ட்விட்டர் மூலமே சின்மயிக்கு ஆதரவாக பதிவிட்டார். வைரமுத்துவுக்கு எதிராக பத்திரிகையளர் சந்தியா மேனன், தொடர்ந்து ட்வீட் செய்து வருகிறார். அவர், பாதிக்கப்பட்ட பல பெண்களின் கதைகளை ட்விட்டரில் பகிர்ந்து வருகிறார்.

இந்நிலையில், தன் மீதான குற்றசாட்டுகளுக்கு பதிலளிக்கும் விதமாக கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பதிவில், அறியப்பட்டவர்கள் மீது அவதூறு பரப்பும் அநாகரிகம் நாடெங்கும் இப்போது நாகரிகமாகி வருகிறது

.
அண்மைக்காலமாக நான் தொடர்ச்சியாக அவமானப்படுத்தப்பட்டு வருகிறேன்; அவற்றுள் இதுவும் ஒன்று. உண்மைக்குப் புறம்பான எதையும் நான் பொருட்படுத்துவதில்லை; உண்மையைக் காலம் சொல்லும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.


https://goo.gl/KTXyDm


18 Feb 2019

மகனுக்கு காலேஜ் பீஸ் கட்ட முடியவில்லை, நாஞ்சில் சம்பத் வறுமையில் வாடுகிறார் - ஆர்.ஜே. பாலாஜி தகவல்

06 Feb 2019

பிரபல நடிகை தற்கொலை; செல்போன் பேச்சுக்கள் குறித்து போலீஸ் விசாரணை

02 Jan 2019

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவேன்” - பிரகாஷ்ராஜ் அறிவிப்பு

27 Dec 2018

ஜெயலலிதா வாழ்க்கைப்படம் - சசிகலா வேடத்தில் சாய் பல்லவி

27 Dec 2018

பிரபல நாடக கலைஞரும், நடிகருமான சீனு மோகன் காலமானார்

21 Dec 2018

நடிகை ஹன்சிகா மீது நடவடிக்கை கோரி இந்து மக்கள் கட்சி புகார்.

18 Dec 2018

மாரியில் ரோபோ ஷங்கர் வேண்டாம் என்று ஒத்த காலில் நின்றேன்: தனுஷ்

18 Dec 2018

மகள் நினைவாக பாடகி சித்ரா கட்டிய கீமோ’ சிகிச்சை மையம்

13 Dec 2018

நடன இயக்குனரை மணந்தார் நடிகை சாந்தினி

13 Dec 2018

நடிகை சுருதி ஹரிகரன் மீ டூ’வால் பட வாய்ப்புகள் இழந்தேன்