மருத்துவ மாணவியை சுட்டுக்கொன்று போலீஸ்காரர் தற்கொலை

மருத்துவ மாணவியை சுட்டுக்கொன்று போலீஸ்காரர் தற்கொலை
விழுப்புரம் அருகே காதலியை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றுவிட்டு, போலீஸ்காரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. விழுப்புரத்தை அடுத்த அன்னியூர் கருணாநிதி நகரை சேர்ந்தவர் சேகர்.இவரது மகள் சரஸ்வதி (22).

இவர் சென்னை கே.கே நகரில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் எம்பிபிஎஸ் 3ம் ஆண்டு படித்து வந்தார். இவருக்கும், ஈரோடு மாவட்டம் சிந்தகவுண்டம்பாளையம் அருகே உள்ள காட்டுப்பாளையத்தை சேர்ந்த ரங்கன் மகன் கார்த்திவேல் (27) என்பவருக்கும் பேஸ்புக் மூலம் நட்பு ஏற்பட்டது.

இருவரும் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். கார்த்திவேல் தமிழ்நாடு காவல்துறை சிறப்பு பிரிவில் கமான்டோ செக்கியூரிட்டியாக ஸ்பெஷல் எஸ்கார்ட்டாக சென்னையில் பணியாற்றி வந்தார். இவர்களின் காதலுக்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்துள்ளனர்.

இதனால் கார்த்திவேல் அடிக்கடி சரஸ்வதி வீட்டுக்கு சென்று வந்துள்ளார். தற்போது சரஸ்வதிக்கு செமஸ்டர் தேர்வு நடக்க உள்ளதால் கார்த்திவேலிடம் பேசுவதை தவிர்த்து வந்துள்ளார்.

இதனால் காதலியிடம் பேசமுடியாமல் கார்த்திவேல் கவலையில் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சரஸ்வதி வீட்டில் பிறந்தநாள் கொண்டாடினார். இதையறிந்த கார்த்திவேல் அன்னியூர் கிராமத்துக்கு சென்றுள்ளார். அப்போது சரஸ்வதியின் பெற்றோர் ஹாலில் டிவி பார்த்துக்கொண்டிருந்தனர்.

கார்த்திவேலும், சரஸ்வதியும் ஒரு அறையில் கதவை சாத்திவிட்டு பேசிக்கொண்டிருந்தனர். அதிகாலை 2 மணி அளவில் சரஸ்வதி அறையில் திடீரென துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டது.

தொடர்ந்து இன்னொரு முறை துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டதும் சரஸ்வதியின் பெற்றோர் அலறி அடித்தபடி சென்று அறைக்கதவை திறந்து பார்த்தபோது சரஸ்வதியும், கார்த்திவேலும் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தனர்.

பிறந்த நாளன்று தனது மகள் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்ததை கண்டு பெற்றோர் கதறி அழுதனர். தகவல் அறிந்து விழுப்புரம் எஸ்பி ஜெயக்குமார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார். பின்னர் இருவரின் உடல்களையும் மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

விசாரணையில் தனி அறையில் காதலர்கள் பேசிக்கொண்டிருந்தபோது போனில் சக மாணவனோடு சரஸ்வதி சிரித்து பேசிக்கொண்டிருந்தார். இதுகுறித்து கேட்டபோது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த கார்த்திவேல் தான் வைத்திருந்த துப்பாக்கியால் சரஸ்வதியை  சுட்டுக்கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதிகாலையில் நடந்த இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சரஸ்வதி பிளஸ்2 படித்தபோது அவருக்கும போலீஸ்காரர் கார்த்திவேலுக்கு பேஸ்புக் மூலம் நட்பு ஏற்பட்டுள்ளது. சில மாதங்களில் இந்த நட்பு காதலாக மாறியுள்ளது. பின்னர்,  மருத்துவம் படிக்கச் சென்ற பிறகு சரஸ்வதியிடம் மாற்றம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

சரஸ்வதிக்கு நேற்று பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவிக்கச்சென்றபோது இந்த சம்பவம் நடந்துள்ளது. பேஸ்புக் பழக்கம் சாவில் முடிந்துள்ளது.

சரஸ்வதியின் தந்தை சேகர். இவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு வீட்டில் இருந்து வந்தார். இவரது மனைவி மாரியம்மாள் பெங்களூரில் வீட்டு வேலை செய்து குடும்பத்தை நடத்தி வருகிறார்.


சரஸ்வதியின் சகோதரி தமிழ்ரோஜா. ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த இவர்கள் வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர். கார்த்திவேலின் தந்தை ரங்கன், தாய் மாரியம்மாள், சகோதரி கார்த்தியம்மாள். இவர்களும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர்கள்.

கார்த்திவேல் வருமானத்தை கொண்டு குடும்பம் நடத்தி வந்தனர். கார்த்திவேல் இறந்ததால் அந்த குடும்பம் வறுமையின் பிடிக்குள் தள்ளப்பட்டுள்ளது. கார்த்திவேல், சரஸ்வதியின் மரணத்தால் 2 பேரின் குடும்பங்களும் பரிதவிக்கின்றன.

மாணவி சரஸ்வதி அந்த கல்லூரியில் உள்ள ஒரு மாணவருடன் பேசுவதாக கார்த்திவேலுக்கு தகவல் கிடைத்தது. இதனால் சரஸ்வதி மீது கார்த்தி வேலுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

தான் உயிருக்கு உயிராக காதலித்த சரஸ்வதி தன்னை விட்டுவிட்டு சென்று விடுவாரோ? என்று நினைத்தார். வேறு ஒரு மாணவருடன் பேசுவது ஏன் என்று அவர் சரஸ்வதியிடம் கேட்டார்.

இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து கடந்த 6 மாதமாக இருவரும் பேசாமல் இருந்து வந்தனர்.

இந்நிலையில் நேற்று சரஸ்வதி தனது பிறந்தநாளை கொண்டாட அன்னியூருக்கு சென்றார். நள்ளிரவு மாணவி சரஸ்வதி போனுக்கு மாணவன் ஒருவன் ெதாடர்பு கொண்டு பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளான்.


அப்போது வேறு ஒரு மாணவருடன் சரஸ்வதி பேசுவது குறித்து கார்த்திக்வேல் மீண்டும் கேட்டார். அதனால் இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்து சரஸ்வதியை கார்த்திவேல் துப்பாக்கியால் சுட்டுகொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டார் என விசாரணையில் தெரியவந்துள்ளது.
https://goo.gl/f2JYbC


18 Dec 2018

வீடு கட்ட லஞ்சம் கொடுக்க வேண்டுமா?- அதிகாரியிடம் போனில் பேசிய கமல்

14 Dec 2018

நான் உழைத்து முதல்வரானேன்: நீங்கள் அப்பாவின் தயவால் உயர்ந்துள்ளீர்கள்: ஸ்டாலின்மீது எடப்பாடி பாய்ச்சல்

14 Dec 2018

புயலால் 8 மீட்டர் வரை அலை எழும்பும்: இந்திய வானிலை மையம் எச்சரிக்கை

14 Dec 2018

கருணாநிதி சிலை திறப்பு விழாவில் ரஜினி, கமல் பங்கேற்க வாய்ப்பு என தகவல்

13 Dec 2018

பள்ளியில் 5 மாணவிகள் வி‌ஷம் குடித்து தற்கொலை முயற்சி

13 Dec 2018

கழிவறை கேட்டு தந்தை மீது புகார் தந்த 7 வயது சிறுமி.. ஆம்பூர் தூய்மை இந்தியா தூதுவரானார்

13 Dec 2018

காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக மாறும் : வட தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு

13 Dec 2018

தினகரனை தவிர பிரிந்து சென்றவர்கள் யார் வேண்டுமானாலும் திரும்பி வரலாம் - முதல்வர் பகிரங்க அழைப்பு

11 Dec 2018

குடும்ப வறுமையில் மகனுக்கு வி‌ஷம் கொடுத்து கொன்று தந்தை தற்கொலை

11 Dec 2018

கூடைப்பந்து விளையாடும்போது மாரடைப்பு: கல்லூரி மாணவி பரிதாப மரணம்