ரஜினிகாந்துடன் நடித்தது பெருமை” - நடிகை திரிஷா மகிழ்ச்சி

ரஜினிகாந்துடன் நடித்தது பெருமை” - நடிகை திரிஷா மகிழ்ச்சி
பேட்ட’ படத்தில் ரஜினிகாந்துக்கு சிம்ரன், திரிஷா என்று 2 ஜோடிகள். திரிஷா பிளாஷ்பேக் கதையில் வருகிறார்.

அவருக்கு படத்தில் கொஞ்ச நேர காட்சிகள்தான் என்றாலும் ரஜினியுடன் நடிக்க வேண்டும் என்ற தனது நீண்டநாள் ஆசையை நிறைவேற்றுவதற்காக நடிக்க ஒப்புக்கொண்டார். படம் பொங்கலுக்கு திரைக்கு வருகிறது.

“நான் ரஜினிகாந்தின் தீவிர ரசிகை. 165 படங்களில் ரஜினி நடித்துள்ளார். அவருடன் பேட்ட படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததை பெருமையாக நினைக்கிறேன்.

படப்பிடிப்பில் அவருடன் பழகிய அனுபவங்கள் மறக்க முடியாதவை. மூத்த நடிகர், ஜூனியர் நடிகர் என்று வித்தியாசம் பார்க்காமல் எல்லோரிடத்திலும் ஒரே மாதிரியாக பழகுவார்.

அனைவருக்கும் மரியாதை கொடுத்தார். அன்பாகவும் எளிமையாகவும் இருந்தார். ரஜினி குணத்தில் பத்து சதவீதம் இருந்தாலே அவரைப்போல் நல்ல பெயர் எடுக்க முடியும்.

காலை 9 மணிக்கு படப்பிடிப்பு என்றால் காலை 6 மணிக்கே அரங்குக்குள் வந்து விடுவார். நேரம் தாண்டியும் படைப்பிடிப்பை நடத்துகிறார்களே என்று சொன்னால் வேலை என்று வந்துவிட்டால் அதை முடித்து கொடுக்க வேண்டும் என்பார்.

இந்த உலகத்தில் அவரைபோல் ஒருவரை பார்க்க முடியாது. பண்பானவர், பந்தா இல்லாத மனிதர். ரஜினியும், கமலும் இவ்வளவு உயரங்களை அடைந்ததற்கு அவர்களின் உழைப்புதான் காரணம்.” இவ்வாறு திரிஷா கூறினார்.
https://goo.gl/yebzCs






18 Feb 2019

மகனுக்கு காலேஜ் பீஸ் கட்ட முடியவில்லை, நாஞ்சில் சம்பத் வறுமையில் வாடுகிறார் - ஆர்.ஜே. பாலாஜி தகவல்

06 Feb 2019

பிரபல நடிகை தற்கொலை; செல்போன் பேச்சுக்கள் குறித்து போலீஸ் விசாரணை

02 Jan 2019

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவேன்” - பிரகாஷ்ராஜ் அறிவிப்பு

27 Dec 2018

ஜெயலலிதா வாழ்க்கைப்படம் - சசிகலா வேடத்தில் சாய் பல்லவி

27 Dec 2018

பிரபல நாடக கலைஞரும், நடிகருமான சீனு மோகன் காலமானார்

21 Dec 2018

நடிகை ஹன்சிகா மீது நடவடிக்கை கோரி இந்து மக்கள் கட்சி புகார்.

18 Dec 2018

மாரியில் ரோபோ ஷங்கர் வேண்டாம் என்று ஒத்த காலில் நின்றேன்: தனுஷ்

18 Dec 2018

மகள் நினைவாக பாடகி சித்ரா கட்டிய கீமோ’ சிகிச்சை மையம்

13 Dec 2018

நடன இயக்குனரை மணந்தார் நடிகை சாந்தினி

13 Dec 2018

நடிகை சுருதி ஹரிகரன் மீ டூ’வால் பட வாய்ப்புகள் இழந்தேன்