tamilkurinji logo
 

விரைவில் 5ஜி அறிமுகம்,


விரைவில் 5ஜி அறிமுகம்

First Published : Saturday , 1st June 2013 12:51:03 AM
Last Updated : Saturday , 1st June 2013 12:51:03 AM


விரைவில் 5ஜி அறிமுகம்,

இன்றைய 4ஜி தகவல் பரிமாற்ற வேகத்தினைக் காட்டிலும் பல நூறு மடங்கு வேகமாகச் செல்லும் அலை வரிசைக் கற்றையினையும், அதற்கான ரிசீவரையும் தான் வடிவமைத்துள்ளதாக சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்த தொழில் நுட்பத்தை வர்த்தக ரீதியாகப் பொது மக்களுக்கு வழங்குவதற்கான ஆய்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், வரும் 2020 ஆம் ஆண்டில் இதனை வழங்க முடியும் எனவும் சாம்சங் தெரிவித்துள்ளது.

இந்த அலைக்கற்றை கட்டமைப்பு மில்லிமீட்டர் அலைவரிசையைக் கையாளும் திறனைக் கொண்டுள்ளதாகவும், தற்போது 4ஜி அலைவரிசையில், வெகு தூரத்திற்கு தகவல் பரிமாற்றத்தில் ஏற்படும் சிக்கல்களை இது தீர்த்துவிடும் என்று கூறுகிறது.

இரண்டு கிலோ மீட்டர் தூரத்தில், இது 28 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கி, நொடிக்கு 1.056 கிகா பிட்ஸ் தகவல்களைக் கடத்தும் திறன் கொண்டதாகத் தற்போது அமைந்துள்ளதாகவும் அறிவித்துள்ளது. எனவே, தற்போதுள்ள 4ஜி வேகத்தினைக் காட்டிலும் பல நூறு மடங்கு வேகத்தில் தகவல்களை 5ஜி அலைவரிசைக் கட்டமைப்பில் அனுப்ப முடியும்.

இந்தியா உட்பட, உலகின் பல நாடுகளில் இன்னும் 4ஜி அலைவரிசையே வர்த்தக ரீதியாக மக்களிடம் அறிமுகமாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


விரைவில் 5ஜி அறிமுகம், விரைவில் 5ஜி அறிமுகம், விரைவில் 5ஜி அறிமுகம்,
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு செயலியில் பின்டு சாட்ஸ் (Pinned Chats) எனும் புதிய வசதி அறிமுகம்
வாட்ஸ்அப் செயலியில் புதிய அப்டேட் அதிகாரப்பூர்வமாக வழங்கப்பட்டு உள்ளது. பின்டு சாட்ஸ் என அழைக்கப்படும் இந்த வசதி முன்னதாக பீட்டா பதிப்பில் மட்டும் வழங்கப்பட்டு இருந்தது. புதிய வசதியை கொண்டு குறுந்தகவல்களை சாட் ஸ்கிரீனின் மேல் வைத்து கொள்ள முடியும்.பின் (Pin)

மேலும்...

 தகவல் தொழில்நுட்பத்தின் அடுத்த புரட்சி: யாஹூ வீடியோ மெசஞ்சர்
தொலைபேசி, பேஜர், கைபேசி, குறுந்தகவல், ஃபேஸ்புக், ஸ்கைப், வாட்ஸ்அப், வீச்சாட், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்டைம் என படிப்படியாக கண்டுபிடிக்கப்பட்ட பல்வேறு தகவல் தொழில்நுட்பச் சாதனங்கள், நமது நட்பு வட்டாரங்களையும், தொழில்முறையிலான தொடர்புகளையும் விரிவடையச் செய்துகொண்டே போகும் அதேவேளையில் மக்களை மிக நெருக்கமாகவும் கொண்டுவர

மேலும்...

 கூகுள் கிளாஸை பின்னுக்குத் தள்ளும் சோனியின் ஸ்மார்ட் ஐ கிளாஸ் அறிமுகம்!
பல்வேறு தொழில்நுட்பங்களை உள்ளடக்கியதாக கூகுள் கிளாஸ் தொழில்நுட்ப உலகில் புரட்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில், கூகுள் கிளாஸின் விற்பனையை நிறுத்துவதாக கூகுள் நிறுவனம் அறிவித்திருந்தது. இதனை சாதகமாகக் கொண்டு சோனி நிறுவனம் கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் அறிமுகம் செய்திருந்த ஸமார்ட் ஐ

மேலும்...

 ஆப்பிள் நிறுவனத்தின் புதிய அறிமுகம் ஐபேட் ஏர் 2 , ஐபேட் மினி 3
ஆப்பிள் நிறுவனம் இரண்டு புதிய ஐபேடை அறிமுகம் செய்துள்ளது. ஐபேட் ஏர் 2 , ஐபேட் மினி 3 என்ற இரண்டு தயாரிப்பை அறிமுகம் செய்துள்ளது. ஐபேட் ஏர் 2  ரூ. 35,900 என்ற விலையிலும், ஐபேட் மினி 3 ரூ. 28,900

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match




























மகளிர்























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in