tamilkurinji logo
 

3-வது ஒருநாள் கிரிக்கெட்: விராட் கோலி சதம் வீண், இந்தியா மீண்டும் தோல்வி -ஆஸ்திரேலியா வெற்றி ,

செய்திகள் >>> விளையாட்டு

3-வது ஒருநாள் கிரிக்கெட்: விராட் கோலி சதம் வீண், இந்தியா மீண்டும் தோல்வி -ஆஸ்திரேலியா வெற்றி

First Published : Sunday , 17th January 2016 07:55:05 PM
Last Updated : Sunday , 17th January 2016 07:55:05 PM


3-வது ஒருநாள் கிரிக்கெட்: விராட் கோலி சதம் வீண்,  இந்தியா மீண்டும் தோல்வி   -ஆஸ்திரேலியா வெற்றி ,

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது ஒரு நாள் போட்டியிலும் இந்தியா தோல்வியடைந்தது. மேலும், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரையும் இழந்தது

இந்தியா–ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3–வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மெல்போர்னில் நடைபெற்றது.

போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில், கடந்த இரண்டு போட்டிகளில் சதம் அடித்து கலக்கிய ரோகித் சர்மா 6 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றினார். கடந்த சில போட்டிகளாக தொடர்ந்து சொதப்பி வரும் ஷிகர் தவான், இன்று ரன் சேர்ப்பதில் மிகவும் கவனமுடன் செயல்பட்டார்.


அவருக்கு பக்க பலமாக வழக்கம் போல் விராட் கோலி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மந்தமாக ஆடிய தவான் 91 பந்துகளில் 68 ரன்களை சேர்த்து ஆட்டமிழந்து வெளியேறினார். அதேவேளையில், ஒருபுறம் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலி  சதம் அடித்து அசத்தினார். சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விராட் கோலி அடித்த 24 வது சதம் இதுவாகும்.

3 வது விக்கெட்டுக்கு களம் இறங்கிய ரகானே 55 பந்துகளில் 50 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். விராட் கோலி 117  பந்துகளில் 7 பவுண்டரிகள் 2 சிக்சர்கள் உட்பட 117 ரன்கள் சேர்த்த நிலையில், ஹாஸ்டிங்ஸ் பந்தில் ஆட்டமிழந்தார். இறுதியில் இந்திய அணி  50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 295 ரன்கள் சேர்த்தது.

இதையடுத்து 296 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய ஆஸ்திரேலிய அணியில் பிஞ்ச்(21 ரன்கள்) ஸ்மித் (41 ரன்கள்) பெய்லி (21 ரன்கள்), என சீரான இடைவெளியில் ஆட்டமிழந்து வெளியேறினர்.


இருப்பினும் தொடக்க ஆட்டக்காரர் மார்ஷ் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.  ஆஸ்திரேலிய அணி 29.6 வது ஓவரில் 167 ரன்களை சேர்த்து இருந்த போது மார்ஷ் 62 ரன்கள் சேர்த்த நிலையில், இஷாந்த் ஷர்மா பந்தில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

இதனால்,ஆஸ்திரேலிய அணிக்கு லேசான நெருக்கடி ஏற்பட்டது.ஆனால், மேக்ஸ்வெல் நங்கூரம் போல் நிலைத்து நின்று அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச்சென்றார். இந்திய அணி துல்லிய பீல்டிங்கால், ஆஸ்திரேலிய அணிக்கு நெருக்கடி கொடுக்க முயன்றாலும், மேக்ஸ்வேல், கடும் சவாலாக விளங்கினார்.

 சிறப்பாக விளையாடி வந்த மேக்ஸ்வெல் அணியின் வெற்றிக்கு 1 ரன்கள் தேவைப்பட்ட போது உமேஷ் யாதவ் பந்தில் ஆட்டமிழந்து வெளியேறினார். இதனால், சதம் அடிக்கும் வாய்ப்பை நழுவ விட்டார்.  ஆஸ்திரேலிய அணி 48.5 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 296 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.  ஆட்ட நாயகன் விருது 96 ரன்கள் சேர்த்த மேக்ஸ்வெல்லுக்கு வழங்கப்பட்டது.

இந்த வெற்றியின் மூலம், 5 போட்டிகள் கொண்ட தொடரை ஆஸ்திரேலிய அணி 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.



    Tags :    
3-வது ஒருநாள் கிரிக்கெட்: விராட் கோலி சதம் வீண்,  இந்தியா மீண்டும் தோல்வி   -ஆஸ்திரேலியா வெற்றி , 3-வது ஒருநாள் கிரிக்கெட்: விராட் கோலி சதம் வீண்,  இந்தியா மீண்டும் தோல்வி   -ஆஸ்திரேலியா வெற்றி , 3-வது ஒருநாள் கிரிக்கெட்: விராட் கோலி சதம் வீண்,  இந்தியா மீண்டும் தோல்வி   -ஆஸ்திரேலியா வெற்றி ,
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 ஜிம்பாப்வேயை 62 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி
ஜிம்பாப்வேக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. ஜிம்பாப்வே அணியை 62 ரன்கள் வித்தியாசத்தில்  வீழ்த்தியது. முதலில் பேட் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 271 ரன்கள் எடுத்தது. இந்திய தரப்பில் ரஹானே

மேலும்...

 கெய்ல் அதிரடி சதம் வீண்
இங்கிலாந்தில் நடைபெறும் உள்ளூர் டி20 தொடரில், வெஸ்ட் இண்டீஸ் வீரர் கிறிஸ் கேல் அதிரடியாக 62 பந்தில் 151 ரன் விளாசியும்  சாமர்செட் அணி பரிதாபமாக தோல்வியைத் தழுவியது. டான்டன் கவுன்டி மைதானத்தில் நடந்த இந்த போட்டியில், டாசில் வென்று முதலில்

மேலும்...

 நீட்டா அம்பானி விருந்தில் திளைத்த மும்பை அணி வீரர்கள்
பிரிமியர் கிரிக்கெட் தொடரில் கோப்பை வென்ற மும்பை வீரர்களுக்கு தனது வீட்டில் விருந்து கொடுத்தார், அணி உரிமையாளர் நீட்டா அம்பானி.எட்டாவது பிரிமியர் கிரிக்கெட் தொடரின் பைனலில் அசத்திய மும்பை அணி, சென்னையை வீழத்தி கோப்பை வென்றது. இதையடுத்து மும்பை வீரர்கள் பல்வேறு

மேலும்...

 இந்தியா-தென்னாப்பிரிக்கா மோதல் தயார்
இந்தியா, தென் ஆப்ரிக்கா அணிகளுக்கு இடையிலான ஒருநாள் போட்டி சென்னையில் வரும் அக்டோபர் அல்லது நவம்பர் மாதம் நடக்கவுள்ளது.வரும் அக்டோபர் மாதம் இந்தியா வரவுள்ள தென் ஆப்ரிக்க அணி நான்கு டெஸ்ட், ஐந்து ஒருநாள் மற்றும் மூன்று சர்வதேச ‘டுவென்டி–20’ போட்டிகள்

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match




























மகளிர்





























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in