IPL கிரிக்கெட்டில் புனே அணிக்கு 9–வது வெற்றி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது

IPL கிரிக்கெட்டில் புனே அணிக்கு 9–வது வெற்றி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது
IPL 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் புனே அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப்பை தோற்கடித்து 9–வது வெற்றியை பெற்றதுடன், அடுத்த சுற்றுக்கும் முன்னேறியது.

10–வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த ஏப்ரல் 5–ந் தேதி முதல் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகளும் தங்களுக்குள் தலா 2 முறை மோத வேண்டும். லீக் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் ‘பிளே–ஆப்’ என்ற அடுத்த சுற்றுக்கு முன்னேறும். இதில் மும்பை இந்தியன்ஸ், ஐதராபாத் சன் ரைசர்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் அடுத்த சுற்றுக்கு ஏற்கனவே முன்னேறி விட்டன. பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், குஜராத் லயன்ஸ், டெல்லி டேர்டெவில்ஸ் அணிகள் அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து விட்டன. லீக் ஆட்டங்கள் நேற்றுடன் நிறைவு பெற்றது.  

இந்த நிலையில் புனேயில் நேற்று மாலை நடந்த 55–வது லீக் ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப்–ரைசிங் புனே சூப்பர் ஜெயன்ட் அணிகள் மோதின. இதில் வெற்றி பெறும் அணி தான் அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியும் என்பதால் இந்த ஆட்டம் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் அரங்கேறியது.

பஞ்சாப் அணியில் மேட் ஹென்றி, மனன்வோரா ஆகியோர் நீக்கப்பட்டு இயான் மோர்கன், ஸ்வப்னில் சிங் ஆகியோர் சேர்க்கப்பட்டனர். புனே அணியில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. ‘டாஸ்’ ஜெயித்த ரைசிங் புனே சூப்பர் ஜெயன்ட் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதன்படி முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக மார்ட்டின் கப்தில், விருத்திமான் சஹா ஆகியோர் களம் இறங்கினார்கள்.

முதல் பந்திலேயே அதிரடி ஆட்டக்காரர் மார்ட்டின் கப்தில் (0) உனட்கட் பந்து வீச்சில் மனோஜ்திவாரியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். முதல் கோணல் முற்றிலும் கோணல் என்பது போல் புனே அணியின் அபார பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் பஞ்சாப் அணியின் விக்கெட்டுகள் மள, மள வென்று சரிந்தன.

15.5 ஓவர்களில் பஞ்சாப் அணி 73 ரன்னில் சுருண்டது. அதிகபட்சமாக அக்‌ஷர் பட்டேல் 22 ரன்னிலும் (20 பந்துகளில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்சருடன்) விக்கெட் கீப்பர் விருத்திமான் சஹா 13 ரன்னிலும் (17 பந்துகளில் ஒரு சிக்சருடன்), ஷான் மார்ஷ் 10 ரன்னிலும் (13 பந்துகளில் 2 பவுண்டரியுடன்), ஸ்வப்னில் சிங் 10 ரன்னிலும் (17 பந்துகளில்) ஆட்டம் இழந்தனர். மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டம் இழந்து நடையை கட்டினார்கள். புனே அணி தரப்பில் ‌ஷர்துல் தாகூர் 3 விக்கெட்டும், உனட்கட், ஆடம் ஜம்பா, டேனியல் கிறிஸ்டியன் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

பின்னர் 74 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் ஆடிய புனே அணி 12 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 78 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. தொடக்க ஆட்டக்காரர் ராகுல் திரிபாதி 20 பந்துகளில் 4 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 28 ரன் எடுத்த நிலையில் அக்‌ஷர் பட்டேல் பந்து வீச்சில் போல்டு ஆனார். தொடக்க ஆட்டக்காரர் ரஹானே 34 ரன்னும் (34 பந்துகளில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்சருடன்), கேப்டன் ஸ்டீவன் சுமித் 15 ரன்னும் (18 பந்துகளில்) எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர். புனே அணி வீரர் உனட்கட் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

14–வது (கடைசி) லீக் ஆட்டத்தில் ஆடிய புனே அணி 9 வெற்றி, 5 தோல்வியுடன் 18 புள்ளிகள் பெற்று புள்ளி பட்டியலில் 4–வது இடத்தில் இருந்து, ஐதராபாத், கொல்கத்தாவை பின்னுக்கு தள்ளி விட்டு 2–வது இடத்தை பிடித்ததுடன், அடுத்த சுற்றுக்கும் தகுதி பெற்றது. கடைசி லீக் ஆட்டத்தில் ஆடிய பஞ்சாப் அணி 7–வது தோல்வியை சந்தித்து அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து வெளியேறியது.

https://goo.gl/6x8RTe






15 May 2017

IPL கிரிக்கெட்டில் புனே அணிக்கு 9–வது வெற்றி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது

14 May 2017

IPL கிரிக்கெட்டில் குஜராத்தை வீழ்த்தியது, ஐதராபாத் அணி

09 May 2017

மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: கனடா வீராங்கனை பவுச்சர்டிடம் ‌ஷரபோவா தோல்வி

09 May 2017

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் கொல்கத்தாவை தோற்கடித்து பஞ்சாப் அணி 6–வது வெற்றி

17 Jan 2016

3-வது ஒருநாள் கிரிக்கெட்: விராட் கோலி சதம் வீண், இந்தியா மீண்டும் தோல்வி -ஆஸ்திரேலியா வெற்றி

12 Jul 2015

ஜிம்பாப்வேயை 62 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி

01 Jun 2015

கெய்ல் அதிரடி சதம் வீண்

28 May 2015

நீட்டா அம்பானி விருந்தில் திளைத்த மும்பை அணி வீரர்கள்

25 May 2015

இந்தியா-தென்னாப்பிரிக்கா மோதல் தயார்

25 May 2015

ஷரபோவா பிரெஞ்ச் ஓபன் தொடரை கைப்பற்றினார்