தமிழ்நாடு தகவல் ஆணையத்திற்கு 5 புதிய தகவல் ஆணையர்கள் நியமனம்

தமிழ்நாடு தகவல் ஆணையத்திற்கு 5 புதிய தகவல் ஆணையர்கள் நியமனம்
தமிழ்நாடு தகவல் ஆணையத்திற்கு டாக்டர் வி.சரோஜா, நீதிபதி எஸ்.எப்.அக்பர் உள்பட புதிதாக 5 தகவல் ஆணையர்களை கவர்னர் கே.ரோசய்யா நியமித்துள்ளார்.

இதுகுறித்து தமிழக அரசிதழில் நேற்று வெளியிடப்பட்ட உத்தரவில் கூறியிருப்பதாவது:-

தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005, பிரிவு 15 (3)-ன் கீழ், மாநில தகவல் ஆணையர்களாக டாக்டர் வி.சரோஜா, முன்னாள் ஐ.பி.எஸ்.அதிகாரி கிறிஸ்டோபர் நெல்சன், பி.தமிழ்செல்வன், பி.நீலாம்பிகை, எஸ்.எப்.அக்பர் ஆகிய 5 பேரை கவர்னர் கே.ரோசய்யா நியமித்துள்ளார்.

புதிதாக நியமிக்கப்பட்டு உள்ள இவர்கள், மாநில தகவல் ஆணையர்களாக பொறுப்பேற்ற நாளில் இருந்ëது 5 ஆண்டுகள் அல்லது 65 வயது, இதில் எது முதலில் வருகிறதோ அதுவரை இந்த பதவியில் இருப்பார்கள்.

இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

மாநில தகவல் ஆணையர் பதவிக்கு தகுதியான நபர்களை பரிந்துரை செய்வதற்காக தேர்வுக்குழு அமைக்கப்பட்டிருந்தது. இந்த குழுக்கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. இதில், குழுவின் தலைவரும், முதல்-அமைச்சருமான ஜெயலலிதா, நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்துகொண்டனர். தமிழக சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் விஜயகாந்த் கலந்து கொள்ளவில்லை. இந்த குழு நீண்ட விவாதத்திற்கு பிறகு மேற்கண்ட 5 பேரின் பெயர்களை மாநில தகவல் ஆணையர் பதவிக்காக கவர்னர் கே.ரோசய்யாவுக்கு பரிந்துரை செய்தது. அதன்பேரில் புதிதாக 5 தகவல் ஆணையர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

புதிய தகவல் ஆணையர்களின் விவரம் வருமாறு:-

கிறிஸ்டோபர் நெல்சன்

இவரது சொந்த ஊர், நாகர்கோவில். தமிழக காவல்துறையில் 1985-ம் ஆண்டு டி.எஸ்.பி.யாக பணியில் சேர்ந்தார். 1991-ம் ஆண்டு ஐ.பி.எஸ். அதிகாரியாக பதவி உயர்வு பெற்றார். 1995-ம் ஆண்டு சிறந்த போலீஸ் அதிகாரிக்கான ஜனாதிபதி பதக்கம் இவருக்கு அளிக்கப்பட்டது. கடைசியாக ஐ.ஜி.யாக பணியாற்றி, 2011-ம் ஆண்டு ஓய்வுபெற்றார்.

எஸ்.எப்.அக்பர்

நெல்லை மாவட்டம், கடையநல்லூரை சேர்ந்த இவர், 1973-ம் ஆண்டு வக்கீலாக பதிவு செய்து, சென்னை ஐகோர்ட்டில் பணியாற்றினார். மாவட்ட நீதிபதியாக பணிபுரிந்த இவர், தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு உறுப்பினர் செயலாளராக 2000-ம் ஆண்டு நியமிக்கப்பட்டார். தடா கோர்ட்டு நீதிபதியாகவும், சென்னை ஐகோர்ட்டு விஜிலென்ஸ் பிரிவு நீதிபதியாகவும், மாநில போக்குவரத்து மேல்முறையீட்டு தீர்ப்பாய தலைவராகவும் பணியாற்றினார். கடைசியாக சென்னையில் தொழில் தீர்ப்பாய தலைவராக பணியாற்றி ஓய்வுபெற்றார்.

டாக்டர் வி.சரோஜா

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் இவரது சொந்த ஊர். சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மகப்பேறு மருத்துவராக பணியாற்றினார். சங்ககிரி தொகுதி எம்.எல்.ஏ.வாகவும், ராசிபுரம் தொகுதி எம்.பி.யாகவும் இருந்தார். தமிழ்நாடு மாநில பெண்கள் ஆணையம், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஆகியவற்றின் உறுப்பினராக இருந்திருக்கிறார்.

பி.தமிழ்செல்வன்

சென்னை கீழ்ப்பாக்கத்தில் வசிக்கும் இவர், 1983-ம் ஆண்டு வக்கீலாக பதிவு செய்தார். சென்னை குடிநீர் வாரியத்தின் சட்ட ஆலோசகர், தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் உறுப்பினர், அம்பேத்கார் சட்டக்கல்லூரியின் செனட் மற்றும் சிண்டிகேட் உறுப்பினர் போன்ற பல்வேறு பொறுப்புகள் வகித்துள்ளார்.

பி.நீலாம்பிகை

கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த இவர், ஐகோர்ட்டு வக்கீலாக பணியாற்றினார். தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் உறுப்பினராக பணியாற்றினார். இவர், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் உறுப்பினர் பாலசுப்பிரமணியன் மனைவி ஆவார்.
https://goo.gl/111eEZ


18 Dec 2018

வீடு கட்ட லஞ்சம் கொடுக்க வேண்டுமா?- அதிகாரியிடம் போனில் பேசிய கமல்

14 Dec 2018

நான் உழைத்து முதல்வரானேன்: நீங்கள் அப்பாவின் தயவால் உயர்ந்துள்ளீர்கள்: ஸ்டாலின்மீது எடப்பாடி பாய்ச்சல்

14 Dec 2018

புயலால் 8 மீட்டர் வரை அலை எழும்பும்: இந்திய வானிலை மையம் எச்சரிக்கை

14 Dec 2018

கருணாநிதி சிலை திறப்பு விழாவில் ரஜினி, கமல் பங்கேற்க வாய்ப்பு என தகவல்

13 Dec 2018

பள்ளியில் 5 மாணவிகள் வி‌ஷம் குடித்து தற்கொலை முயற்சி

13 Dec 2018

கழிவறை கேட்டு தந்தை மீது புகார் தந்த 7 வயது சிறுமி.. ஆம்பூர் தூய்மை இந்தியா தூதுவரானார்

13 Dec 2018

காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக மாறும் : வட தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு

13 Dec 2018

தினகரனை தவிர பிரிந்து சென்றவர்கள் யார் வேண்டுமானாலும் திரும்பி வரலாம் - முதல்வர் பகிரங்க அழைப்பு

11 Dec 2018

குடும்ப வறுமையில் மகனுக்கு வி‌ஷம் கொடுத்து கொன்று தந்தை தற்கொலை

11 Dec 2018

கூடைப்பந்து விளையாடும்போது மாரடைப்பு: கல்லூரி மாணவி பரிதாப மரணம்