tamilkurinji logo
 

நீதிபதி கே.சந்துரு ஓய்வு பெற்றார் காரை ஒப்படைத்துவிட்டு, மின்சார ரெயிலில் வீட்டுக்கு சென்றார்,தமிழ் செய்திகள் Tamil news

தமிழ்,செய்திகள்,,Tamil,news

செய்திகள் >>> தமிழகம்

நீதிபதி கே.சந்துரு ஓய்வு பெற்றார் காரை ஒப்படைத்துவிட்டு, மின்சார ரெயிலில் வீட்டுக்கு சென்றார்

First Published : Friday , 8th March 2013 07:22:28 PM
Last Updated : Friday , 8th March 2013 07:22:28 PM


நீதிபதி கே.சந்துரு ஓய்வு பெற்றார் காரை ஒப்படைத்துவிட்டு, மின்சார ரெயிலில் வீட்டுக்கு சென்றார்,தமிழ் செய்திகள்  Tamil news

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றிய கே.சந்துரு  பணியில் இருந்து ஓய்வுபெற்றார். உயர் நீதிமன்றம் வழங்கிய காரை பதிவகத்திடம் ஒப்படைத்துவிட்டு, நண்பர்களுடன் மின்சார ரெயிலில் வீட்டுக்கு சென்றார்.

உயர் நீதிமன்ற நீதிபதி கே.சந்துரு  பணியில் இருந்து ஓய்வுபெற்றார். இதையடுத்து அவருக்கு வழங்கப்பட்ட சொகுசு காரை, நேற்று காலையில் நீதிமன்ற பதிவகத்திடம் ஒப்படைத்தார்.

பின்னர், கோர்ட்டில் அமர்ந்து வழக்குகளை விசாரித்தார். மதியம் 3 மணியளவில் வழக்கை விசாரித்து முடித்தார். பின்னர், தலைமை நீதிபதி சேம்பருக்கு சென்று தன் சொத்து கணக்கு விவரங்களை அறிக்கையாக கொடுத்தார்.

அப்போது, ‘‘பதவி ஏற்கும்போது என் குடும்ப சொத்து விவரங்களை கொடுத்தேன். இப்போது என்னுடைய சொத்து விவரங்களை கொடுக்கிறேன். புதிதாக சொத்து வாங்கியதற்கான வருமான விவரங்களையும் குறிப்பிட்டுள்ளேன்’’ என்று கூறினார்.

அப்போது, ‘‘உயர் நீதிமன்றம் கொடுத்த காரை காலையிலேயே ஒப்படைத்து விட்டதாக பதிவக அதிகாரிகள் கூறினார்கள். வேண்டுமானால் நீங்கள் என்னுடைய காரில் வரலாம். உங்கள் வீட்டில் இறக்கிவிட்டு செல்கிறேன்’’ என்று தலைமை நீதிபதி (பொறுப்பு) ராஜேஷ்குமார் அகர்வால் கூறினார்.

அதற்கு, ‘‘தன் நண்பர்களுடன் மின்சார ரெயிலில் வீட்டுக்கு செல்வதாகவும், இதற்காக சீசன் டிக்கெட் முன்பே வாங்கிவிட்டேன்’’ என்றும் சந்துரு கூறினார்.

இதன்பின்னர் தன்னுடைய சேம்பருக்கு நீதிபதி கே.சந்துரு சென்றார். அங்கு அவருக்கு வாழ்த்து தெரிவிக்க வக்கீல்கள், மூத்த வக்கீல்கள், வக்கீல் சங்க நிர்வாகிகள், நண்பர்கள் என்று பலர் காத்திருந்தனர். அவர்களின் வாழ்த்துகளை பெற்றுக்கொண்ட நீதிபதி கே.சந்துரு, தன்னிடம் வேலை செய்த ஊழியர்களுக்கு நன்றி தெரிவித்து சிறிது நேரம் பேசினார்.

பின்னர், சேம்பரில் தன்னுடைய நீதிபதி உடைகளை கழற்றி, வேட்டி, சட்டை அணிந்து கொண்டார். ஐகோர்ட்டு ஊழியர்களிடம் விடைபெற்றுக்கொண்டு, வக்கீல் என்ற முறையில் நேராக உயர் நீதிமன்றத்தில் உள்ள பத்திரிகையாளர் அறைக்கு வந்தார்.

நீதிபதி பதவி ஏற்பதற்கு முன்பு, பத்திரிகையாளர் அறையில் ஓய்வு நேரத்தில் சந்துரு இருப்பது வழக்கம். அதேபோல், ஓய்வு பெற்றுச் செல்லும்போது, பத்திரிகையாளர் அறைக்கு வந்து அமர்ந்து, நிருபர்களுடன் காபி குடித்துக்கொண்டே சிறிது நேரம் கலந்துரையாடினார்.

பின்னர் நண்பர்களுடன் சென்னை நீதிமன்றத்துக்கு எதிரே உள்ள ஓட்டலுக்கு நடந்தே சென்றார். அங்கு நண்பர்களுடன் சாப்பிட்டார். பின்னர் மூத்த வக்கீலாக இருந்தபோது, தான் பயன்படுத்திய லிங்கு செட்டி தெருவில் உள்ள அலுவலகத்துக்கு சென்றார்.

அங்கு சிறிது நேரம் இருந்துவிட்டு, வடக்கு கடற்கரை ரெயில் நிலையத்துக்கு நண்பர்களுடன் சென்றார். அங்கு மின்சார ரெயிலில் ஏறி, மைலாப்பூர் ரெயில் நிலையத்தில் இறங்கினார். அங்கிருந்து ஆட்டோவில் தன்னுடைய சொந்த வீட்டுக்கு சென்றார்.

ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி எம்.ஜி.எச். ஜாக்சன் என்பவர் 1929–ம் ஆண்டு ஓய்வு பெற்றார். ஓய்வுபெறும்போது, அவருக்கு பிரிவு உபசார விழா நடத்த வேண்டும் என்று அப்போதைய அட்வகேட் ஜெனரல், வக்கீல்கள் ஆகியோர் கோரிக்கை விடுத்தனர். அதற்கு நீதிபதி ஜாக்சன், ‘‘நீதிபதியாக நான் எதுவும் சாதிக்கவில்லை. என் பணியைத்தான் செய்தேன்’’ என்று கூறி பிரிவு உபசார விழாவுக்கு வர மறுத்துவிட்டார்.

இதன்பின்னர், நாடு சுதந்திரம் அடைந்த பின்னர், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி பிரிவு உபசார விழா வேண்டாம் என்று மறுத்த முதல் நீதிபதி கே.சந்துரு என்று வக்கீல்கள் கூறினர்.

 



    Tags :    
நீதிபதி கே.சந்துரு ஓய்வு பெற்றார் காரை ஒப்படைத்துவிட்டு, மின்சார ரெயிலில் வீட்டுக்கு சென்றார்,தமிழ் செய்திகள்  Tamil news
நீதிபதி கே.சந்துரு ஓய்வு பெற்றார் காரை ஒப்படைத்துவிட்டு, மின்சார ரெயிலில் வீட்டுக்கு சென்றார்,தமிழ் செய்திகள்  Tamil news
நீதிபதி கே.சந்துரு ஓய்வு பெற்றார் காரை ஒப்படைத்துவிட்டு, மின்சார ரெயிலில் வீட்டுக்கு சென்றார்,தமிழ் செய்திகள்  Tamil news
செளந்தர்யா Full Length Tamil Movie தேன் குழல் முறுக்கு mutton sukkaa
 மாமனார் செக்ஸ் டார்ச்சர் : மருமகள் தற்கொலை
வரதட்சணை தகராறில் மாமனார் தவறான உறவுக்கு அழைத்ததால் இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.  திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூர் அடுத்த பின்னப்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவர் பிரகாஷ் (26). இவர் செய்யாறில் உள்ள ஒரு ரைஸ்மில்லில்  வேலை செய்து வருகிறார். இவருக்கும்

மேலும்...

 மனைவி கொலைக்கு பழிவாங்க 4 பேரை கொன்ற தொழிலதிபர் கைது
தன்னுடைய மனைவியைக் கொலை செய்த கூலிப் படையினர் மற்றும் தனது தம்பி உட்பட 4 பேரை சாமர்த்தியமாகக் கொலை செய்த தொழிலதிபர், சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு விதிவசத்தால் காவல்துறையில் சிக்கியுள்ளார். கொலைகளுக்கு உடந்தையாக இருந்த அவரது நண்பரும் கைதாகியுள்ளார்.சென்னை கொருக்குப்போட்டை

மேலும்...

 குடும்ப தகராறாறு-கணவர் கண்டக்டராக வேலைபார்த்த பஸ்சில் இருந்து குதித்து மனைவி பலி
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகேயுள்ள மரத்துப்பட்டியைச் சேர்ந்தவர் மாயராஜன் (27). தனியார் பஸ் கண்டக்டர். இவரது மனைவி சண்முகப்பிரியா (26). இவர்களுக்கு தர்ஷிணி, பிரவீன் என்ற 2 குழந்தைகள் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு

மேலும்...

 சென்னையில் மாநகராட்சி துப்புரவு தொழிலாளி கழுத்து அறுத்து கொடூர கொலை
தரமணி ரயில் நிலையம் அருகே மாநகராட்சி துப்புரவு தொழிலாளி கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக 4 பேரிடம் விசாரணை நடக்கிறது. தரமணி - பெருங்குடி ரயில் நிலையங்களுக்கு இடையே  தண்டவாளத்தை ஒட்டியுள்ள

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


























மகளிர்





































Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in