tamilkurinji.co.in world news daily news from tamilkurinji.co.in http://www.tamilkurinji.co.in Sat, 24 Jun 2017 08:44:20 +0000 FeedCreator 1.7.2 http://www.tamilkurinji.co.in/images_/tamilkurinji_logo.png tamilkurinji.co.in logo http://www.tamilkurinji.co.in world news feed provided by tamilkurinji.co.in. Click to visit. அதிபர் டிரம்ப் மனநலம் பாதிக்கப்பட்டவர்:வடகொரியா கடும் விமர்சனம் http://tamilkurinji.co.in/mobile/news_details.php?/அதிபர்/டிரம்ப்/மனநலம்/பாதிக்கப்பட்டவர்:வடகொரியா/கடும்/விமர்சனம்/&id=40441 அமெரிக்க மாணவர் ஓட்டோ வார்ம்பியர் வடகொரிய சிறையில் சித்ரவதைச் செய்யப்பட்டு மரணமடைந்ததையடுத்து பதற்றமான சூழல் நிலவுவதையடுத்து பதற்றத்தை மேலும் அதிகரிக்கும் விதமாக அதிபர் ட்ரம்ப்பை மனநிலை பிறழ்ந்தவர் என்று வடகொரியா வர்ணித்துள்ளது.

வடகொரியாவின் அரசு நாளிதழான சின்மன் செய்தித் தாளில் எழுதப்பட்ட தலையங்கத்தில் அமெரிக்க அதிபர் கடினமான சூழ்நிலையில் இருப்பதாகவும் எனவே மக்களை திசைத் திருப்ப வடகொரியா மீது முன் தவிர்ப்புத் தாக்குதலை நடத்தி விடலாம் என்ற யோசனையுடன் விளையாடி வருகிறது அமெரிக்கா என்று சாடியுள்ளது.

மேலும் “மனநிலை பிறழ்ந்த ட்ரம்பின் ஆலோசனைகளைப் பின்பற்றினால் தென் கொரியாவுக்கு பேரழிவு ஏற்படும் என்பதை அந்நாடு உணர வேண்டும்” என்றும் அந்தத் தலையங்கம் தெரிவித்துள்ளது.

22 வயது வார்ம்பியர் வடகொரிய விடுதி ஒன்றிலிருந்து அரசியல் போஸ்டர் ஒன்றைத் திருடியதாகக் கைது செய்யப்பட்டு கடினமான உழைப்புச் சித்ரவதைக்கு ஆட்படுத்தப்பட்டார். 18 மாதங்கள் சித்ரவதையை அனுபவித்த வார்ம்பியர் கடந்த வாரம் கோமா நிலையில் சிறையிலிருந்து மீட்கப்பட்டார்.

இவர் திங்களன்று கடுமையான மூளைச் சேதத்தின் காரணமாக சின்சினாட்டியில் மரணமடைந்தார். இவரது சித்ரவதை, மரணம் அமெரிக்காவை உலுக்கி விட்டது.

இதனையடுத்து வடகொரியாவின் கொடூரமான ஆட்சிமுறை குறித்து ட்ரம்ப் கடும் விமர்சனம் வைத்தார். அதாவது அடிப்படை மனித நாகரிகமின்றி சிறிய குற்றத்துக்காக பெரிய தண்டனை விதித்து கடும் சித்ரவதைகளை செலுத்தித் தண்டிப்பது என்ற வடகொரியாவின் அராஜகத்தை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்று சாடினார்.

இந்நிலையில் அதிபர் ட்ரம்ப்பை ‘மனநிலை பிறழ்ந்தவர்’ வடகொரியா வர்ணித்துள்ளது.

tamilkurinji editor Thu, 22 Jun 2017 13:38:32 +0000 அமெரிக்காவில் மசூதி அருகே இஸ்லாமிய இளம்பெண் படுகொலை http://tamilkurinji.co.in/mobile/news_details.php?/அமெரிக்காவில்/மசூதி/அருகே/இஸ்லாமிய/இளம்பெண்/படுகொலை/&id=40423 அமெரிக்காவின் விர்ஜினியா மாநிலத்தின் ரெஸ்ட்டான் பகுதியில் வசித்துவரும் சில இஸ்லாமிய பெண்கள் தங்களது இருப்பிடத்தின் அருகேயுள்ள 24 மணிநேர உணவகத்தில் ரம்ஜான் நோன்புக்கான அதிகாலை உணவை முடித்துவிட்டு வீடு திரும்பி கொண்டிருந்தனர்.

அப்போது, அவ்வழியாக காரில் அவர்களை கடந்துசென்ற ஒரு வாலிபர் மத துவேஷத்துடன் தகாத வார்த்தைகளை கூறி அந்தப் பெண்களை திட்டினார்.

இதனால் பீதியடைந்த அவர்கள் உயிர் பயத்துடன் அருகாமையில் உள்ள மசூதி மற்றும் உள்ளூர் மக்களுக்கான அனைத்து டல்லாஸ் பகுதி இஸ்லாமிய சங்கத்துக்கு சொந்தமான கட்டிடத்தை நோக்கி ஓடினர்.

அந்த கட்டிடத்துக்குள் நுழைந்த பின்னர் தங்களுடன் சாப்பிட்டவந்த நப்ரா ஹுசைன்(17) என்பவரை காணாமல் திடுக்கிட்டனர்.

இதுதொடர்பாக, அனைத்து டல்லாஸ் பகுதி இஸ்லாமிய  கிடைத்த தகவலின் அடிப்படையில் விரைந்துவந்த பேர்ஃபேக்ஸ் மற்றும் லவுடன் கவுன்ட்டி போலீசார் மாயமான நப்ரா ஹுசைனை தீவிரமாக தேடி வந்தனர்.

இந்நிலையில், அருகாமையில் உள்ள ஸ்டெர்லிங் ரிட்ஜ்டாப் சர்க்கிள் என்ற பகுதியில் ஒரு குட்டையின் அருகே காணாமல்போன நப்ரா ஹுசைன் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார்.

அதேவேளையில், சந்தேகப்படும் வகையில் அவ்வழியாக இருசக்கர காரில் சுற்றிவந்த ஒருவரை போலீசார் மடக்கிப் பிடித்து விசாரித்தனர்.

அப்போது, இளம்பெண் நப்ரா ஹுசைனை அவர் காரில் கடத்திச் சென்று பேஸ்பால் மட்டையால் அடித்துக் கொன்ற விபரம் தெரியவந்தது.

கைது செய்யப்பட்ட நபரின் பெயர் டார்வின் மார்ட்டினெஸ் டோரஸ்(22) என்று தெரியவந்துள்ள நிலையில் மத துவேஷ தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு குற்றப்பிரிவுகளின்கீழ் அவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். tamilkurinji editor Mon, 19 Jun 2017 13:45:37 +0000 இந்தியாவை சேர்ந்தவரை சர்வதேச தீவிரவாதியாக அறிவத்த அமெரிக்கா http://tamilkurinji.co.in/mobile/news_details.php?/இந்தியாவை/சேர்ந்தவரை/சர்வதேச/தீவிரவாதியாக/அறிவத்த//அமெரிக்கா//&id=40404 ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கம் இந்தியாவில் ஆதிக்கம் செலுத்த மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளை அமெரிக்கா அம்பலப்படுத்தியுள்ளது.

அமெரிக்க வெளியுறவுத் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இது குறித்து தகவல் வெளியாகியுள்ளன. ஐஎஸ் இயக்கத்திற்கு இந்தியாவில் ஆட்களை திரட்டும் பணிக்காக அந்த இயக்கத்தின் முக்கிய தளபதி செயல்பட்டு வருவது தெரியவந்துள்ளது.

முகமது செஃபி அர்மர் என்ற நபர் கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர். யூசப் ஆலந்து என்ற பெயரில் இணையதளம் மூலம் இதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதை அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சகம் சுட்டிக் காட்டியுள்ளது.

ஐஎஸ் இயக்கத்தின் கிளை அமைப்புகளாக ஜூடத் அல்காலிஃபா உட்பட பல்வேறு அமைப்புகளை இந்தியாவில் உருவாக்கி அவற்றில் இளைஞர்களை செஃபி அர்மர் சேர்த்து வந்திருப்பது தெரியவந்தது.

600 முதல் 700 இளைஞர்களுடன் பேஸ்புக் மூலம் முகமது செஃபி நெருங்கிய தொடர்பில் இருப்பதாக அமெரிக்க வெளியுறவுத் துறை இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் அனைவரும் ஐஎஸ் இயக்கத்தின் தலைவர் அபு பகீர் அல்கக்தாதியின் கட்டளைகளை நிறைவேற்றும் வகையில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

சிரியாவில் அமெரிக்கப் படைகள் தாக்குதலில் கொல்லப்பட்டதாக வெளியான தகவல்களை மறுக்கும் வகையில் இந்தியாவில் ஐஎஸ் அமைப்பின் ஆதிக்கத்தை ஏற்படுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. செஃபி அர்மரை சர்வதேச தீவிரவாதிகள் பட்டியலில் சேர்த்து அமெரிக்கா அறிவித்துள்ளது.
tamilkurinji editor Fri, 16 Jun 2017 06:53:32 +0000 சீனாவில் மழலையர் பள்ளியில் பயங்கர குண்டு வெடிப்பு 7 பேர் பலி 59 பேர் படுகாயம் http://tamilkurinji.co.in/mobile/news_details.php?/சீனாவில்/மழலையர்/பள்ளியில்/பயங்கர/குண்டு/வெடிப்பு/7/பேர்/பலி/59/பேர்/படுகாயம்/&id=40398 சீனாவில் மழலையர் பள்ளியில் பயங்கர சத்தத்துடன் கூடிய குண்டு வெடித்ததில் 7 பேர் பலியாகினர். 59 பேர் படுகாயம் அடைந்தனர்.

கிழக்கு சீனா ஜியாங்சு மாகாணத்தில் ஒரு மழலையர் பள்ளி செயல்பட்டு வருகிறது. மாலை பள்ளி முடிந்ததும் பள்ளி குழந்தைகள் வெளியே ஓடி வந்தனர். அப்போது மாலை 4.50 மணியளவில் பள்ளியின் நுழைவு வாயிலில் பயங்கர சத்தத்துடன் வெடிகுண்டு வெடித்தது. இதில் 7 பேர் பலியாகி உள்ளதாகவும், 59 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக சீன ஊடகங்கள் தெரிவித்துள்ளது. மேலும் பலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக சீன ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருவதாக சீனா போலீசார் தெரிவித்துள்ளனர். குண்டுவெடிப்பு நடந்த பள்ளியை சுற்றி போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மழலையர் பள்ளியில் குண்டு வெடித்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. tamilkurinji editor Thu, 15 Jun 2017 13:51:53 +0000 லண்டன் 27 மாடி கட்டிடத்தில் பயங்கர தீ: 200 தீயணைப்பு வீரர்கள் போராட்டம் http://tamilkurinji.co.in/mobile/news_details.php?/லண்டன்/27/மாடி/கட்டிடத்தில்/பயங்கர/தீ:/200/தீயணைப்பு/வீரர்கள்/போராட்டம்/&id=40391 லண்டனில் 27 மாடி கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.மேற்கு லண்டன் லதிமேர் சாலையில் உள்ள  கிரன்பெல் டவரில் பயங்கர தீவிபத்து நடந்தது.

27 மாடி கட்டிடத்தில் 2வது தளத்தில் பிடித்த தீ அனைத்து தளங்களுக்கும் பரவி வருகிறது.தீயை அணைக்க 40 தீயணைப்பு வாகனங்கள், 200 வீரர்கள் தீவிரமாக போராடி வருகின்றனர்.கொளுந்துவிட்டு எரியும் தீயில் இதுவரை 2 பேர் காயமடைந்துள்ளனர்

கட்டிடத்தில் உள்ள 120 வீடுகளில் வசித்து வருபவர்களின் நிலை என்னவென்று தெரியவில்லை. இந்த தீ விபத்திற்கு தற்போது வரை காரணம் தெரியவில்லை என்ற போதிலும், இதில் தீவிரவாதிகளின் சதி இருக்குமோ என்று அஞ்சப்படுகிறது. tamilkurinji editor Wed, 14 Jun 2017 07:03:28 +0000 விபத்துக்குள்ளான பாலஸ்தீன பெண்ணின் குழந்தைக்கு பாலூட்டி நெகிழ வைத்த யூத பெண் http://tamilkurinji.co.in/mobile/news_details.php?/விபத்துக்குள்ளான/பாலஸ்தீன/பெண்ணின்/குழந்தைக்கு/பாலூட்டி/நெகிழ/வைத்த/யூத/பெண்/&id=40384 விபத்துக்குள்ளான பாலஸ்தீன பெண்ணின் கைக்குழந்தைக்கு யூத பெண் ஒருவர் பாலூட்டிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கைக்குழந்தையுடன் உள்ள அந்த பெண்ணுக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

இஸ்ரேல் நாட்டில் உள்ள இன் கரீம் என்னும் பகுதியில் பாலஸ்தீன பெண் ஒருவர் கணவர் மற்றும் கைக்குழந்தையுடன் சென்ற கார் விபத்துக்குள்ளானது.

விபத்தில் அந்த பெண் படுகாயங்களுடன் உயிர் தப்பினார். அவரின் கணவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவர்களின் பச்சிளங் குழந்தை சிறிய காயங்களுடன் உயிர்தப்பியது.

படுகாயமடைந்த பாலஸ்தீன  பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவரின் குழந்தையை அந்த மருத்துவமனையில் பணிபுரியும் நர்ஸ் உலா என்பவரிடம்  ஒப்படைத்துள்ளனர். இதனிடையே பசி தாங்க முடியாமல் அக்குழந்தை அழத் தொடங்கிவிட்டது.

குழந்தையின் தாய் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்ததால் அவரால் தாய்பால் கொடுக்க முடியவில்லை. இதனால் பசியில் துடிக்கும் குழந்தைக்கு நர்ஸ் பாட்டிலில் பால் கொடுக்க முயன்றுள்ளார்.

ஆனால் அதை குழந்தை குடிக்க மறுத்துவிட்டதால் அவரே அந்த குழந்தைக்கு பாலூட்டியுள்ளார். நெகிழ்ச்சியை ஏற்படுத்தும் இந்த காட்சியைப் பார்த்த குழந்தையின் உறவினர்கள் கண்கலங்கி நர்ஸ் உலாவுக்கு நன்றி தெரிவித்தனர்.

இஸ்ரேல் யூத இனத்தவரான உலா, பாலஸ்தீன பெண்ணின் குழந்தைக்கு பாலூட்டிய சம்பவம் சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்பட்டு வருகிறது. அவரின் புகைப்படத்தைப் பகிர்ந்து வலைதளவாசிகள் பாராட்டி வருகின்றனர்.
tamilkurinji editor Fri, 09 Jun 2017 14:22:06 +0000 பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகல்: டிரம்ப் அறிவிப்பு http://tamilkurinji.co.in/mobile/news_details.php?/பாரிஸ்/பருவநிலை/ஒப்பந்தத்தில்/இருந்து/அமெரிக்கா/விலகல்:/டிரம்ப்/அறிவிப்பு/&id=40378 பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகுவதாக அந்நாட்டு அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் ஏற்பட்டுள்ள சுற்றுச்சூழல் மாசுபாடு தொடர்பாக ஐ.நா. சபையில் உள்ள நாடுகள் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பாரிஸ் நகரில் ஒன்று கூடி ஒருமனதாக வரைவு ஒப்பந்தம் ஒன்றினை உருவாக்கினர்.

அந்த ஒப்பந்தத்தின் படி, வளர்ச்சியடைந்த நாடுகள் தங்களிடம் உள்ள நிலக்கரி மற்றும் அனல் மின்நிலையங்களை மொத்தமாக மூடுவது என்றும், வளரும் நாடுகள் படிப்படியாக மூடுவதென்றும் முடிவு செய்யப்பட்டது.

இந்த பாரீஸ் சுற்றுச்சூழல் மாறுபாடு ஒப்பந்தத்திற்கு பல்வேறு நாடுகளும் தொடர்ச்சியாக ஒப்புதல் அளித்த வண்ணம் இருந்தன.

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஒபாமாவும் ஒப்புதல் அளித்திருந்தார். ஆனால், தற்போதைய அதிபர் டிரம்ப் பாரீஸ் ஒப்பந்தத்திற்கு எதிரான மனநிலையை தொடக்கம் முதலே கொண்டிருந்தார்.

பாரீஸ் ஒப்பந்தத்திற்கு அமெரிக்க தொழிலதிபர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், இந்த ஒப்பந்தத்தை ஏற்பதா? வேண்டாமா? என்ற குழப்பநிலையிலேயே டிரம்ப் இருந்து வந்தார்.

இந்நிலையில், இந்த ஒப்பந்தத்திலிருது அமெரிக்கா வெளியேற முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியானது.

இந்த நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் பாரிஸ் பருவ நிலை ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறுவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

மேலும், பருவ நிலை ஒப்பந்தம் தொடர்பாக  இந்தியா, சீனா ஆகிய நாடுகள் மீது குற்றம் சாட்டியுள்ளார்.

பில்லியன் கணக்கில் வெளிநாட்டு நிதியை இந்தியா பெற்று இந்த ஒப்பந்தத்தில் பங்கு பெற்றுள்ளதாக சாடிய டிரம்ப், கூடுதலாக நூற்றுக்கணக்கான நிலக்கரி சுரங்கங்களை கட்ட சீனாவுக்கு அனுமதி அளிக்கப்பட்டு இருப்பதாகவும், நிலக்கரி உற்பத்தியை இரட்டிப்பாக்க இந்தியாவுக்கு அனுமதி வழங்கப்படவுள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். tamilkurinji editor Fri, 02 Jun 2017 06:30:40 +0000 பள்ளியின் மாடியில் இருந்து மாணவியை தூக்கி வீசிய ஆசிரியர்கள் http://tamilkurinji.co.in/mobile/news_details.php?/பள்ளியின்/மாடியில்/இருந்து//மாணவியை//தூக்கி/வீசிய/ஆசிரியர்கள்/&id=40346 பாகிஸ்தான், லாகூர் பகுதியில் உள்ள ஒரு அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருபவர் 14 வயது மாணவி பஜ்ஜர் நூர். இவரை தனது பள்ளி வகுப்பறையை சுத்தம் செய்யும்படி ஆசியர்களான புஷ்ரா மற்றும் ரெஹானா ஆகியோர் கூறியுள்ளனர்.

ஆனால், தனக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் மற்றொரு நாளில் வகுப்பறையை சுத்தம் செய்வதாக அந்த மாணவி தெரிவித்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த அந்த ஆசிரியர்கள், மாணவி பஜ்ஜர் நூரை அருகில் உள்ள மற்றொரு அறைக்கு அழைத்து சென்று அவரை அடித்து உதைத்து உள்ளனர்.

பின்னர் இரு ஆசிரியர்களும் சேர்ந்து நூரை  பள்ளியின் மேல்தளத்திலிருந்து தூக்கி வீசியதாகக் கூறப்படுகிறது.

இதனால் பலத்த காயமடைந்த மாணவி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

மேலும், இரண்டு ஆசிரியர்களும், இந்த சம்பவத்தை மறைத்ததற்காக பள்ளியின் தலைமை ஆசிரியையும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

tamilkurinji editor Tue, 30 May 2017 06:15:53 +0000 இங்கிலாந்து குண்டு வெடிப்பில் ஈடுபட்ட சல்மான் அபேதியின் புகைப்படம் வெளியீடு http://tamilkurinji.co.in/mobile/news_details.php?/இங்கிலாந்து/குண்டு/வெடிப்பில்//ஈடுபட்ட/சல்மான்/அபேதியின்/புகைப்படம்/வெளியீடு /&id=40336
இங்கிலாந்து நாட்டில், மான்செஸ்டர் நகரில் உள்ள அரங்கம் ஒன்றில் கடந்த 22–ந் தேதி இரவு அமெரிக்க பாடகி அரியானா கிராண்டேயின் பாப் இசை நிகழ்ச்சி நடந்தது. அந்த நிகழ்ச்சி முடிந்து, அவர் மேடையில் இருந்து இறங்கி வெளியேறிய நிலையில், அங்கு பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. இந்த குண்டுவெடிப்பில், குழந்தைகள் உள்பட 22 பேர் பலியாகினர். இந்த குண்டுவெடிப்புக்கு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு பொறுப்பு ஏற்றது.

இந்த குண்டுவெடிப்பை நடத்தியவர், சல்மான் அபேதி (வயது 22) என தெரியவந்துள்ளது. விசாரணை நடத்தி வரும் பிரிட்டன் போலீஸ் சல்மான் அபேதி சகோதரன் இஸ்மாயில் உள்பட  11 கைது செய்யப்பட்டுள்ளனர்.  இதற்கிடையில், தாக்குதல் நடத்திய சல்மான் அபேதியின் புகைப்படத்தை விசாரணை அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர்.

சல்மான் அபேதி குறித்த தகவல்களை வெளியிட்டுள்ள போலீசார் திங்கள் கிழமை தாக்குதல் நடத்துவதற்கு முன்பு அபேதியின் நடமாட்டம் குறித்து தகவல்கள்  தெரிந்தால் தெரிவிக்குமாறும் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளனர். சிசிடிவி கேமிராவில்  இருந்து எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.

தாக்குதல் நடத்துவதற்கு  முன்பு மான்செஸ்டர் நகரில் உள்ள சிட்டி செண்டர் பிளாட்டிற்கு சென்றுவிட்டு வந்ததாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பிரிட்டன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  சல்மான் அபேதியின் தந்தை மற்றும் சகோதரன் லிபியாவில் தடுப்புகாவலில் வைக்கப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது.
tamilkurinji editor Sun, 28 May 2017 05:42:56 +0000 உலகின் எந்த பகுதிக்கும் 3 மணி நேரத்தில் செல்லும் விமானம்: அமெரிக்க ராணுவம் தயாரிப்பு http://tamilkurinji.co.in/mobile/news_details.php?/உலகின்/எந்த/பகுதிக்கும்/3/மணி/நேரத்தில்/செல்லும்/விமானம்:/அமெரிக்க/ராணுவம்/தயாரிப்பு/&id=40331 அமெரிக்க ராணுவம் மிக ரகசியமாக அதிவேக ராக்கெட் போன்ற சிறப்பு விமானத்தை தயாரித்துள்ளது. அதற்கு போயிங் எக்ஸ்.எஸ்.1 என பெயரிடப்பட்டுள்ளது.

பான்டம் எக்ஸ்பிரஸ் என்ற நிறுவனம் அமெரிக்க ராணுவத்துக்காக இதை தயாரித்துள்ளது. அதற்கான அனுமதியை இந்நிறுவனத்துக்கு ராணுவம் வழங்கியது. இந்த விமானம் 1,360 கிலோ எடையை சுமந்து செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இது அதிவேகமாக பலத்த சத்தத்துடன் பறந்து செல்லும் திறன்படைத்தது. இது மற்ற விமானங்களை விட 5 முதல் 10 மடங்கு அதிக வேகம் செல்லும் திறன் கொண்டது.

இந்த விமானம் மூலம் உலகின் எந்த மூலைக்கும் 3 மணி நேரத்தில் சென்று அடைய முடியும். அதி நவீன தொழில் நுட்பத்துடன் கூடிய இந்த விமானம் விண்கலம், போன்ற வடிவமைப்புடன் கூடியது. tamilkurinji editor Sat, 27 May 2017 12:49:18 +0000 நீல் ஆம்ஸ்ட்ராங் சந்திரனில் மண் எடுத்து வந்த ‘பை’ ஏலம் http://tamilkurinji.co.in/mobile/news_details.php?/நீல்/ஆம்ஸ்ட்ராங்/சந்திரனில்/மண்/எடுத்து/வந்த/‘பை’/ஏலம்/&id=40304 அமெரிக்காவின் ‘நாசா’ விண்வெளி வீரர்கள் நீல் ஆம்ஸ்ட்ராங், புஷ் ஆல்டிரின் ஆகியோர் சந்திரனுக்கு அப்பல்லோ- 2 விண்கலம் மூலம் கடந்த 48 ஆண்டுகளுக்கு முன்பு முதன் முறையாக சென்று வந்தனர்.

அப்போது சந்திரனில் முதன் முதலாக காலடி எடுத்து வைத்த நீல் ஆம்ஸ்ட்ராங் அங்கிருந்து மண், பாறைகளை சேகரித்து அவற்றை ஒரு பையில் எடுத்து வந்தார்.

அதில் 500 கிராம் மண், 12 பாறை படிவங்கள் போன்றவை இருந்தன. இவை சந்திரனில் 5 பல்வேறு இடங்களில் எடுக்கப்பட்டவை. இவை நினைவு சின்னங்களாக கருதப்படுகிறது.

இதற்கிடையே சந்திரனில் இருந்து மண் எடுத்து வரப்பட்ட ‘பை’ வருகிற ஜூலை 12-ந்தேதி ஏலம் விடப்படுகிறது. நியூயார்க்கில் உள்ள ‘சோத்பீ’ மையத்தில் ஏலம் விடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த பையில் சந்திரனின் மண் துகள்கள் உள்ளன. பையுடன் அதுவும் சேர்ந்து இருப்பதால் அப் ‘பை’ ஒரு நினைவு சின்னமாக கருதப்படுகிறது.

எனவே அந்த பை ரூ.25 கோடிக்கு ஏலம் போகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் ஏலம் அப்பல்லோ-2 விண்கலம் சந்திரனில் இருந்து பூமியில் தரை இறங்கிய ஜூலை 20-ந்தேதி அன்று ஏலம் விடப்படுகிறது.

tamilkurinji editor Wed, 24 May 2017 05:50:14 +0000 புற்றுநோயால் பாதிக்கபட்ட காதலனை மருத்துவமனையிலே திருமணம் செய்த காதலி http://tamilkurinji.co.in/mobile/news_details.php?/புற்றுநோயால்/பாதிக்கபட்ட//காதலனை///மருத்துவமனையிலே//திருமணம்/செய்த/காதலி/&id=40300 புற்றுநோயால் பாதிக்கப்பட்ட காதலனை மருத்துவமனையிலேயே காதலி திருமணம் செய்துகொண்ட நெகிழ்ச்சியான சம்பவம் அரங்கேறியுள்ளது. இங்கிலாந்தில் தான் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

இங்கிலாந்தைச் சேர்ந்த ரே கெர்ஷா என்பவருக்கும் ட்ரேசிக்கும் அடுத்த ஆண்டு திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் திடீரென ரே கெர்ஷாவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கெர்ஷாவை  பரிசோதித்த மருத்துவர்கள் அவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக கூறினர்.

மேலும் புற்றுநோய் முற்றிய நிலையில் இருந்ததால், கெர்ஷா இன்னும் சில நாட்கள் மட்டுமே உயிர் வாழ்வார் எனவும் மருத்துவர்கள் கூறினர்.

இதனால் ரே கெர்ஷா மற்றும் ட்ரேசி குடும்பத்தினர் கடும் சோகத்தில் மூழ்கினர். திருமணம் நிச்சயிக்கப்பட்டவுனேயே ரே கெர்ஷாயும், ட்ரேசியும் ஒருவரை ஒருவர் ஆழமாக காதலிக்கத் தொடங்கினர்.

காதலர்களாக பல இடங்களில் சுற்றித்திரிந்த இந்த ஜோடிகளுக்கு புற்றுநோய் குறித்த தகவல் பேரதிர்ச்சியாக இருந்தது.

இருப்பினும் மணமகள் ட்ரேசி மனத் தளராமல் ஒரு ஆச்சரியத்தக்க முடிவை எடுத்தார்.

அது, ஏற்கனவே நிச்சயிக்கப்பட்டது போல கெர்ஷாவை திருமணம் செய்து கொள்வது. இந்த முடிவு ட்ரேசியின் பெற்றோர்களுக்கு அதிர்ச்சி அளித்தாலும் அதை வரவேற்றனர்.

இதனிடையே கெர்ஷாவினால் மருத்துவமனையிலிருந்து வெளியே வர முடியாது என்பதால், மருத்துவமனையிலேயே இருவருக்கும் திருமணம் நடத்தப்பட்டது.

இதற்கான ஏற்பாடுகள் வெறும் 24 மணி நேரத்தில் செய்யப்பட்டன. கெர்ஷாவின் நிலை குறித்து அறிந்த பல சமூக ஆர்வலர்கள், இந்த திருமணத்திற்கான ஏற்பாடுகளையும், பரிசுப் பொருட்களையும் அன்பளிப்பாக அளித்தனர்.

இன்னும் சில நாட்கள் மட்டுமே உயிர் வாழப்போவது தெரிந்தாலும், இந்த திருமணம் கெர்ஷாவுக்கு மன நிம்மதியை அளிக்கும் என மணமகள் ட்ரேசி தெரிவித்துள்ளார்.

பல ஆண்டுகள் காதலித்தவர்களை கழட்டி விட்டு செல்லும் காதலர்களுக்கு மத்தியில் புற்றுநோய் இருப்பது தெரிந்தும் கெர்ஷாவை கரம் பிடித்த ட்ரேசியின் காதல் மெய்சிலிர்க்க வைக்கிறது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. tamilkurinji editor Tue, 23 May 2017 06:44:22 +0000 குழந்தைகளுக்கு முதல் 1 வயது வரை பழச்சாறு கொடுக்ககூடாது - ஆய்வில் தகவல் http://tamilkurinji.co.in/mobile/news_details.php?/குழந்தைகளுக்கு/முதல்/1/வயது/வரை///பழச்சாறு/கொடுக்ககூடாது/-/ஆய்வில்/தகவல்/&id=40291
பிறந்த குழந்தைகளுக்கு முதல்1 வருடத்திற்குள் பழச்சாறுகளை கொடுக்க கூடாது என்று அமெரிக்க மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

2001-க்கு பிறகு மாற்றியமைக்கப்பட்டுள்ள பிறந்த குழந்தைகளுக்கான உணவு முறை குறித்த பட்டியலில் இந்த புதிய கட்டுப்பாடு சேர்க்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்புக்கு முன்பு வரை பிறந்த குழந்தைகளுக்கு 6 மாதம் வரை பழச்சாறு கொடுக்க கூடாது என்று சொல்லப்பட்டிருந்தது. அது தற்போது மேலும் 6 மாதங்கள் நீட்டிப்பு செய்யப்பட்டு ஒரு வருடத்திற்கு பிறந்த குழந்தைகளுக்கு பழச்சாறு கொடுக்கக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பழங்களை அப்படியே சாப்பிடுவதில் இருக்கும் நண்மை, அதனை சாறாக பிழிந்து குடிப்பதில் கிடைப்பதில்லை என்று மருத்துவர் குழு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பிறந்த குழந்தைக்கு முதல் ஓராண்டில் தாய்ப்பாலில் கிடைக்கக் கூடிய புரதச்சத்து உள்ளிட்ட சத்து வேறு எந்த வகையான உணவு வகைகளிலும் கிடைப்பதில்லை என்றும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஒரு வருடத்திற்கும் குறைவாக உள்ள குழந்தைகளுக்கு பழச்சாறு கொடுக்கப்படும் போது வளர்ந்த பிறகு அவர்களுக்கு பற்சிதைவு உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படுவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

மேலும் ஒரு வயது முதல் 12 வயது வரை அதிக அளவு பழங்களை குழந்தைகளை உண்ண வேண்டும். அப்போது கூட பழங்களை கடித்து உண்பதே சிறந்தது என்றும் அமெரிக்க மருத்துவர் குழு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. tamilkurinji editor Mon, 22 May 2017 11:31:55 +0000 புகைப்படம் நன்றாக வருவதற்காக தனது திருமண உடையில் தீவைத்து கொண்ட மணப்பெண் http://tamilkurinji.co.in/mobile/news_details.php?/புகைப்படம்/நன்றாக/வருவதற்காக/தனது/திருமண/உடையில்/தீவைத்து/கொண்ட/மணப்பெண் /&id=40280

சீன மணப்பெண் ஒருவர், புகைப்படம் நன்றாக வருவதற்காக தனது திருமண உடையில் தீவைத்து கொண்ட வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

வாழ்க்கையில் திருமணம் என்பது மிக முக்கியமான ஒன்று. இந்த திருமண நிகழ்ச்சியை சிறந்த புகைப்பட கலைஞர்கள் சிறந்த முறையில் படம் பிடித்து அதனை நமக்கு இனிமையான நினைவுகளாக அமைய ஆல்பம் அமைத்து தருவார்கள்.

இங்கே ஒரு பெண் தனது திருமணம் புகைப்படம் நன்றாக வருவதற்காக மிக ஆபத்தான முறையை கடைபிடித்து உள்ளார்.

சீன மீடியாக்கள் தெரிவித்த தகவலின்படி சீனாவைச் சேர்ந்த ஒரு மணப்பெண் தனது மணப்பெண் உடையுடன் புகைப்படம் சிறப்பாக வர வேண்டும் என போட்டாகிராபரை கேட்டுக்கொண்டு உள்ளார். அதற்கான் போட்டா ஷூட், ஒரு காட்டு பகுதியில் எடுக்கப்பட்டது.
சிறப்பான புகைப்படம் வரவேண்டி மணப்பெண்ணும் போட்டாகிராபரும் சேர்ந்து மண்ப்பெணிண் திருமண உடையில் தீவைத்து உள்ளனர்.

புகைப்படத்திற்கு லைட்டிங் நன்றாக கிடைக்க இதை செய்து உள்ளனர். ஆனால் விளைவு விபரீதமாக மாறி விட்டது. தீ மளமளவென உடை முழுவதும் பரவியுள்ளது. தீ எரிவதை கண்ட மணப்பெண் அலறியடித்து ஓடி உள்ளார். உடனடியாக அக்கம் பக்கம் இருந்தவர்கள் சேர்ந்து தீயை அணைத்து உள்ளனர். தற்போது இந்த வீடியோ வைரலாகி உள்ளது.

tamilkurinji editor Sat, 20 May 2017 06:50:37 +0000 அமெரிக்காவின் நியூயார்க்கில் 150 ஆண்டுகளுக்கு பிறகு பிரபல சர்க்கஸ் நிகழ்ச்சி http://tamilkurinji.co.in/mobile/news_details.php?/அமெரிக்காவின்/நியூயார்க்கில்/150/ஆண்டுகளுக்கு/பிறகு//பிரபல/சர்க்கஸ்/நிகழ்ச்சி/&id=40279 அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நூற்றி ஐம்பது ஆண்டுகளுக்கு பிறகு பிரபல சர்க்கஸ் நிறுவனத்தின் பிரமாண்டமான சர்க்கஸ் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

நியூயார்க் லாங் தீவில் நடைபெற உள்ள பிரபல ரிங்க்ளின் ப்ரோ சர்க்கஸ் நிகழ்ச்சிக்கான ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

1968-ம் ஆண்டு முதல் உலகெங்கிலும் உள்ள 284 நகரங்களில் 48,000க்கும் மேலான நிகழிச்சிகளை அரங்கேற்றியுள்ளது. வரும் ஞாயிறு அன்று நடைபெற உள்ள இந்த நிகழ்ச்சிக்கு சர்கஸ் யானைகள் அருமையாக பயிற்சி அளிக்கப்பட்டும், கலைஞர்கள், கோமளிகள் ஒத்திகை மேற்கொண்டும் வருகின்றனர்.

சர்க்கஸ் பார்க்க வரும் பார்வையாளர்கள் எண்ணிக்கைகள் குறைந்து வருவதால் சர்க்கஸ் நிறுவனத்துக்கு பொருளாதார ரீதியாக இழப்பு ஏற்படுகிறது.

இதனால் சர்க்கஸ் நிறுவன உரிமையாளர்கள் நிறுவனத்தை மூடிவிட முடிவு செய்துள்ளனர். வருங்கால தலைமுறைக்கு இதுபோன்ற பொழுதுபோக்கு நிகழ்ச்சியை பற்றி அறிவதற்கான வாய்ப்புகள் இல்லை என்று கலைஞர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

நூற்றி ஐம்பது ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற இருக்கும் இந்த கடைசி நிகழ்ச்சியைக் காண பல்லாயிரக்கணக்கான மக்கள் வருவார்கள் என்று எதிர்பாக்கப்படுகிறது.

tamilkurinji editor Sat, 20 May 2017 06:43:08 +0000 குல்பூஷண் சிங் ஜாதவ் மரண தண்டனைக்கு இடைக்கால தடை: சர்வதேச நீதிமன்றம் உத்தரவு http://tamilkurinji.co.in/mobile/news_details.php?/குல்பூஷண்/சிங்/ஜாதவ்/மரண/தண்டனைக்கு/இடைக்கால/தடை:/சர்வதேச/நீதிமன்றம்/உத்தரவு/&id=40264 குல்பூஷண் சிங் ஜாதவ் வழக்கில் இறுதித் தீர்ப்பு அளிக்கும் வரை தூக்கு தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் என்று பாகிஸ்தான் அரசுக்கு சர்வதேச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்திய கடற்படையில் அதிகாரியாக பணியாற்றியவர் குல்பூஷண் சிங் ஜாதவ் . இவர், கடந்த ஆண்டு மார்ச் மாதம் 3-ம் தேதி பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில், வேவு பார்த்ததாக அந்நாட்டு ராணுவத்தால் கைது செய்யப்பட்டார்.

இந்தியாவின் ‘ரா’ அமைப்பிற்கு உளவு பார்ப்பதற்காக ஈரானில் இருந்து பாகிஸ்தானுக்குள் சட்டவிரோதமாக ஊடுருவியதாகவும், பயங்கரவாத தாக்குதலுக்கு சதித்திட்டம் தீட்டியதாகவும் பாகிஸ்தான் அரசாங்கம் அவர் மீது குற்றம் சாட்டியது.

இது தொடர்பான வழக்கில் குல்பூஷண் ஜாதவுக்கு பாகிஸ்தான் ராணுவ கோர்ட்டு கடந்த மாதம் 10-ந் தேதி மரண தண்டனை விதித்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த இந்திய அரசு நெதர்லாந்து நாட்டின் தி ஹேக் நகரில் ஐ.நா. அமைப்பின்கீழ் செயல்பட்டு வரும் சர்வதேச கோர்ட்டில் கடந்த 8-ந் தேதி வழக்கு தொடர்ந்தது. குல்பூஷண் ஜாதவுக்கு மரண தண்டனையை பாகிஸ்தான் நிறைவேற்றிவிட்டதோ என்ற சந்தேகமும் எழுகிறது என்று இந்தியா கவலையும் தெரிவித்தது. இதனால், மரண தண்டனையை நிறுத்தி வைக்கும்படி சர்வதேச கோர்ட்டு பாகிஸ் தானுக்கு உத்தரவிட்டது.

இதைத் தொடர்ந்து இந்த வழக்கில், இரு நாடுகளும் தங்களுடைய வாதத்தை சர்வதேச கோர்ட்டில் முன் வைத்தன.

இந்தியா வாதிடுகையில், “வியன்னா பிரகடனத்தை பாகிஸ்தான் மீறி இருக்கிறது. இதுபற்றி இந்திய தூதரகத்துக்கு தெரிவிக்கப்படவில்லை. எவ்வித ஆதாரமும் இன்றி குல்பூஷண் ஜாதவுக்கு பாகிஸ்தான் ராணுவ கோர்ட்டு மரண தண்டனை விதித்து உள்ளது. அவரை உடனே விடுதலை செய்ய உத்தரவிட வேண்டும்” என்று குறிப்பிட்டது. பாகிஸ்தான் தரப்போ, “வியன்னா பிரகடனத்தில் பயங்கரவாத தாக்குதலுக்கு திட்டமிடுவதற்காக உளவு பார்ப்பது தொடர்பாக சம்பந்தப்பட்ட நாட்டின் தூதரகத்தை அணுகுவது குறித்து எதுவும் கூறப்படவில்லை.

இந்த விவகாரத்தை பொறுத்தவரை சர்வதேச கோர்ட்டை இந்தியா அரசியல் மேடையாக்கிவிட்டது” என்று வாதிட்டது. இந்த வழக்கில், இரு தரப்பு வாதங்களும் கடந்த திங்கட்கிழமை முடிவடைந்தது. இதைத்தொடர்ந்து இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

வியன்னா ஒப்பந்தப்படி இவ்விவகாரத்தில் சர்வதேச நீதிமன்றத்திற்கு சட்ட அதிகாரம் உள்ளது. சர்வதேச நீதிமன்றம் தலையிட கூடாது என்ற பாகிஸ்தான் வாதத்தை சர்வதேச நீதிமன்றம் நிராகரித்தது.

பாகிஸ்தான் சட்டத்தின்படி குல்பூஷண் ஜாதவ் அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு எதிராக 40 நாட்களுக்குள் மேல் முறையீடு செய்யலாம், ஆனால் இதுவரையில் அவரது தரப்பில் முறையீடு செய்யப்பட்டதா என்பது தெரியவரவில்லை. குல்பூஷண் ஜாதவின் தயாரின் முறையீடு மற்றும் மனுவானது பாகிஸ்தான் அரசிடம் ஒப்படைக்கப்பட்டது என இந்தியா தெரிவித்து உள்ளது.

வியன்னா ஒப்பந்தப்படி இந்தியா குல்பூஷண் ஜாதவ்வை சந்திக்க தூதரக அணுகுமுறைக்கு பாகிஸ்தான் அனுமதி வழங்க வேண்டும்.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் குல்பூஷண் ஜாதவ் இந்திய குடிமகன் என்பதை உறுதி செய்து உள்ளன. வியன்னா மாநாட்டின் கீழ் இந்தியாவால் பெறப்பட்ட உரிமைகள் ஏற்கத்தக்கவை. இவ்விவகாரம் தொடர்பாக அடுத்தக்கட்ட உத்தரவு வரும் வரையில் பாகிஸ்தான் குல்பூஷண் ஜாதவிற்கு மரண தண்டனை நிறைவேற்றப்படாது என்பதை உறுதி செய்ய வேண்டும் என சர்வதேச நீதிமன்றத்தில் 11 நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் உத்தரவிட்டது.

tamilkurinji editor Thu, 18 May 2017 15:03:44 +0000 வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை http://tamilkurinji.co.in/mobile/news_details.php?/வடகொரியா/மீண்டும்/ஏவுகணை/சோதனை/&id=40256 கிழக்கு ஆசிய நாடுகளான வடகொரியா மற்றும் தென் கொரியா இடையே கடும் மோதல் போக்கு உள்ளது. உலக நாடுகள் மற்றும் ஐ.நா.,வின் எச்சரிக்கைகளை மீறி, வடகொரியா, தொடர்ந்து பல்வேறு ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது.

தென்கொரியாவின் புதிய அதிபராக சமீபத்தில் தேர்வு செய்யப்பட்ட மூன் ஜேயின், 'வட கொரியாவுடன் சுமுகமான முறையில் அமைதி பேச்சு நடத்த தயாராக உள்ளோம்' என, அறிவித்திருந்தார்.

இந்நிலையில், வடகொரியா நேற்று, மற்றொரு ஏவுகணை சோதனையை நடத்தியதை, அமெரிக்க, ஜப்பான், தென்கொரியா ஆகிய நாடுகள் உறுதி செய்துள்ளன. .

இது எந்த வகை  ஏவுகணை என்பது குறித்த தகவல்கள் கிடைக்கவில்லை ஆனால், நேற்று நடந்த சோதனை, கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை இல்லை என்பது மட்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது tamilkurinji editor Mon, 15 May 2017 07:14:30 +0000 பாகிஸ்தான் ஐகோர்ட்டில் இந்திய தூதரக அதிகாரியின் செல்போன் பறிப்பு http://tamilkurinji.co.in/mobile/news_details.php?/பாகிஸ்தான்/ஐகோர்ட்டில்/இந்திய/தூதரக/அதிகாரியின்/செல்போன்/பறிப்பு/&id=40238 பாகிஸ்தானில் கோர்ட்டில் இந்திய தூதரக உயர் அதிகாரியின் மொபைல் போன் பறிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவை சேர்ந்த உஸ்மா என்ற பெண், பாகிஸ்தானில் துப்பாக்கி முனையில் திருமணம் செய்து வைக்கப்பட்டதாக புகார் கூறினார். இது தொடர்பாக கோர்ட்டில் வழக்கு தொடர்ந்த அவர், இந்திய தூதரகத்தில் தஞ்சம் புகுந்துள்ளார்.

இந்த வழக்கு தொடர்பான விசாரணையானது இன்று இஸ்லாமாபாத் ஐகோர்ட்டில் நடந்தது. அப்போது உஸ்மா தரப்பில் அவருடைய வழக்கறிஞர் மாலிக் ஷா நவாஸ் நூன் மற்றும் இந்திய தூதரக அதிகாரி பியூஸ் சிங் கோர்ட்டுக்கு வந்தனர்.

அங்கு பியூஸ் சிங்கின் போனை  ஊழியர்கள் பறிமுதல் செய்தனர். அப்போது பியூஸ் சிங், தான் மொபைலில் எஸ்எம்எஸ் அனுப்பியதாகவும், போட்டோ எடுக்கவில்லை எனக்கூறினார். பின்னர் வழக்கு விசாரணை முடிந்த பின்னர் போன் திருப்பி கொடுக்கப்பட்டது. இதற்காக அபராதம் மற்றும் நடவடிக்கை எடுக்கவில்லை. பியூஸ் சிங் கோர்ட் நடவடிக்கைகளை வீடியோ எடுத்ததாக  அந்நாட்டு பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதில் பெரிய பிரச்னை ஏதுமில்லை. அவருக்கு விதிமுறை தெரிந்து இருக்க வாய்ப்பு இல்லை, தவறுதலாக செல்போனை உள்ளே  எடுத்து வந்து உள்ளார் என தகவல்கள் தெரிவித்து உள்ளன. எல்லையில் இந்திய வீரர்கள் கொலை மற்றும் குல்பூஷண் ஜாதவ் விவகாரத்தினால் இருதரப்பு உறவு மோசமாகி உள்ள நிலையில் இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

tamilkurinji editor Fri, 12 May 2017 13:10:49 +0000 2 நாள் இலங்கை பயணம்: பிரதமர் மோடி கொழும்பு சென்றார் http://tamilkurinji.co.in/mobile/news_details.php?/2/நாள்/இலங்கை/பயணம்:/பிரதமர்/மோடி/கொழும்பு/சென்றார்/&id=40235 2 நாள் அரசு முறை பயணமாக இலங்கை சென்றுள்ள பிரமதர் மோடி, இலங்கை அதிபர் சிறிசேனாவை சந்தித்து பேசினார். இலங்கையில் புத்த மத மாநாட்டில் கலந்து கொள்வதற்காக நேற்று கொழும்பு சென்றடைந்த மோடி, இலங்கை பிரதமர் ரணில்விக்ரம சிங்கேவை சந்தித்து பேசினார். இரு நாடுகளுன் நல்லுரவை மேம்படுத்தும் வகையில் பேச்சுவார்த்தை அமைந்ததாக தெரிவித்துள்ளார். எனினும் ஒப்பந்தங்கள் எதுவும் கையெழுத்தாகவில்லை. இதையடுத்து மைத்ரேயபால் சிறிசேனாவையும் சந்தித்து பேசினார். சந்திப்பு குறித்து இலங்கை அதிபர் சிறிசேனா, டிவிட்டர் பக்கத்தில் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். காலையில் 120 ஆண்டுகள் பழமையான கங்கராமையா கோவிலின் அங்கமாக திகழும் சீமமாளாக புத்த கோவிலுக்கு மோடி சென்றுள்ளார்.

கோவிலின் கருவறைக்குள் சென்ற அவர், அங்கு விளக்கு ஏற்றி வழிபட்டார். இலங்கையின் பாரம்பரிய முறைப்படி நடனமாடி அவரை உற்சாகத்துடன் வரவேற்றனர். கண்டியில் இந்தியா வம்சாவழியைச் சேர்ந்த தமிழ் மக்களுடன் மோடி கலந்துரையாடவுள்ளார். இந்தியாவின் நிதி உதவியுடன் கட்டப்பட்டுள்ள திக்கோயா மருத்துவமனையையும் அவர் திறந்து வைக்கிறார். இலங்கையில் தொடங்கும் சர்வதேச புத்த பூர்ணிமா விழா, வரும் 14ம் தேதி வரை நடைபெறுகிறது. இம்மாநாட்டில் சிறப்பு விருந்தினராக மோடி கலந்துகொள்கிறார்.
tamilkurinji editor Fri, 12 May 2017 05:49:48 +0000 தென் கொரியாவின் புதிய அதிபராகிறார் மூன் ஜே-இன் http://tamilkurinji.co.in/mobile/news_details.php?/தென்/கொரியாவின்/புதிய/அதிபராகிறார்/மூன்/ஜே-இன்/&id=40215 முன்னாள் மனித உரிமை வழக்கறிஞரும், இடது சாரியுமான மூன் ஜேய்-இன் கொரிய அதிபர் தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்றுள்ளார்.
வெற்றிக் கொண்டாட்டங்களுக்கு மத்தியில் ஆதரவாளர்களிடம் அவர் பேசுகையில், “அனைத்து தென் கொரியர்களுக்கும் அதிபராக இருப்பேன்” என்றார்.

சியோலின் வாங்வாமுன் சதுக்கத்தில் பல மாதங்களாக முன்னாள் பெண் அதிபர் பார்க் குயேன் - ஹே வுக்கு எதிராக பெரும் போராட்டங்கள் நடந்து வந்தன. இன்று அதே இடத்தில் ஆதரவாளர்கள் மத்தியில் பேசிய மூன் இவ்வாறு தெரிவித்தார். பார்க் குயேன் மீது ஊழல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.

வட கொரியா -அமெரிக்கா இடையே போர் மூளும் அபாயம் இருக்கும் இந்நிலையில் தென் கொரியாவில் தேர்தல் நடைபெற்றது. சீனா தென் கொரியாவில் அமெரிக்க தாட் ஏவுகணை எதிர்ப்பு கலங்களை நிறுத்த எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இப்பிரச்சினையை ராஜதந்திர அளவில் கையாள விரும்புகிறார் மூன். tamilkurinji editor Wed, 10 May 2017 06:46:07 +0000 சீன சுரங்கப்பாதையில் பள்ளி பேருந்து தீப்பிடித்து 11 குழந்தைகள் உயிரிழப்பு http://tamilkurinji.co.in/mobile/news_details.php?/சீன/சுரங்கப்பாதையில்/பள்ளி/பேருந்து/தீப்பிடித்து/11/குழந்தைகள்/உயிரிழப்பு/&id=40208 சீனாவின் கிழக்குப் பகுதியில் உள்ள ஷாண்டாங் மாகாணத்தின் வெய்ஹாய் நகரில் உள்ள சர்வதேச மழலையர் பள்ளிக்கு குழந்தைகளை ஏற்றிக்கொண்டு ஒரு பஸ் இன்று புறப்பட்டு சென்றது.

இந்த பஸ், சுரங்கப்பாதைக்குள் சென்று கொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. அத்துடன் பஸ் தீப்பிடித்து எரிந்தது.

இந்த கோர விபத்தில் 5 தென்கொரிய குழந்தைகள், 6 சீனக் குழந்தைகள் என 11 மாணவர்களும், பஸ் டிரைவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக உள்ளூர் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

விபத்து நடந்த பகுதியில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்களை உள்ளூர் ஊடகங்கள் வெளியிட்டன. அதில், சுரங்கப் பாதையின் நுழைவு வாயிலில் இருந்து கரும்புகை வெளியேறுவது தெளிவாகத் தெரிந்தது.

ஆபத்து விளைவிக்கும் வகையில் வாகனம் ஓட்டுவதை கட்டுப்படுத்த அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

ஆனாலும், விபத்துக்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன. உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள தகவலின்படி, சீனாவில் 2013ம் ஆண்டு 2.5 லட்சம் மக்கள் சாலை விபத்துக்களில் உயிரிழந்துள்ளனர். tamilkurinji editor Tue, 09 May 2017 13:28:55 +0000 பிபிசி தொலைக்காட்சி நிகழ்ச்சியின்போது உரிமையாளரை கடித்து குதறிய நாய் http://tamilkurinji.co.in/mobile/news_details.php?/பிபிசி/தொலைக்காட்சி/நிகழ்ச்சியின்போது/உரிமையாளரை/கடித்து/குதறிய//நாய்/&id=40141 இங்கிலாந்து நாட்டில் பிபிசி தொலைக்காட்சி நிகழ்ச்சியின்போது உரிமையாளர் ஒருவரை அவரது வளர்ப்பு நாய் கொடூரமாக கடித்துக் கொன்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்து தலைநகரமான லண்டனில் உள்ள உட் கிரீன் பகுதியில் மரியோ பெரிவொய்டோஸ்(41) என்ற நபர் வசித்து வந்துள்ளார்.இவரது வீட்டில் மேஜர் எனப் பெயரிடப்பட்ட வளர்ப்பு நாய் ஒன்று இருந்துள்ளது. பல்வேறு காலக்கட்டங்களில் உரிமையாளருக்கு நாய் உதவியாக இருந்து வந்துள்ளது.

இந்நிலையில், சில தினங்களுக்கு முன்னர் பிபிசி செய்தி நிறுவனத்தை சேர்ந்த செய்தியாளருக்கு ஒரு நிகழ்ச்சிக்காக அவரது வீட்டிற்கு சென்றுள்ளனர்.
நிகழ்ச்சியை தொடங்க ஏற்பாடுகள் நடந்து வந்த நிலையில், நாய் திடீரென வெறிப் பிடித்ததுபோல் குரைத்துள்ளது.

நாயை சாந்தப்படுத்த உரிமையாளர் போராடியுள்ளார். ஆனால், அசுரத்தனமாக மாறிய அந்த நாய் உரிமையாளர் மீது பாய்ந்து அவரது கழுத்தை கடித்து குதறியுள்ளது.

இக்காட்சியைக் கண்ட ஊடகவியாளர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். பின்னர், உரிமையாளரை காப்பாற்ற போராடியுள்ளனர்.

ஆனால், கழுத்துப் பகுதி முழுவதையும் நாய் கடித்து குதறியதில் ரத்தம் அதிகளவில் வெளியேறியுள்ளது.உரிமையாளரை காப்பாற்றிய பத்திரிகையாளர்கள் அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர்.

ஆனால், தீவிர சிகிச்சை அளித்தும் உரிமையாளர் மறுநாள் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இத்தாக்குதல் குறித்து பிபிசி நிறுவனம் எவ்வித தகவல்களையும் வெளியிடவில்லை.மேலும், இச்சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். tamilkurinji editor Thu, 30 Mar 2017 13:35:56 +0000 அல்லா என பெயரிட்ட குழந்தைக்கு பிறப்பு சான்றிதழ் வழங்க அமெரிக்க அதிகாரிகள் மறுப்பு http://tamilkurinji.co.in/mobile/news_details.php?/அல்லா/என/பெயரிட்ட/குழந்தைக்கு/பிறப்பு/சான்றிதழ்/வழங்க/அமெரிக்க/அதிகாரிகள்/மறுப்பு/&id=40137 அமெரிக்காவில் 'அல்லா' எனப் பெயரிடப்பட்ட குழந்தைக்கு பிறப்பு சான்றிதழ் வழங்க மறுத்துள்ள அதிகாரிகளை எதிர்த்து பெற்றோர் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

அமெரிக்காவில் உள்ள ஜோர்ஜியா மாகாணத்தில் எலிசபெத் ஹேண்டி மற்றும் பிலால் வால் என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர்.

இவர்களுக்கு 22 மாதக் குழந்தை ஒன்று உள்ளது. சமீபத்தில் இந்தக் குழந்தைக்கு ஷாலியாக்  கிரேஸ்புல்  லொரரினா அல்லாஹ் (ZalyKha Graceful Lorraina Allah) எனப் பெயர் சூட்டினர்.

ஆனால், இந்தக் குழந்தையின் பெயரின் இறுதியில் 'அல்லா' என்ற பெயர் சேர்க்கப்பட்டுள்ளதால் குழந்தைக்கு பிறப்பு சான்றிதழ் வழங்க அதிகாரிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

'குழந்தைக்கு தந்தை அல்லது தாயின் பெயரை இறுதியில் சேர்க்கலாம். ஆனால், அல்லா என்ற பெயர் அரபி மொழியில் உள்ள வார்த்தை.

இதை பயன்படுத்துவது ஜோர்ஜியா மாகாண சட்டவிதிகளுக்கு எதிரானது' என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதிகாரிகளின் கருத்தை பெற்றோர் கடுமையாக எதிர்த்துள்ளனர்.

'அல்லா என்ற பெயர் புனிதமானது. இதை எங்களுடைய குழந்தைக்கு சூட்டுவதற்கு தடை விதிப்பது எங்களுடைய அடிப்படை உரிமைகளை பறிப்பதாக உள்ளது. பெற்றோரின் விருப்பப்படி குழந்தைக்கு பெயர் சூட்டுவது கூட குற்றமா?' எனப் பெற்றோர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

மனித உரிமைகள் மற்றும் சுதந்திரத்தை காக்கும் அமைப்பு ஒன்றின் ஆலோசனைப்படி தற்போது பெற்றோர் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்துள்ளனர். tamilkurinji editor Tue, 28 Mar 2017 12:34:52 +0000 அமெரிக்காவில் மகனுடன் இந்திய பெண் கொல்லப்பட்ட விவகாரம் http://tamilkurinji.co.in/mobile/news_details.php?/அமெரிக்காவில்/மகனுடன்/இந்திய/பெண்/கொல்லப்பட்ட/விவகாரம்/&id=40125 அமெரிக்காவில் இந்திய பெண் பொறியாளர் மகனுடன் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் மூன்று நாளுக்கு மேலாகியும் துப்பு துலங்காததால் மத்திய அரசு குழு அமைத்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தனது கணவர் மற்றும் குழந்தையுடன் நியூஜெர்சி மாகாணத்தில் வசித்து வந்த, ஆந்திராவை சேர்ந்த சசிகலா கடந்த வியாழக்கிழமை இரவு கொல்லப்பட்டார். அவரது 7 வயது மகனும் கொல்லப்பட்டான்.

பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இந்த வழக்கில், கொலை சம்பவம் நடந்து 3 நாட்களாகியும் துப்பு துலங்கவில்லை. இந்நிலையில் மத்திய அரசு சர்வதேச நீதிமன்றம் மூலம் தீர்வு காண வேண்டும் என சசிகலாவின் குடும்பத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.

இது குறித்து செய்தியாளரிடம் பேசிய சசிகலாவின் குடும்ப வழக்கறிஞர் ராகவராவ், சசிகலா கொலையின் பின்னணியில் சர்வதேச பிரச்சனைகள் உள்ளன.

தனது கணவருக்கு அலுவலகத்தில் பணியாற்றும் பெண்ணுடன் தொடர்பு உள்ளது என்பதை சசிகலா ஏற்கனவே பெற்றோருடன் தெரியப்படுத்தி உள்ளார் என்றார். இதையும் ஆதாரமாக கொண்டு விசாரிக்க வேண்டும் என்றார்.

மேலும் மத்திய அரசு சர்வதேச நீதிமன்றம் மூலம் விரைந்து தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். இவ்விவகாரத்தில் மோடி அரசு குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

கணவர் ஹனுமந்த் ராவின் நடவடிக்கையில் சந்தேகம் உள்ளதாக ஏற்கனவே தெரிவித்த சசிகலா, இதில் தாம் கொல்லப்படலாம் என அச்சம் தெரிவித்துள்ளதாகவும் கூறியுள்ளனர்.

ஏற்கனவே ட்ரம்ப் அரசின் பல்வேறு நடவடிக்கைகளால் அதிருப்தி அடைந்துள்ள அமரிக்க வாழ் இந்தியர்கள் மத்தியில், சசிகலா கொலை விவகாரம் கூடுதல் அச்சத்தை உருவாக்கியுள்ளது.

tamilkurinji editor Sun, 26 Mar 2017 13:54:59 +0000 7 வயது சிறுவனின் உடலில் வெடிகுண்டு கட்டிவிட்ட தீவிரவாதிகள் http://tamilkurinji.co.in/mobile/news_details.php?/7/வயது/சிறுவனின்/உடலில்/வெடிகுண்டு/கட்டிவிட்ட/தீவிரவாதிகள்/&id=40118 ஈராக் நாட்டில் வசித்து வரும் 7 வயது சிறுவனின் உடலில் வெடிகுண்டுகளை கட்டி ஐ.எஸ் தீவிரவாதிகள் தாக்குதலுக்கு அனுப்பியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராக்கில் உள்ள மொசூல் நகரில்  ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், கடந்த மார்ச் 18-ம் திகதி அன்று சந்தேகத்திற்குரிய 7 வயது சிறுவனை ராணுவ வீரர்கள் பிடித்துள்ளனர்.

கால்பந்து வீரர்கள் அணியும் உடையில் இருந்த சிறுவனிடம் தவறு இருப்பதை உணர்ந்த ஓர் ராணுவ வீரர் அவனது உடைகளை நீக்கியுள்ளார்.

அப்போது, சிறுவனின் உடலை சுற்றி வெடிகுண்டு ஒன்று கட்டப்பட்டிருந்ததை கண்டு ராணுவ வீரர் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
பின்னர், சிறுவனுக்கு தைரியம் கொடுத்த வீரர் அவனது உடைகளை முழுவதுமாக நீக்கிவிட்டு வெடிகுண்டை செயலிழக்க முயன்றுள்ளார்.

வெடிகுண்டில் இணைக்கப்பட்டிருந்த கம்பிகளை துண்டித்துவிட்டு அவற்றை முழுமையாக நீக்கி சிறுவனை காப்பாற்றியுள்ளார்.

சிறுவனிடம் விசாரணை செய்தபோது ஐ.எஸ் தீவிரவாதிகள் அவனை கடத்தி தாக்குதல் நடத்த தயார்ப்படுத்தியதும் தெரியவந்துள்ளது.சிறுவனை மீட்ட ராணுவ வீரர்கள் அவனது குடும்பத்துடன் சேர்த்து வைத்துள்ளனர். tamilkurinji editor Fri, 24 Mar 2017 05:43:56 +0000